தன்னடக்கமும், தயாள குணமும் கொண்ட கடகராசிக்காரர்களே! (19.5.13 முதல் 25.5.13 வரை)
இந்த வாரம், உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரனின் அமர்வு அனுகூலமாக உள்ளது. மேற்கண்ட, ஐந்து கிரக சேர்க்கையின் பலனாக, குரு மங்கள, புத ஆதித்ய, சுக்கிர மங்கள யோகபலன் உருவாகின்றது. இதனால், உங்கள் வாழ்வில் வியத்தகு அளவிலான நன்மை பலவும் உருவாகும். பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர் கூடுதல் மதிப்பு, மரியாதை தருவர். புதிய வாகனம், வீடு வாங்க அனுகூலம் வளரும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். புத்திரரின் செயல்திறன் வளர்ந்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். நிலுவை பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை, குடும்ப வளம் சிறக்க உறுதுணையாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். குடும்ப பெண்கள், ஆன்மிக வழிபாடு, தர்ம பணியில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள், குடும்பத்தின் பணவசதிக்கேற்ப, புதிய படிப்பை தேர்வு செய்வர்.