வைகை ஆற்றை கடந்த போது வேதனை! : மதுரையில் சத்குரு உருக்கம்

|

Details:

மதுரை: ''மதுரையில் வைகை ஆற்றை கடந்தபோது மனம் வேதனையடைந்தது. அவ்வளவு அசுத்தமாக இருக்கிறது. இது ஆறா? இது யார் செய்த தவறு? அமைச்சர், கலெக்டர் என அடுத்தவரை கை காட்டாமல் நமது பங்களிப்பை கொடுக்க வேண்டும்,'' என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு உருக்கமாக பேசினார்.

'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்க விழிப்புணர்வு பேரணி கோவையில் நேற்று முன்தினம் துவங்கி, 16 மாநிலங்கள் வழியாக, 7,000 கி.மீ., கடந்து அக்.,2ல் டில்லியை அடைகிறது. பேரணியை முன்னின்று நடத்தி, சத்குரு தானே வாகனத்தை ஓட்டிச் செல்கிறார். இப்பேரணி நேற்று மதுரை காந்தி மியூசியம் வந்தது.

சத்குரு பேசியதாவது: அபிக்ஷா என்ற 8 வயது சிறுமி, தான் இதுவரை நதியையே பார்த்த
தில்லை. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி யதையும் பார்த்ததில்லை என பேசியது வேதனைக்கு உரியது. சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வற்றாத வைகை ஆற்றில் இறங்குவதை அனைவரும் பார்க்க வேண்டும். அதற்கான முயற்சியை இப்போதே எடுக்கும்போது, பலன் 15 முதல் 20 ஆண்டுகளில் கிடைக்கும். இந்த உன்னத இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க 80009 80009 என்ற அலைபேசி எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்து இணையுங்கள்.

இது ஆறா : மதுரையில் வைகை ஆற்றை கடந்தபோது மனம் வேதனை அடைந்தது. அவ்வளவு அசுத்தமாக இருக்கிறது. இது ஆறா? இது யார் செய்த தவறு? அமைச்சர், கலெக்டர் என அடுத்தவரை கை காட்டாமல், நமது பங்களிப்பை கொடுக்க வேண்டும். நாம் பத்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, விவசாயம் செய்து வருகிறோம். மண்ணை உணவாக மாற்றும் இந்த விஞ்ஞானம், சாதாரணமானது அல்ல. இந்த அற்புதத்தை நிகழ்த்தி கொண்டிருக்கும் நமது விவசாயிகள், தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடைசி தலைமுறை? : இதற்கு முக்கிய காரணம், நம் நாட்டின் மண் வளம் குறைந்து விட்டதுதான். நாம் இப்போது கடைசி தலைமுறை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று நம் மண் மற்றும் நதிகளின் வளத்தை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு அனைவரது பங்களிப்பும், ஈடுபாடும் அவசியம் தேவை. நீங்கள் தினமும் ஒரு
வருடன் ஒருவர் மூன்று நிமிடங்கள் இதைப்பற்றி பேச வேண்டும். கடந்த 12 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் இறந்துள்ளனர். இரவு உணவு உண்ணும் முன், நமக்காக உணவு விளைவிக்க முடியாமல் துாக்கிட்டு கொள்ளும் விவசாயிகளை 20 வினாடிகள் நினைவு கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

கலெக்டர் வீரராகவ ராவ், ''மதுரையில் நீர் நிலைகளை பாதுகாக்க 'மாசில்லா மதுரை', 'பசுமை திட்டம்', உள்ளிட்டவை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது.உயிரினம் வாழ தண்ணீர் மிக அவசியம். அதை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை,'' என்றார்.

மண்டல பாஸ்போஸ்ட் அலுவலர் மணீஸ்வர்ராஜா, ''இருதயத்திற்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல, ரத்த நாளங்கள் எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவு தண்ணீர் முக்கியம்.
இயற்கையை பேணி காப்பதன் மூலம் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். நதிகள் மீட்பு மூலம் நதிகளை தெரிந்தும், தெரியாலும் மாசடைய செய்யும் மனிதர்களை மீட்டு, மாற்று வாழ்வாதாரம் உருவாக்கிட முடியும். நதிகள் மீட்பு என்பது நதிகள் உருவாகும் காட்டுப்பகுதியில் இருந்து துவங்க வேண்டும். அப்போது தான் துாய்மையான தண்ணீர் கிடைக்கும்,'' என்றார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ''மத்திய பிரதேசத்தில் போபால் விஷ வாயு தாக்கியபோது ஒரு வீதியில் 100 வீடுகள் மட்டும் அழிவில் இருந்து தப்பின. அங்கு சென்று பார்க்கையில், அந்த வீதியில் 500 மரங்கள் இருந்தன. மூன்று நாட்களில் அந்த 500 மரங்களும் செத்து விட்டன. கார்பன் டை ஆக்சைடு விஷத்தை உண்டு ஆக்சிஜனை வெளியிடும் மரங்கள், தன்னை அழித்து மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்றி வருகிறது. எனவே நதிகளை இணைக்க, நீர் வழி
போக்குவரத்து உருவாக்க மரங்களை நட்டு பாதுகாப்பது கட்டாயம்,'' என்றார்.

அமைச்சர் செல்லுார் ராஜூ, எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்பேரணி நேற்று மாலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா சென்றது.

வாசகர் கருத்து (2)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-செப்-201709:00:59 IST Report Abuse

Srinivasan Kannaiyaநதிகளை இணைப்பதற்கு முன்பாக பிளாஸ்டிக் பொருளகளை அறவே அகற்ற ஒரு போராட்டம் நடத்தி அதற்க்கு வெற்றி பெறுங்கள்... அவை பூமி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணம்...

Rate this:
0 members
0 members
2 members
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
05-செப்-201706:44:59 IST Report Abuse

samuelmuthiahrajமுதலில் ஆங்காங்குள்ள குளங்களை கண்டுபிடித்து ஆவாரை மீட்டிடுங்கள் பிறகு ஆறு நதி என வாருங்கள் மேலும் நடைபாதை கடைகளை அகற்றிடுங்கள்

Rate this:
0 members
0 members
2 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்