குரு,செவ்வாய், சுக்கிரன் நற்பலன் தருவர். பழகுபவர்களின் எண்ணம் உணர்ந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர் அதிக பாசமுடன் நடந்து கொள்வர். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டாகும். புத்திரரின் நல்லசெயல் கண்டு பெருமை அடைவீர்கள். பூர்வபுண்ணிய நற்பலனால் நன்மை அதிகரிக்கும். கடன் நிர்பந்தம் குறையும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை விரும்பி ஏற்றுக்கொள்வர்.பெண்கள் இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு பாராட்டு பெறுவர்.

பரிகாரம் :பைரவர் வழிபாடு துன்பம் போக்கும்.
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement