'எப்போதும் அரசியல் பேச வேண்டாம்' : ஈஷா யோகமைய சத்குரு கருத்து

|

Details:

திருச்சி: ''அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மக்களும் எப்போதும் அரசியல் பற்றி பேசுவதை விட்டு, தேர்தல் காலத்தில், மட்டும் அரசியல் பேச வேண்டும். மற்ற நாட்களில், நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்,'' என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறினார்.
ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு, கடந்த 3ம் தேதி, 'நதிகளை மீட்போம்' என்ற விழிப்புணர்வு பேரணியை கன்னியாகுமரியில் துவக்கினார்.

இந்த பேரணியின் ஒரு பகுதியாக, திருச்சி வந்த அவர், நேற்று காலை காவிரிக் கரையோரம் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பேசியதாவது: நதிகளில், ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய காலம் மாறி, ஏழு, எட்டு மாதங்களுக்கு மட்டும் நதிகளில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்ட பின், ஏராளமான மீன் வகைகள் அழிந்து விட்டன.அரசாங்கத்துக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு அரசியல் செய்யத் தேவையில்லை, ஒரு ஆண்டுக்கு அரசியல் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு அரசாங்கம் நடத்த வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மக்களும் எப்போதும் அரசியல் பேசிக்கெண்டிருப்பதை விட்டுவிட்டு, தேர்தல் காலத்தில், மூன்று மாதம் மட்டும் அரசியல் பேச வேண்டும். மற்ற நாட்களில் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
அரசியல் பேசிக் கொண்டிருந்தால், அரசாங்கம் நடக்காது. அரசாங்கம் நடக்காமல் இருப்பதால், எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியவில்லை. வெறும் பேச்சும், சண்டையும் தான் நடக்கிறது.
மண்ணை பாதுகாக்க, அரசாங்கத்தில் முறைப்படி சட்டம் இயற்ற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து, அறிவுபூர்வமாக ஆராய்ந்து, சவாலான பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய பிரச்னை என்பதால் தான், நதிகள் விவகாரத்தில், 30 ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் உள்ளது. ஒரு மாதத்துக்குள், மண்ணையும் நீரையும் பாதுகாக்க, சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு, அக்., 2ம் தேதிக்குள், மண்ணுக்கும், நீருக்கும், தாய் மற்றும் உறவுகளுக்கும் மேலாக அதிகமாக நேசிக்கும் போன் மூலம், 'மிஸ்டு கால்' கொடுங்கள். தமிழகத்தில், ஒரு மாதத்துக்குள் ஆறு கோடி பேர், மிஸ்டு கால் கொடுத்தால் போதும், எந்த அரசாங்கமும், சட்டம் இயற்ற முடியாது என்று சொல்ல வாய்ப்பு இருக்காது.
இவ்வாறு, அவர் பேசினார்.

வாசகர் கருத்து (1)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201709:26:05 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇறையாண்மையில் தேர்தலின் நேரம் மட்டும் அரசியல் பேச எங்கே அனுமதி உள்ளது... எல்லா நேரத்திலேயும் வாயை மூடி கொண்டு "சிவனே" என்று இருந்தால் நல்லது...

Rate this:
0 members
0 members
1 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்