Advertisement
தினமலர் முதல் பக்கம் »ஜோசியம்» பிறந்த நாள் ஆண்டு பலன்கள்

மே 19

இந்த தேதியில் பிறந்த தாங்கள், எந்தவொரு காரியங்களிலும், தனக்கென்ன பயனென்று எண்ணுவதை விட, அதனால் பிறருக்கு என்ன பயன் என்று எண்ணும் சுபாவம் கொண்டவர்கள். தங்களுக்கு, கடந்த ஓராண்டு காலம் எல்லாம் இருந்தும், எதையும் சாதிக்க முடியாத சூழ்நிலையாகவே இருந்திருக்கும். இனிவரும் இந்த ஓராண்டு காலம், மிகுந்த சாதகமான வகையிலேயே அமையும். தங்களின் பழக்க வழக்கங்களில் மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பொருளாதார நிலையில், படிப்படியான வளர்ச்சியை எட்டுவீர்கள். கடன் சுமையும் ஓரளவிற்கு குறையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மகிழ்ச்சி கூடுதலாகும். பெற்றோரின் உடல்நலத்தில், சற்று கவனம் தேவைப்படும். தொழில் துறைகளில், போட்டி சற்று கூடுதல் என்ற போதிலும் வளர்ச்சி பாதிக்காது. உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு, தங்களின் கோரிக்கை தாமதமாகலாம். இடமாற்றங்களுக்கோ, பணி மாற்றங்களுக்கோ அவசரப்பட வேண்டாம். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாராட்டுக்கள், புதிய பொறுப்புகள் ஏற்படக் கூடிய காலகட்டம்.

அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள் : 1,10,19
அதிர்ஷ்ட மாதங்கள் : ஜூன், செப்டம்பர்
அதிர்ஷ்ட எண்கள் : 1,2

மே 20

இந்த தேதியில் பிறந்த தாங்கள் போராட்டங்களையும், தோல்விகளையும் சந்தித்த போது, மனம் தளராத முயற்சியோடு செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். பல நேரங்களிலும், தங்களின் தீவிர சிந்தனையால் எந்தவொரு விவகாரங்களிலும், தாமதமான செயல்பாடுகள் மற்றும் தாமதமான முடிவுகள் எடுக்கும் நபராகவே இருப்பீர்கள். அதுவும் நல்லதற்கே. கடந்த காலங்களில், வளர்ச்சிக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைத்த போதும், அதை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், இனிவரும் காலம் சாதகமாக இருக்கும். பொருளாதார வசதியில், வருமானம் கூடுதலாக இருந்தபோதும் செலவுகள் அதிகமாகவும், தவிர்க்க முடியாத வகையிலும் இருக்கும். அதே நேரத்தில், முயற்சியின் பெயரில் கடன்கள் குறைய வாய்ப்புண்டு. புதிய வேலைவாய்ப்புகளுக்காகவும், தொழிலுக்காகவும், முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கு, தகுந்த உதவிகளும், அதற்கான சூழ்நிலையும் ஏற்படும். குடும்பத்தில் கவலைகள் குறைந்து, மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சுமூகமான உறவு நீடிக்கும். தொழில் துறையில் அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத் துறைகளில் சிறப்புகள் கூடுதலாகும்.

அதிர்ஷ்ட கிழமை : திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள் : 2,11,20
அதிர்ஷ்ட மாதங்கள் : ஜூலை, நவம்பர்
அதிர்ஷ்ட எண்கள் : 1,2

மே 21

இந்த தேதியில் பிறந்த தாங்கள் நீதிøயும், நேர்மையையும் நேசிப்பவர்கள். மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்கள். தவறு என்றால், கண்டிக்கத் தவறாத தாங்கள், சரியாக செய்யப்பட்ட எந்தவொரு காரியங்களையும், பாராட்டவும் தயங்காத உள்ளம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில், காலங்கள் கடந்த போதும், வளர்ச்சி என்பது குறைவு தான். இருப்பினும், இந்த பிறந்தநாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். புத்தி கூர்மையாலும், சமயோசிதத் திறமையாலும், தொழில் துறையில் கூடுதல் லாபங்கள் காண்பீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வர்த்தகங்களில், அதிகப்படியான வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத் துறையில், அரசுத் துறையை விட தனியார் துறையில், வேலை பார்ப்பவர்களுக்கு கூடுதலான சலுகைகளும், உயர்வுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நீண்டகால பிரச்னைகளுக்கு, நல்லதொரு தீர்வு காண்பீர்கள். புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட கிழமை : வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள் : 3,12,21
அதிர்ஷ்ட மாதங்கள் : ஜூலை, அக்டோபர்
அதிர்ஷ்ட எண்கள் : 1,3

மே 22

இந்த தேதியில் பிறந்த தாங்கள், தங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக, எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில், சில திட்டங்களை செயல்படுத்த முயற்சித்திருப்பீர்கள். இருப்பினும், தாமதப்பட்டிருக்கும். இனிவரும் காலங்களில், தங்கள் மனசுக்குள் இருந்த போராட்டம் நீங்கி, தெளிவான சிந்தனைகளோடு, சில காரியங்களில் ஈடுபடுவீர்கள். அது நல்லதாகவும், நினைத்ததாகவும் நீடித்த சந்தோஷம் தருவதாகவும் இருக்கும். பொருளாதார நிலையில் வருமானம் கூடுதலாகும். சேமிப்பு தங்கள் முயற்சியில், தொழில் துறையில் பல்வேறு பிரிவுகளிலும், சீர்திருத்தங்களை மேற்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். திடீர் வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் கிடைக்க, சற்று தாமதமாகலாம். கடன் நிலவரங்களில் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் பெற்றோரால் செலவு கூடுதலாகும். குழந்தைகளின் வளர்ச்சி பெருமை தரும்.

அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள் : 1,10,19
அதிர்ஷ்ட மாதங்கள் : ஆகஸ்ட், டிசம்பர்
அதிர்ஷ்ட எண்கள் : 1,4

மே 23

இந்த தேதியில் பிறந்த தாங்கள், தெளிவான வார்த்தைகள், கொடுத்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். மதியாதாரை கூட தன்னுடைய <புத்தியால், மதிக்க வைக்கும் சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில், தங்களுக்கு எதிர்பாராத வகையில், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கும். அதன் காரணமாகவே, சில காரியங்களில் தயக்கத்தோடு ஈடுபட்டு இருப்பீர்கள். இனி வரும் காலங்களில், தங்களுக்கு தயக்கம் தேவையில்லை. தைரியத்துடன் செயல்படலாம். பொருளாதார நிலையில், இதுவரை நிலவி வந்த இழுபறி நிலை மாறி, சீரான வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். அதே நேரத்தில் வீண் பேச்சுக்களை தவிர்த்து, உருப்படியான காரியங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து செயல்படுதல், சிறப்புகளை கூடுதலாக்கும். தொழில் துறையில் குறிப்பிடத்தக்க வகையில், மாற்றங்களை ஏற்படுத்தி லாபத்தை கூடுதலாக்குவீர்கள். சொத்துக்களிலோ அல்லது தொழிலிலோ புதிதாக முதலீடுகள் மேற்கொள்ளும் போது, தகுந்த நபர்களின் ஆலோசனைகளை மேற்கொள்ள தவறாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமை : புதன்
அதிர்ஷ்ட தேதிகள் : 5,14,23
அதிர்ஷ்ட மாதங்கள் : அக்டோபர், டிசம்பர்
அதிர்ஷ்ட எண்கள் : 2,5

மே 24

இந்த தேதியில் பிறந்த தாங்கள், எந்தவொரு காரியத்தையும், முழுமனதோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் என்ற கொள்கை கொண்டவர்கள். வேதாந்தம் பேசிய போதும், வேதனைகளுக்காக உள்ளூர வருந்தக்கூடியவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில், பொறுமை சற்று அதிகம் என்ற போதும், வெற்றி மட்டும் தாமதப்பட்டிருக்கும். கடந்த கால நிலை இனி தங்களுக்கு ஏற்படாது. இந்த பிறந்தநாளிலிருந்து, மன மகிழ்வான மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் துறைகளில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு, தெளிவான ஒரு முடிவை எடுத்து செயல்படுவீர்கள். வங்கி மற்றும் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் நிதியுதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நிலையிலும், செலவுகளை குறைத்து சேமிப்புக்கு வழி வகுப்பீர்கள். கடன் நிலவரங்களையும், சற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். கமிஷன், ஷேர் போன்ற வகையில் வருமானங்கள் கூட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில், சில மாறுதல்கள் விரும்பத்தகாத போதிலும், மாற்றத்திற்கு தகுந்த மன நிலையை வளர்த்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமை : வெள்ளி
அதிர்ஷ்ட தேதிகள் : 6,15,24
அதிர்ஷ்ட மாதங்கள் : நவம்பர், ஜனவரி
அதிர்ஷ்ட எண்கள் : 6,9

மே 25

இந்த தேதியில் பிறந்த தாங்கள், தெளிவாக திட்டமிட்டு, ஆரவாரம் இல்லாமல் சாதிப்பவர்கள். சந்தர்ப்பங்களையும், சூழ்நிலையையும் மிகச் சரியாக பயன்படுத்தும் சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களிலும், சில விஷயங்களுக்காக அதிகமான மனக்கவலை கொண்டிருப்பீர்கள். தேவையற்ற வேலைதான் என்ற போதும், தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. இனிவரும் காலங்களில், கவலையை சிந்திக்கக் கூட முடியாத அளவுக்கு, தங்கள் செயல்பாடு இருக்கும்.பொருளாதார நிலையில், நல்லதொரு வளர்ச்சியை அடைவீர்கள். தொழில் துறையில், ஓரளவிற்கு லாபம் கூடிய போதும், விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ளுதல் வளர்ச்சிக்கு ஏதுவாகும். கூட்டு ஒப்பந்தங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ள நபர்களுக்கு வேலைப்பளு கூடும். வேலையில் நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் கல்வி விஷயங்களுக்காக, வெளிநாட்டு பயணம் ஒன்றை இந்தாண்டு மேற்கொள்வீர்கள். வளர்ச்சிக்கு ஏதுவாகும். கூட்டு ஒப்பந்தங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமை : திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள் : 2,11,20
அதிர்ஷ்ட மாதங்கள் : அக்டோபர், பிப்ரவரி
அதிர்ஷ்ட எண்கள் : 2,7

மேலும்
Advertisement
Advertisement