நதிகள் இணைப்புக்கு ஆதரவு: முதல்வர் பழனிசாமி பேச்சு

|

Details:

சென்னை: தேசிய அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இணைப்புக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது என முதல்வர் பழனிசாமி கூறினார்.


சென்னை-நந்தனத்தில் நதிகளை மீட்போம் பேரணி கூட்டம் நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை நதிகளை இணைக்க வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ,அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது:நதிகளை மீட்பது குறித்து தேசிய இயக்கம் செயல்பட்டு வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரங்கள் நடுவதில் ஜெயலலிதா மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. நதிகளை இணைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:தமிழகம் மட்டுமல்ல, இந்திய நதிகளையும் காத்திட வேண்டும். நதிகளை சுத்தப்படுத்த நவீன முறைகளை கையாண்டு சுத்தப்படுத்திட வேண்டும்.வாசகர் கருத்து (20)

vetri - NELLAI,இந்தியா
20-செப்-201712:50:39 IST Report Abuse

vetri முதலில் தாமிரபரணி - கன்னடி கால்வாய் இணைப்பிற்கு, தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தொடர்ந்து வேலைகள் தொய்வின்றி நடக்க அனுமதியளித்தது. தற்போது ஒரு சில காரணங்களால் வேலைகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை, செலவழித்து மழை நீர் கடலில் கலப்பதை தடுங்கள். பிறகு, நதிநீர் இணைப்பை தொடர்பாக நடவடிக்கை எடுங்கள். ஒதுக்கப்பட்ட நிதியை செலவழித்து நடவடிக்கை எடுங்கள்.

Rate this:
0 members
0 members
0 members
sam - Doha,கத்தார்
11-செப்-201708:09:09 IST Report Abuse

samமணல் மாபியா கும்பலும் இத்துடன் சேர்ந்து மணல் அள்ள வசதியாகத்தான்

Rate this:
0 members
0 members
0 members
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
11-செப்-201704:51:37 IST Report Abuse

Vakkeel VanduMuruganஅப்பாடா எங்க நீங்க ஆதரவு கொடுக்காம போய்டுவீங்களோன்னு பயந்துட்டே இருந்தோம்

Rate this:
0 members
0 members
0 members
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
11-செப்-201703:22:46 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)ஒருவேளை தமிழகத்தில் நதிகளை இனைக்கும்பொழுது, ஒரு விவசாயி இறந்தாலும் அதை அ.தி.மு.க அரசிற்கு எதிராகவும் பி.ஜே.பி அரசிற்கு எதிராகவும், பொதுப்பிரிவு ஹிந்துக்களுக்கு எதிராகவும் திருப்ப ஒரு கூட்டம் காத்துக்கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் விலக்கு கேட்கும் தமிழகம், இதில் மட்டும் இந்தியாவுடன் ஒற்றுமையாகவா இருக்கப்போகிறது ? பிற மாநிலங்களை முதலில் கவனியுங்கள். தமிழகத்தை பிறகு பார்க்கலாம். வழக்கம் போல சம்பந்தமே இல்லாமல் திட்டுவார்கள், பரவாயில்லை. நதிநீர் இணைப்பு தமிழகத்திற்கு தேவை இல்லை.

Rate this:
0 members
0 members
0 members
ramasamy naicken - Hamilton,பெர்முடா
11-செப்-201701:18:45 IST Report Abuse

ramasamy naickenபாவி பயல்களா தூர் வாரி சம்பாதித்தது போதாதா .

Rate this:
0 members
0 members
0 members
ilicha vaayan - chennai,இந்தியா
11-செப்-201701:09:36 IST Report Abuse

ilicha vaayanஅதுலயும் ஒப்பந்தம் கிடைக்குமா 45% கிடைக்குமா என்ற நப்பாசை தான் இது நாள் வரை மக்களுக்கு எதுவும் செய்யாமல் சுரண்டியவர்கள் இனிமேல் செய்வார்களா? அப்படியே உவர் நினைத்தாலும் கேரளா கர்நாடக அந்தர மாநிலங்கள் எதிர்க்கின்றன. அவர்கள் ஒத்துழைத்தால் தான் நமக்கு நீர் கிடைக்கும் எனவே அண்டை மாநிலங்களோடு பேச்சு நடத்தி அவங்கள வழிக்கு கொண்டு வாங்க

Rate this:
0 members
0 members
0 members
E.PATHMANABAN - vikramasingapuram,இந்தியா
10-செப்-201722:27:58 IST Report Abuse

E.PATHMANABANவேறு வழி இல்லை ரோட்டுக்கு(ஆதரவு) எப்படியும் வந்து தான் ஆகனும் . அம்மா இருக்கும் போது நீங்கள் எல்லாம் என்ன நிலைமையில் இருந்தீர்கள் என்பது நாடு அறிந்த செய்தி. பயப்படாமல் நல்ல செயல்கள் செய்யுங்கள் ,மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள் மத்திய அரசாங்த்திற்கு துதி பாடினால் சரித்திரத்தில் அழியா கெட்ட பெயர் ஏற்படும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை கொடுங்கள் அந்த நிலையை எடுத்தால் அதிமுக எப்படி திமுக விலிருந்து பிரிந்து வரலாறு படைத்ததோ அதே நிலையயை எதிர்காலத்தில் அடைய வேண்டுமென்றால், அதிமுக கட்சி உங்ளை ஒதுக்கி வைத்தாலும் அதாவது எதிர் காலத்தில், அந்த கட்சி தலைமையை மக்கள் விரும்ப வில்லை யெனில் ஒரு மாற்று கட்சி யாக வர வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் வைத்தது செயல் பட்டால் மக்கள் ஆதரவு கிடைக்கும் இல்லையேல் கசாப்புக் கடையில் 10 தோடு 11 ஆக போக வேண்டியது தான், மத்திய அரசை கண்டு பயப்பட தேவையே இல்லை திருச்சி மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை( BJP) பார்த்த பிறகாவது நன்றாக யோசித்து முடிவெடுங்கள், சின்னம்மாவை எதிர்ப்பது சரி அதே சமயத்தில் BJP யை ஆதாரிப்பது தமிழக மக்களின் மன ஓட்டத்திற்கு எதிரான செயலாகவே படுகிறது . காலம் எப்போதும் கிடைக்காது. தேவையில்லாத சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்காதீர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள், அதுவே ஓட்டு போட்டவர்களுக்கு நீங்கள் செய்யும் கடமை, ஒன்றும் மட்டும் கேட்கிறேன் இந்த Bjp யின் ஆதரவோடா 2016 TN தேர்தலில் வெற்றி பெற்றீர்கள், துரோகம் செய்பவர்களை ஜெ வின் (அம்மாவின்)ஆத்மா கூட மன்னிக்காது.

Rate this:
3 members
1 members
3 members
Nawashkhan - Dammam,சவுதி அரேபியா
10-செப்-201722:11:14 IST Report Abuse

Nawashkhanஅள்ளவேண்டிய மணலை அள்ளி விற்று வாய்ல போட்டாச்சு இனி நதிகளை இணைச்சு தண்ணீரை எல்லாம் கடலில் கொண்டு போய் பத்திரமா விட போறீங்களா முதலில் மணல் அள்ளுவதை நிறுத்தி விட்டு அணைகளை கட்டுங்க மிச்சமீதி உயிரோடு இருக்கும் விவசாயிகளாவது விவசாயம் செய்து நமக்கு சோறு போடுவார்கள் இல்லைனா நம்ம சந்ததி தின்ன சோறு தண்ணி இல்லாம பஞ்சத்தில் தான் பட்டினி வாழ்க்கை வாழ்வார்கள்

Rate this:
2 members
0 members
10 members
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
10-செப்-201721:32:00 IST Report Abuse

மணிமேகலை  ஒண்ணா கூடி நதிய இணைக்கிறார்களா ..............இதை தான நாங்கள் பலவருடங்களாக சொல்லிவருகிறோம் .

Rate this:
0 members
0 members
4 members
Mal - Madurai,இந்தியா
10-செப்-201721:29:48 IST Report Abuse

MalKalaignar avar kudumbathukaga matumae padupattar.... Vajpayee period first saw road linking plans all over India .. Epadi koosama aduthavanga perai aataiya poda pakathenga... Infact bjp government gave the first minister .. I think some Velu or Mani of pmk (Ramadoss)... For railways I guess... Nobody should get any good posts apart from their family is the main and only aga of Congress and dmk.... They won't give ministers to their alliance parties in state or in centre except their family... Even now if Stalin is ready to give chief minister post to any other person then DMK can talk about democracy.... Enamo Evan apan veetu sothu mathiri... I really don't know why media too is scared of him and his party except dinamalar.... He will never ever become cm.... Be assured of that....

Rate this:
1 members
0 members
1 members
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்