பணிவான குணத்துடன் நடந்து, பலரது நன்மதிப்பை பெறும் மிதுன ராசிக்காரர்களே! (19.5.13 முதல் 25.5.13 வரை)
இந்தவாரம், நற்பலன் வழங்குகிற கிரகங்களாக, ஆதாய ஸ்தானத்தில் உள்ள கேது, சுப விரய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் செயல்படுகின்றனர். மற்ற கிரகங்களின் அமர்வு, மாறுபட்ட பலன்களை தருகிறது. சிலரது நிர்பந்தத்தினால், திட்டமிட்ட செயல் ஒன்றை, தாமதமாக துவங்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்ப நலனுக்கு உதவுகிற பணிகளில், ஆர்வம் கொள்வீர்கள். சிலர் வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெறுவதற்காக, முயற்சி மேற்கொள்வர். புத்திரரின், சேர்க்கை சகவாசம் அறிந்து, வழி நடத்துவதால் அவரின் எதிர்காலம் சிறப்பாக உருவாகும். எதிரியிடம் விலகுவதால், மனஅமைதியை பாதுகாக்கலாம். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணங்களை மனமுவந்து பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடந்து நற்பெயரும், சலுகைப்பயனும் பெறுவர். குடும்ப பெண்கள், ஆன்மிக வழிபாடுகளை நிறைவேற்றி, மன மகிழ்ச்சி அடைவர். மாணவர்கள், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, படிப்பை தேர்வு செய்வதில் குழப்பம் அடைவர்.