வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* வருமானம் மிதமாக இருக்கும். சிக்கனம் தேவை.
* உஷ்ணம், தோல் ஒவ்வாமை, வயிறு பிரச்னை வரலாம். உஷார்
* பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.
* மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
* வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்வது கூடாது.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு ஆதாயம் காண்பர்.

2, 11, 20, 29 B, K, R
* வருமானம் அதிகரிக்கும். கையில் பெரும் பணம் புழங்கும்.
* உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி மேலோங்கும்.
* பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர்.
* மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் புதிய கிளை தொடங்குவர்.
* விவசாயிகள் விளைபொருளை அதிக விலைக்கு விற்று மகிழ்வர்.

3, 12, 21, 30 C, G, L, S
* வருமானம் சுமாராக இருக்கும். திடீர் செலவு ஏற்படலாம்.
* அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக நேரிடும் கவனம்.
* பெண்கள் கணவருடன் வாக்குவாதம் செய்வது கூடாது.
* மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
* வியாபாரிகள் அனுபவசாலிகளின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் குறையும்.

4, 13, 22, 31 D, M, T
* வருமானம் படிப்படியாக உயரும்.
* ஆரோக்கியம் மேம்படும். கடமையில் ஆர்வம் அதிகரிக்கும்.
* பெண்கள் புகுந்த வீட்டினரால் பெரிதும் மதிக்கப்படுவர்.
* மாணவர்கள் அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
* வியாபாரிகள் புதிய உத்தி மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்வர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சுமுகத்தீர்வு கிடைக்கப் பெறுவர்.

5, 14, 23, E, H, N, X
* பூர்வீகச் சொத்து மூலம் திடீர் வருமானம் வர வாய்ப்புண்டு.
* வியாதி பறந்தோடும். உடல்நிலை சீர்படும்.
* பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர்.
* மாணவர்கள் கல்வியுடன் கலைத் துறையிலும் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் வியாபார விஷயமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வர்.
* விவசாயிகள் புதிய கருவிகளின் மூலம் பணியை நவீனப் படுத்துவர்.

6, 15, 24, U, V, W
* வருமானம் சுமாராக இருக்கும்.
* பெற்றோர் உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
* பெண்களுக்கு பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.
* மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்குவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம்.
* விவசாயிகள் கால்நடைகளின் மூலம் ஓரளவு லாபம் காண்பர்.


7, 16, 25, O, Z
* சேமிக்கும் விதத்தில் பணம் புழங்கும்.
* உடல், மனநிலை உற்சாகமாக இருக்கும்.
* வியாபாரிகளுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.
* பெண்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் நடந்தேறும்.
* மாணவர்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர்.


8, 17, 26, F, P
* வருமானம் மிதமாக இருக்கும்.
* உடல்நிலை சுமார் என்றாலும் மனதைரியம் குறையாது.
* பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் நலனில் கவனம் செலுத்துவர்.
* விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் லாபம் வரும்.


9, 18, 27
* வருமானம் பலமடங்கு உயரும்.
* பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
* பெண்கள் செல்வாக்குடன் திகழ்வர்.
* மாணவர்கள் வகுப்பில் முன்னணியில் வகிப்பர்.
* வியாபாரிகள் விற்பனை பெருக்கத்தால் அதிக லாபமடைவர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பர்.

Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement