
பள்ளிவாசலில் தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள். இந்த பாங்கு அளவிடற்கரிய மகிமை உடையது. அதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.* கியாமநாளில் மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் சமயத்தில், பள்ளிவாசலில் பாங்கு சொல்லுகின்ற முஅத்தின்கள் கஸ்தூரி மணம் கமழும் மேடைகளில் [...]