விருச்சிகம்: தேவையறிந்து உதவிக்கரம் நீட்டும் விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன், புதன், கேது, சுக்கிரனால் அதிக நன்மை உண்டாகும். பேச்சு, செயல் வசீகரமாக இருக்கும். புதியவர்களின் நட்பால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வாகனப் பயணம் பாதுகாப்பாக அமையும். புத்திரர் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் மன நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் தொழில்நுட்ப அறிவில் மேம்படுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு துன்பம் போக்கும்.
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement