மேஷம்: சிறப்பாக பணி செய்யும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை ஏற்படும். திட்டங்களை திறம்பட செய்வீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். புத்திரர்களால் பெருமை ஏற்படும். கடன்களை செலுத்துவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பயணங்கள் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சியும், பண வரவும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு உறவினர்களுடன் இணக்கமான போக்கு இருக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement