சுக்கிரன், கேது நற்பலன் தருவர். கடின செயல்களையும் புதிய உத்தியால் எளிதாக நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் ஊக்கம் அளிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சிரமம் விலகும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நேர்மை எண்ணத்துடன் பணிபுரிவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் உலக நடப்புகளை அறிய விரும்புவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நிம்மதி தரும்.
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement