தெய்வ நம்பிக்கையுடன் வாழ்வில் நன்மை பெறும் துலாம் ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிநாதன் சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன், அனுகூலமாக உள்ளார். பாக்ய ஸ்தானத்தில் உள்ள குருபகவான், தன் பங்கிற்கு நற்பலன் வழங்குகிறார். நியாய, தர்ம குணங்களை அதிகம் பின்பற்றுவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை, சிக்கன பணச்செலவில் மேற்கொள்வீர்கள். வாகனத்தில் பெறுகிற சிறு வசதியையும் பெரிதென போற்றுவீர்கள். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து, நல்வழி நடத்துவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து, குடும்பத்திற்கு பெருமை சேர்த்திடுவார். தொழில், வியாபார நடைமுறை சீர் பெற, அதிக கவனத்துடன் செயல்புரிவது நல்லது. குடும்ப பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து சந்தோஷம் அடைவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், உடல்நலம் சீராகும்.