காக்க... காக்க... : நதிகளை காக்க நாடு முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு பயணம்!

|

Details:

“நதிகளை மீட்போம்” இயக்கத்தின் தேசிய அளவிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி, இன்று கோவையில் துவங்குகிறது. வேகமாக வற்றி வரும் நம் தேசத்து நதிகளை மீட்க, அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்க வரையறை வகுத்து, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய, 'நதிகளை மீட்போம்' என்னும் விழிப்புணர்வு இயக்கம் உருவாகியுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி, கோவையில் இன்று (செப்., 3ம் தேதி), வ.உ.சி. மைதானத்தில், மாலை, 4:00 மணிக்கு துவங்க உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ள இந்த பேரணி கூட்டத்தில், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, பஞ்சாப் கவர்னர் வி.பி.சிங் பத்நோர், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமி, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், மகேந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குனர் விஜய் ராம் நக்ரா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்கள். இதில், கோலாகலமான இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள், ராணுவ வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் வாழ்வின் ஆதாரமாகவும் நம் நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் இருந்துள்ள ஜீவநதிகள் அழிந்து வருகின்றன.
வற்றி வரும் நதிகளின் நீரோட்டத்தை அதிகரிப்பது பற்றி கடந்த ஒரு மாதமாக தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் பிற மாநிலங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், சமூக நல அமைப்புகள் உட்பட எல்லா இடங்களிலும், பொது மக்களிடையே, தீவிரமான விழிப்புணர்வுப் பிரசாரம் நடந்து வருகிறது.

மக்கள் அலையுடன் கோவையில் கிளம்புது பேரணி


சட்டம் கொண்டு வர வேண்டும்

நம் மண் வளத்தையும், நதியின் நீரோட்டத்தையும் அதிகரிக்கத் தேவையான தீர்வுகளை விஞ்ஞான ரீதியாக வரையறுத்து, விவசாயியின் வாழ்வில் சாதகமான பொருளாதார மாற்றத்தை கொண்டுவந்திட ஒரு சட்டத்தை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
இதை நடைமுறைக்கு கொண்டு வர அரசிற்கு ஒரு பரிந்துரை தயார் படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொருளாதார மற்றும் அரசியல் சட்ட நிபுணர்கள், ஆகியோரைக் கொண்ட ஒரு குழு இந்த அரசியல்சட்ட பரிந்துரையை உருவாக்கி உள்ளனர். இதில் முக்கியமாக, நதி நெடுகிலும் இருபுறமும் குறைந்தது ஒரு கிலோமீட்டர் அகலத்திற்கு மரங்கள் உருவாக்க வலியுறுத்தப்படும். இது மத்திய அரசிடமும் மாநில முதல்வர்களிடமும் சமர்ப்பிக்கப்படும். அதே சமயம் பொதுமக்களின் பேராதரவிருந்தால் மட்டுமே இது போன்ற அரசியல் சட்டம் அமலாக்கப்பட வாய்ப்புள்ளது.

சத்குரு நடத்தும் மாபெரும் பேரணி

இதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, இன்று முதல் 30 நாட்களுக்கு நதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று (செப்டம்பர் 3ம் தேதி) அவருடைய, 60வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் சத்குரு நாடு முழுவதும் தாமே சுமார், 7,000 கிமீ தூரம் வாகனம் ஓட்டிச் செல்வார். அவரோடு வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்வார்கள். இந்த பேரணியின் பாகமாக பயணிகளுடன் (BSF) எல்லை பாதுகாப்பு படையினரும் பயணிப்பார்கள்.
இந்த பயணம் அக்டோபர் 2ம் தேதி புதுடில்லியில் முடிவடையும். இந்த விழிப்புணர்வு பேரணி, 16 மாநிலங்களின் வழியாக செல்லும். 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 16 மாநிலங்களின் முதல் அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அப்போது இந்த பரிந்துரை அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.மிஸ்டு கால் கொடுத்து ஆதரவை தெரிவிக்கலாம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், இந்திய தொழில்துறை குழுமம் (CII), இந்திய துணை ராணுவம் (CRPF), எல்லை பாதுகாப்புபடையினர் (BSF), இந்திய ரயில்வே உட்பட பல அமைப்புகள் இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிக்கின்றன. கட்சி பேதமில்லாமல், மத பேதமில்லாமல் பல தலைவர்களும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அரசாங்க அதிகாரிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என முன்னூற்றுக்கும் மேற்பட்ேடார் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

ஆதரவு அதிகரிப்பு : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மற்றும் அனைத்து இந்திய இமாம் அமைப்பு தலைவர் இமாம் உமர் அஹ்மத் இலியாசி ஆகியோர் பிரசாரத்திற்கு தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளனர். சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், தேவகவுடா, கேப்டன் அம்ரிந்தர் சிங், சந்திரபாபு நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, ஹர்ஷவர்தன் உட்பட பல கட்சிகளை சேர்ந்த தலைவர் களும் தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மகிந்திரா, கிரண் மஜும்தார் ஷா, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், திரைப்பட படைப்பாளர்கள், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, சேகர் கபூர், திரைப்பட நட்சத்திரங்கள் கஜோல், ரிஷி கபூர்,தியாமிர்ஸா,ஜூஹி சாவ்லா, அனுபம் கெர், கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், செஃப் சஞ்சீவ் கபூர், மலையாள நடிகர் மோகன்லால், பாகுபலி புகழ் ராணா மற்றும் இசையமைப்பாளர் ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இம்முயற்சியை ஆதரித்துள்ளனர்.
ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய்குமார் ஆகிய நட்சத்திரங்கள் தங்கள் ஆதரவை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் ஷைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், பால் முகவர்கள் சங்கத்தலைவர் பொன்னுசாமி, பேராசிரியர் ஞான சம்பந்தன், எழுத்தாளர் ஜெயமோகன் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுகாசினி மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், தனுஷ், குஷ்பு, விவேக், பார்த்திபன், கலைப்புலி தாணு, ரேவதி,எஸ்.வி.சேகர், அமலாபால், பிரகாஷ் ராஜ்,ராதிகா சரத்குமார், காஜல் அகர்வால், தமன்னா, தொகுப்பாளினி டிடி, ரம்யாகிருஷ்ணன், திரிஷா உட்பட பலரும் இது பற்றி தொடர்ந்து வலைதளத்தில் ஆதரவுப்பதிவுகள் செய்து விழிப்புணர்வு உருவாக்கி வருகின்றனர். தொழிலதிபர்களில் முருகவேல் (தமிழ்மாட்ரிமொனி), டாக்டர் பிரதாப் ரெட்டி, ஐயப்பன் முத்தையா (செட்டிநாடு குழுமம்), கெவின் கேர் சி.கே ரங்கராஜன், கே.ஜி.குழுமம், சவேரா குழுமம், சோழா குழுமம், ரோட்டரி கிளப், அரிமா சங்கம் போன்றவர்கள் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாசகர் கருத்து (1)

Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
04-செப்-201713:51:59 IST Report Abuse

Mohan Sundarrajaraoஅவர் காரில் போகாமல், நதிக்கரை ஓரமாக நடந்து செல்ல வேண்டும். அல்லது நதியில் நீர் இல்லையென்றால், நதியிலே நடந்து செல்ல வேண்டும்.

Rate this:
0 members
0 members
2 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்