கன்னி: பிறருக்கு உதவுவதில் ஆர்வமுள்ள கன்னி ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன், குரு, சனீஸ்வரர் நன்மையை வாரி வழங்குவர். அறப்பணிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் கூடும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். புத்திரர் உங்கள் சொல்லை மதித்து செயல்படுவர். இஷ்ட தெய்வ அருளால் சுமுகமான வாழ்வு அமையும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். மனைவியின் நற்செயல், பெருமை தேடித் தரும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்: ஐயப்பன் வழிபாட்டால் வாழ்வு சிறக்கும்.
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement