E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement

செப்டம்பர் 28
இந்த தேதியில் பிறந்த தாங்கள், மனத் துணிச்சல் கொண்டவர்கள். ஆழமானவர்களாகவும், அழுத்தமானவர்களாகவும் இருப்பீர்கள். தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வீடு மற்றும் வாகன சம்பந்தப்பட்ட வகையில் மாறுதல்களுக்கு அவசரம் வேண்டாம். பொருளாதார நிலையில் வளர்ச்சி இருக்கும். உடல்நிலையில் மருத்துவ ஆலோசனைகள் தேவையானதாக இருக்கும். குடும்பத்தில், தங்களின் அனுசரணையான போக்கு அமைதியாக கொண்டு செல்லும். குழந்தைகளின் உயர்படிப்புக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு, கல்வி அல்லது தொழில் சம்பந்தமாக வெளிநாட்டுப் பயணம் இந்தாண்டு ஏற்படும். தொழில் வகையில், சில சீர்திருத்தங்கள் லாபத்தை கூடுதலாக்க உதவும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி யில் பளு கூடிய போதும், மன நிறைவுக்கு குறைவிருக்காது. புதிய பணிகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, விரைவில் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறும். பொதுநலப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு, சிற்சில விமர்சனங்கள் அதிகமாக யோசிக்க வைக்கலாம் கவனம்.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19
அதிர்ஷ்ட மாதங்கள்: அக்., ஜனவரி
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

செப்டம்பர் 29
இந்த தேதியில் பிறந்த தாங்கள், சுயநம்பிக்கை சற்று அதிகம் கொண்டவர்கள், செல்வத்தைத் தேடிக் கொள்வதில் மிகவும் திறமையானவர்கள். தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், ஒவ்வொரு காரியங்களையும் யோசித்து, திட்டமிட்டு செயல்படுதல் அவசியம். செலவுகள் மேற்கொள்ளும் போதும், பணப் பொறுப்புகளில் ஈடுபடும் போதும் நிதானமாக செயல்படுங்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, கவலைப்பட்டுக் கொள்வதையும் தவிர்த்துகொள்ளுங்கள். உடல்நிலையில் ஆரோக்கியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குழந்தைகள், வீடு, உடன்பிறப்புகள் சம்பந்தப்பட்ட வகையில் திருப்திகரமான போக்கு நிலவும். தொழில்துறைகளில் தங்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியிருக்கும். விரிவாக்கங்களுக்கு அவசரப்பட வேண்டாம். புதிய பணிகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும் பணிகளில், தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல் புத்திசாலித்தனம். உத்தியோகத்தில் கவனமான செயல்பாடுகள், கவனமான செயல்பாடுகள் நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள உதவும். எதிர்பார்த்த மாற்றங்களை செய்துகொள்ள முடியும்.

அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20
அதிர்ஷ்ட மாதங்கள்: நவம்பர், பிப்ரவரி
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

செப்டம்பர் 30
இந்த தேதியில் பிறந்த தாங்கள் பெருந்தன்மையாகவும், நேர்மையாகவும் நடப்பவர்கள். இதனால், மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் நல்லதும், நல்லது அல்லாததும், கலந்தே இருக்கும். புதிய முயற்சிகள் மற்றும் புதிய அறிமுகங்களால் ஆதாயம் ஏற்படும். பொருளாதார நிலையில் வளர்ச்சி இருக்கும். சொத்துகளிலோ, தொழில்களிலோ முதலீடுகள் மேற்கொள்ளும் போது, தகுந்த நபர்களின் ஆலோசனை களை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். செய்தொழிலில் வளர்ச்சி யான சூழ்நிலையே, கூட்டு செயல்பாடுகளில் கவனம் தேவை. புதிய பணிகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தேவைப்படும் தகுதிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் விரைவில் பணி கிடைக்க ஏதுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் சற்று தாமதத்திற்கு பின் நடைபெறும். அவசரப்பட வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 12, 21
அதிர்ஷ்ட மாதங்கள்: டிசம்பர், மார்ச்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

அக்டோபர் 1

இந்த தேதியில் பிறந்த தாங்கள் சுதந்திரப் போக்கும், அளவற்ற தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், இனிய மாற்றங்கள் இருக்கும். உற்சாகம் கூடும். பொருளாதார நிலையில் திருப்தியான போக்கு நிலவும். உடல் நிலையில், சில காரணங்களுக்காக மருத்துவச் செலவுகள் இருக்கும். கூட்டு முயற்சியில் சில திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். தவறல்ல, சரியான நபர்களையும், காலத்தையும் தேர்ந்தெடுப்பதில் தங்களின் புத்தி கூர்மை இருக்கட்டும். முக்கியஸ்தர்களின் தொடர்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். இல்லறத் துணையின் வகையில்ஆதாயங்கள் ஏற்படும். குடும்பம் சம்பந்த விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், பெற்றோரின் ஆலோசனையையும் எடுத்துக் கொள்ள தயங்காதீர்கள். செய்தொழிலில், வளர்ச்சியான காலக்கட்டமே. புதிய பணிகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மனம் விரும்பிய மாற்றம் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19
அதிர்ஷ்ட மாதங்கள்: நவம்பர், ஜனவரி
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

அக்டோபர் 2
இந்த தேதியில் பிறந்த தாங்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள். சந்திரன், தேய்ந்தும் வளர்ந்தும் உருமாரி வருவது போல, தங்களுடைய வாழ்க்கையும் இருக்கும் ஏற்ற, இறக்கங்களை சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு பிறந்தநாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், வாழ்க்கையில் முக்கிய காலக்கட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழில், திருமணம், குழந்தைகள், வாகனங்கள் போன்ற வகையில் திருப்பங்களும், திருப்தியும் ஏற்படும். உடல் நிலையில் பழைய தொந்தரவுகளிலிருந்து பூரண நலம் பெறுவீர்கள். வெளிவட்டார பழக்க, வழக்கங்களில் மதிப்பு மரியாதை கூடுதலாகும். குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் கவனம் இருக்கட்டும். செய்தொழிலில் சில பிரச்னைகள் ஏற்பட்ட போதும், சாதுரியமாக எதிர் கொள்வீர்கள். புதிய பணிகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, விரைவில் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடுதலாக இருந்தபோதும், சமாளித்து கொண்டு செல்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20
அதிர்ஷ்ட மாதங்கள்: அக்டோபர், டிசம்பர்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

அக்டோபர் 3
இந்த தேதியில் பிறந்த தாங்கள் தீவிரமான சிந்தனையாளர்கள். எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். குடும்பத்தாருக்கும், பிறருக்கும் முடிந்த உதவிகளைச் செய்பவர்கள். தங்களுக்கு இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், இனிய மாற்றங்கள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படுதலையும், ஆத்திரப்படுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துதல் அவசியம். தொழில் ரீதியான நடவடிக்கைகளையோ, குடும்ப சீர்திருத்தங்களையோ ஆலோசனைக்கு பின் செயல்படுத்துங்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். சுப காரியங்கள் விரைவில் கைகூடும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்படிப்புகளுக்கான முயற்சிகள் வெற்றிதரும். தொழில் ரீதியான பயணங்கள், புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். தெய்வ திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு மரியாதை, புகழ் கூடும்.

அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 12, 21
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, மார்ச்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

அக்டோபர் 4
இந்த தேதியில் பிறந்த தாங்கள் மன உறுதியும், தன்னம்பிக்கையும் பெற்றவர்கள். எந்தவொரு விஷயத்திலும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், எல்லா நிலைகளிலும் சாதாரணமானதாக இருக்கும். திட்டங்கள் பல தாங்கள் ஏற்படுத்திக் கொண்டபோதும், தகுந்த வெற்றி இல்லாமல் ஆதங்கப் பட்டுக் கொண்டிருப்பீர்கள். அதற்கு தகுந்த காலங்கள் இல்லாதது கூட, ஒரு காரணமாக இருக்கும். புதிய அறிமுகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல்நிலையில் மருத்துவப் பரிசோதனையும், ஆலோசனையும் தேவையானதாக இருக்கும். தாமதப்படுத்திக் கொள்ளாதீர்கள். பொருளாதார நிலையில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, சில ஏற்பாடுகளை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். சலுகைகள் கிடைக்கும். புதிய வேலைகளுக்கு, தகுந்த தகுதிகளை வளர்த்துக் கொள்ள தயக்கம் வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, ஏப்ரல்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

Bookmark and Share
மேலும்
Advertisement
Advertisement