பொறுப்புணர்வுடன் பணிபுரிந்து, கூடுதல் நன்மை பெறும் மகர ராசிக்காரர்களே! (16-6-13 முதல் 22-6-13 வரை)
இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களின் அமர்வு, எதிர்மறை பலன் தரும் வகையில் உள்ளது. உங்களின் நற்செயலை சிலர் குறை கூறுவர். பொறுமை குணம் பின்பற்றுவதால் மட்டுமே, தேவையற்ற சிரமம் தவிர்க்கலாம். குடும்பத்தின் முக்கியமான தேவைகளை, தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பும், வாகன பயணத்தில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது. புத்திரரின் உடல்நலம், ஆரோக்கியம் பெற சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இல்லறத்துணை, உங்களின் கண்டிப்பு நிறைந்த பேச்சை பொறுத்துக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் அதிருப்தியை பெறாத அளவில், கவனமுடன் பணிபுரிவது அவசியம். பெண்கள், குடும்பச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பதால் தேர்ச்சி விகிதம் சீராகும்.