ரிஷபம்: உறுதியுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளன. திட்டங்களை திறம்பட செய்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு உயரும். புத்திரர்கள் உங்கள் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக் கூடும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவி அன்புடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் அபிவிருத்தி பெறும். பணியாளர் நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதித்து நற்பெயர் பெறுவர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement