வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* வருமானம் திருப்தியளிக்கும்.
* உடலில் வலிமையும் மனதில் துணிவும் நிறைந்திருக்கும்.
* பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர்.
* மாணவர்கள் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்வர்.
* வியாபாரிகள் அரசு வகையில் நன்மை கிடைக்கப் பெறுவர்.
* விவசாயிகள் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.

2, 11, 20, 29 B, K, R
* வருமானம் அதிகரிக்கும். செலவும் கூடும்.
* உடல்நலத்தோடு மனதிலும் உற்சாகம் மேலோங்கும்.
* பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
* மாணவர்கள் கல்வியில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர்.
* பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை ஆர்வமுடன் கற்பர்.

3, 12, 21, 30 C, G, L, S
* பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும்.
* உடல் நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
* பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* மாணவர்கள் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.
* பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.

4, 13, 22, 31 D, M, T
* வருமானம் திருப்தியளிக்கும். சேமிப்பும் அதிகரிக்கும்.
* உஷ்ண வியாதியால் சிரமப்பட நேரிடலாம் கவனம்.
* பெண்கள் உறவினர்களுடன் ஆன்மிக பயணம் மேற்கொள்வர்.
* மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்து ஆலோசிப்பர்.
* வியாபாரிகள் புதிய உத்தி மூலம் வாடிக்கையாளரை கவர்வர்.
* விவசாயிகள் விளைபொருளை நல்ல விலைக்கு விற்பர்.

5, 14, 23, E, H, N, X
* வருமானம் புதிய வழியில் வந்து சேரும்.
* உடல்நிலை சீர் பெறும்.
* பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
* வியாபாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஆதாயம் அடைவர்.
* விவசாயிகள் அரசு வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.

6, 15, 24, U, V, W
* பலவழிகளில் வருமானம் வரும்.
* உடல்நிலை பலம் பெறும். நோய்நொடி பறந்தோடும்.
* பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபடுவர்.
* மாணவர்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் செயல்படுவர்.
* வியாபாரிகள் வியாபார ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்வர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் அடைவர்.

7, 16, 25, O, Z
* வருமானம் திருப்தி தரும்.
* அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாகலாம்.
* பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.
* மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம் பிடிப்பர்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் நவீன உழவிக்கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர்.

8, 17, 26, F, P
* வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். சுபச்செலவு கூடும்.
* உடலிலும், மனதிலும் புத்துணர்ச்சி மேலோங்கும்.
* பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர்.
* மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் நலனை உயிர்மூச்சாகக் கொள்வர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவர்.

9, 18, 27
* பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும்.
* உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
* பெண்கள் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவர்.
* வியாபாரிகள் புதிய கிளை துவங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* விவசாயிகள் காய்கறி சாகுபடி மூலம் ஆதாயம் அடைவர்.

Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement