அரிய சாதனை நிகழ்த்த உரிய முயற்சியில் ஈடுபடும் சிம்மராசிக்காரர்களே! (19.5.13 முதல் 25.5.13 வரை)
இந்த வாரம், நற்பலன் வழங்குகிற கிரகங்களாக, ராசிக்கு பத்தாம் இடத்தில் உள்ள புதன், சூரியன் மூன்றாம் இடத்தில் உள்ள சனி, ராகு செயல்படுகின்றனர். புதிய முயற்சிகளை, சமயோசிதமான செயல்களால் நிறைவேற்றுவீர்கள். வெகுநாள் சந்திக்க நினைத்த நண்பர், உங்களைத் தேடி வருகிற இனிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்வதால், பயணமுறை எளிதாகும். புத்திரர் விரும்பிய பொருளை, சிக்கன பணச்செலவில் வாங்கித்தருவீர்கள். எதிரி, சொந்த சிரமங்களால் விலகி போகிற சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணையின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே, குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அரசு உதவி, எளிதாக பெறுவீர்கள். பணியாளர்களுக்கு, கூடுதல் வேலைவாய்ப்பு, தாராள பணவரவு கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரிடம் தேவையற்ற விவாதம் பேசவேண்டாம். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.