இன்னும்... 100 நாட்கள்

இன்னும் நூறு நாட்களில் உலகமே ஆவலுடன் எதிர் பார்க்கும், உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு துவங்குகிறது. கோவை கொடிசியா அரங்கில், ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை நடக்கும் இந்த மாநாட்டின் போதே, தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது.

கோவைப் பகுதி பழங்காலம் முதலே பண்பாட்டு மையமாகவும், வர்த்தக மையமாகவும் விளங்கியது. கோவையில் தமிழ் மாநாடு நடைபெறுவது பாரம் பரியத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

அறிஞர்கள் வாசிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் 55 அரங்கங்களில் இடம்பெறுகின்றன. இந்த அரங்கங்கள் தவிர, முகப்பரங்கம், தனிப் பொழிவரங்கம் மற்றும் கலந்துரையங்கம் அமர்வுகளும் நடைபெறுகின்றன.

இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பங்கேற்கும் ஆய்வாளர்களின் கட்டுரைகள், பரிசீலிக் கப்பட்டுள்ளன. என்றாலும், ஆய்வாளர்களுக்கு இதுவரை முடிவுத் தகவல் அனுப்பப்படவில்லை.

அறிவோம்... அறிஞர் கால்டுவெல்

உலக மொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் லத்தீனும்தான் செம்மொழியாகக் கருதப்பட்டன. கி.பி. 1800 1900களில் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் உள்ளிட்டோர் சமஸ்கிருத படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இது சமஸ்கிருதத்தை செம்மொழியாகக் ஏற்கும் நிலை உருவானது.

1816ல் எல்லிஸ் எனும் அறிஞர் தென் மாநில மொழிகள் வடமொழி அல்லாத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை நிரூபித்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றில் தமிழ், வடமொழியினின்று தனித்து இயங்கும் ஆற்றலை நிரூபித்தார். தமிழ் மொழி செம்மொழி ஆவதற்கு இதுவே முக்கிய காரணம்.

 

«Prev