நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை 'நதிகளை மீட்போம்' கூட்டத்தில் முதல்வர் பேச்சு

|

Details:

சென்னை : ''தமிழகத்தில், நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது. நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமிதெரிவித்தார்.


'நதிகளை மீட்போம்' இயக்கத்தின் விழிப்புணர்வு பேரணி, கோவையில், செப்., 3ல், துவங்கியது. அக்., 2ல், டில்லியில் முடியும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.'ஈஷா' யோகா மைய நிறுவனர், சத்குரு, காரில் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி உள்ளார். இந்த பேரணி, 3,000 கி.மீ., துாரத்தை கடந்து, நேற்று சென்னை வந்தடைந்தது. நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, சத்குரு தலைமை வகித்தார்.இதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில், 34 ஆறுகள்; 89 அணைகள்; 14 ஆயிரத்து, 98 ஏரிகள், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகின்றன. நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த, குடி மராமத்து முறையை செயல்படுத்தி உள்ளோம். நீர் நிலைகளில் உள்ள, சவுடு மண், சரளை மண், விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது.மாநிலத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது.ஆறுகளில் இருந்து, ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 1,000 கோடி ரூபாயில், புதிய தடுப்பணைகள் மற்றும் அணைகள் கட்டும் திட்டம், மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப் படும்.

பாலாறு, காவிரி, கங்கை இணைப்புக்கான திட்டம் காலதாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும். மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்காக, சட்டம் இயற்ற வேண்டும். நீர்வள ஆதாரம் உள்ள காடுகளை பாதுகாக்க, தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.பசுமை போர்வையை மேம்படுத்த, வனங்களுக்கு உள்ளேயும், வெளியேயும், 7.55 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஈஷா யோகா மையம், அரசு புறம்போக்கு நிலங்களில், மரக்கன்றுகள் நட முன் வந்தால், அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:நதிகளை காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆறுகளில், கழிவுநீர் கலப்பதால்,தண்ணீரில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது.சீரழிந்த நதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

தமிழகத்தில், பெரும்பாலான நதிகள் வறண்டு விட்டதை, நம் கண் முன்னே பார்க்கிறோம்.

எதிர்காலத்தில் பெட்ரோல் விலையை விட, குடிநீர் விலை அதிகம் என்ற நிலை வராதபடி செயல்பட வேண்டும். நீர்நிலைகளையும், நதிகளையும் பாதுகாக்க, அனைவரும் முன் வர வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நடிகர், நடிகையர், பொது நல அமைப்பினர்

மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.'நதிகளை மீட்பது காலத்தின் கட்டாயம்'

ஈஷா யோகா மைய தலைவர், சத்குரு பேசியதாவது:நதிகள் மீட்பு பயணத்தில், கர்நாடகாவில், காவிரி கரையோரங்களில், 25 கோடி மரக்கன்றுகள் நட உள்ளோம். இது, கர்நாடகாவிற்கு மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் பயனளிக்கும். காவிரியில் தண்ணீர் வரத்து அதிகமாகி, தமிழகத்திற்கு வரும். இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர். முதல்வர் பேசுகையில், 'அரசு புறம்போக்கு நிலங்களில், மரங்கள் நட உதவி செய்யப்படும்' என, உறுதி அளித்துள்ளார். அதை, வரவேற்கிறேன்.கிராமங்களில் வாழும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு, பழங்கள் கிடைப்பதில்லை; கடைகளில் வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, பெரிய கிராமங்களில், 1 ஏக்கர்; சிறு கிராமங்களில், அரை ஏக்கர் நிலம் கொடுத்தால், பழ மரங்களை நட்டு, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பழங்கள் பறித்து சாப்பிட வழி செய்வோம்.தமிழகத்தில் உள்ள, அரசியல் தலைவர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு உள்ளது. அவர்கள், தங்களை அணில் மாதிரி நினைத்து கொள்ளாமல், அனுமன் மாதிரி விஸ்வரூபம் எடுத்து, தற்போதுள்ள நிலையை மாற்ற வேண்டும். எங்களிடம் உள்ள தொண்டர்கள், அணில் செய்ய வேண்டிய வேலையை பார்த்து கொள்வர்.ஜெ., பிறந்த நாளில், 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக தெரிவித்தனர். பிப்ரவரியில் இருந்து ஜூலை வரை, மரம் நடும் சூழல் கிடையாது. அதற்கு பின் மரக்கன்றுகள் நட வேண்டும். நதிக்கரைகளில், 1 கிலோ மீட்டர் அகலத்திற்கு, மரங்கள் வளர்த்தால் தான், நீர் ஆவியாகாமல் தடுக்க முடியும். மரங்களை வளர்க்கும் திட்டம் எங்களிடம் உள்ளது; அதை, செயல்படுத்த அரசு உதவ வேண்டும்.நம் நாட்டில், விவசாய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளில், 15 சதவீதம் பேர் மட்டுமே, விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு, நதிகள் வற்றிப்போனதே காரணம். இந்த நிலை தொடர்ந்தால், நாட்டில், உணவு பஞ்சம் ஏற்படும். அந்த நிலை ஏற்படாதிருக்க, நதிகளை மீட்பது காலத்தின் கட்டாயம்.இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்து (2)

Kaliyan Pillai - Chennai,இந்தியா
11-செப்-201711:42:34 IST Report Abuse

Kaliyan Pillaiஏரி குளங்களை அக்கிரமிப்பதே அரசியல்வாதிகள்தான். ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும். தண்ணீர் பஞ்சம் இருக்காது. அதை எவனாவது செய்வானா? சும்மா பிலிம் காட்டுறானுங்க

Rate this:
0 members
0 members
1 members
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-செப்-201710:09:42 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மூன்று நல்லவங்க.. Three Stooges on the stage.

Rate this:
0 members
0 members
64 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்