சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில், ஆர்வம் நிறைந்த கும்ப ராசிக்காரர்களே! (16-6-13 முதல் 22-6-13 வரை)
இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, குரு, சுக்கிரன் நல்ல பலன்களை வழங்குகின்றனர். மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். கடந்த கால உழைப்புக்கு, உரிய நன்மை பெற வழிபிறக்கும். இளைய சகோதரர் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, உங்களுக்கும் ஓரளவு உதவுவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். புத்திரர் நற்குண, நற்செயலால் பெருமை தேடித் தருவர். உடல் நல ஆரோக்கியம், சிறு அளவில் பாதிக்கப்படலாம். காலமுறை உணவுப் பழக்கம், சீரான ஓய்வு பின்பற்றுவது நல்லது. இல்லறத்துணை சேமிப்பு பணத்தை, குடும்பச் செலவுக்கு தந்து உதவுவார். தொழில், வியாபார நடைமுறையில் சிறுமாற்றம் செய்து உற்பத்தி, விற்பனை அளவை பாதுகாத்திடுவீர்கள். பணியாளர்கள், சகபணியாளர்களின் ஆறுதல் வார்த்தை கிடைத்து, பணியில் உற்சாகமுடன் ஈடுபடுவர். குடும்ப பெண்கள், மங்கல நிகழ்ச்சி நிறைவேற, இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், புதியவர்களை நண்பராக ஏற்பதில் தகுந்த கவனம் வேண்டும்.
சந்திராஷ்டமம்: 15.6.13 இரவு 12:01 மணி முதல், 16.6.13 மாலை 4:00 மணி வரை.