நதிகளை பாதுகாக்க சட்டம் அவசியம்! : விழிப்புணர்வு பேரணியில் சத்குரு பேச்சு

|

Details:

கோவை: ''நதிகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் அவசியம். தமிழகத்தில் துவங்கும் விழிப்புணர்வுப் பேரணியை நாடே பார்க்கிறது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு பேசினார். 'நதிகளை மீட்போம்' இயக்க விழிப்புணர்வு பேரணி கோவையில் துவங்கி, 16 மாநிலங்கள் வழியாக, 7000 கி.மீ., கடந்து, அக்., 2ல் டில்லியை அடைகிறது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, பேரணியை முன்னின்று நடத்தி, தானே வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்.
பேரணியின் துவக்க விழா, கோவை, வ.உ.சி., மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், சத்குரு பேசியதாவது: நதிகளை மீட்பதற்கான இந்த விழிப்புணர்வு இயக்கம், வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும். நம் முயற்சி, சட்டமாக மாற வேண்டும். நம் நாட்டில் பல்வேறு மொழி, இனம், கட்சிகள் உள்ளன. அதை எல்லாம் மறந்து, நதிகளை மீட்க ஒன்றிணைய வேண்டும்.
இதற்கான முயற்சிகள் தற்போது துவங்கினாலும், இதன் பலன் கிடைக்க, 15 முதல் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை நாம் இருப்போமோ இல்லையோ; ஆனால், நோக்கம் நிறைவேற வேண்டும். நம் முன்னோர் நமக்கு மண்ணையும், நீரையும் நதியையும், இயற்கையையும் கொடுத்துச் சென்றனரோ, அதேபோன்று, நாமும் அடுத்த தலைமுறைக்கு, அனைத்து இயற்கை வளங்களையும் திரும்பத் தர வேண்டும். நான் களத்தில் இறங்கி, இயற்கையை மீட்க பாடுபடுகிறேன்; நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள விவசாய நிலங்களில், 25 சதவீதம் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு பாழ்பட்டு கிடக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பே காரணம். இது தொடர்ந்தால், சூழல் பாதிப்பின் பரப்பு, 60 சதவீதமாக உயரும் அபாயமுள்ளது. கடந்த, 12 ஆண்டுகளில் நம் நாட்டில் நீரில்லாததாலும், வறட்சி காரணமாகவும், மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதைத் தடுக்க, நதிகளை பாதுகாக்க சட்டம் அவசியம். தமிழகத்தில் துவங்கும், நதிகளை மீட்பதற்கான விழிப்புணர்வு பேரணியை நாடே பார்க்கிறது. இவ்வாறு சத்குரு பேசினார்.

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''ஈஷா மையத்தின், நதிகள் மீட்பு முயற்சிக்கு அரசு துணை நிற்கும்,'' என்றார்.
பஞ்சாப் கவர்னர், வி.பி.சிங் பத்நோர் பேசும் போது, ''இந்த விழிப்புணர்வு இயக்கம், மாபெரும் மக்கள் எழுச்சியாக மாற வேண்டும். சத்குரு முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்,'' என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக், பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ், கலெக்டர் ஹரிகரன், மகேந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குனர் விஜயராம் நக்ரா, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், எம்.பி., நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பேரணியை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

'இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும்' : மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பேசியதாவது: இயற்கையோடு ஒன்றி வாழ மனிதன் பழக வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பால், நம் நாட்டில் பருநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, காலம் தவறி மழை பொழிகிறது.இதைக் கட்டுப்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று, நதிகளை மாசடையச் செய்யும் செயல்களை தடுக்கவும் முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்து (3)

Amma_Priyan - Bangalore,இந்தியா
04-செப்-201716:33:14 IST Report Abuse

Amma_Priyanவீண் டம்பம்... செல்ப் dubba

Rate this:
0 members
0 members
0 members
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
04-செப்-201714:41:45 IST Report Abuse

Kasiniventhan Muthuramalingamகாடுகளை முதலில் பாதுகாப்போ ம் ..அப்போதுதான் மழையை எதிர்பார்க்கலாம் ..நதிகள் காக்கப்படும். .காடுகளை ஆக்கிரமித்து யானை தடங்களில் சுவர் எழுப்பினால் அழிவுதான் ..சர்குரு....

Rate this:
1 members
0 members
1 members
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-செப்-201709:10:39 IST Report Abuse

Srinivasan Kannaiyaசத்குரு அவர்கள் நீங்கள் உங்கள் முயற்சியால் இந்த நதிகளை இணைத்து விட்டால் இந்த உலகத்திலேயே நீங்கள்தான் மிக சிறந்த சாதனையாளர்

Rate this:
0 members
0 members
2 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்