Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

 

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
 

* திருத்தப்பட்ட சம்பள விகிதங்களை 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல் செய்ய வேண்டும். படிகள் தொடர்பான பரிந்துரைகளை நம்பிக்கையுடன் அமல் செய்ய வேண்டும்.

* தற்போதைய ரூ.26,000 (நிலையானது)க்கு கீழ் சம்பள் பெறும் அரசு பதவிகளில் நிலவும் தேக்க நிலையை மாற்றும் வித்தில் தொடர் சம்பள தொகுப்புகள் அறிமுகம்.

* 4 குறிப்பிடத்தக்க தொடர் சம்பளத் தொகுப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பி மற்றும் சி பிரிவு ஊழியர்களின் அனைத்து இனங்களுக்கும் தலா ஒரு தொடர் சம்பளத்தொகுப்பு; ஏ பிரிவு பதவிகளுக்கு 2 தொடர் சம்பள தொகுப்பு.

* மத்திய அரசின் செயலாளர் பதவி மற்றும் அதற்கு இணையான பதவிகளுக்கும் அமைச்சரவை செயலாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளுக்கும் தெளிவான சம்பள விகிதங்கள்.

* 1எஸ் சம்பள விகிதம் என்ற ஒரு தனியான தொடர் சம்பளத் தொகுப்பை இனி கணக்கில் கொள்ளக்கூடாது; ஏனென்றால் இனிமேல் இந்த மட்டத்தில் இனிமேல் எதிர்காலத்தில் எந்த காரணத்திற்காகவும் ஆள் சேர்க்கை கிடையாது. தற்போது நிர்ணயிக்கப்பட்ட தகுதி பெறாத டி பிரிவு ஊழியர்கள் அனைவரும் உயர்த்தப்பட்டு சி பிரிவில் சேர்ககப்பட வேண்டும். அவர்கள் முறையான பயிற்சி பெற்றபின் பிபி-1 தொடர் சம்பள தொகுப்பில் இணைக்க வேண்டும். சி பிரிவில் குறைந்த பட்ச தகுதி பெற்றுள்ள அனைவரும் நேரிடையாக பிபி-1 தொட் சம்பள தொகுப்பில் இணைக்கப்பட வேண்டும்.

* பிபி-1 சம்பளத் தொகுப்பில் துவக்க கட்டத்தில் குறைந்த பட்ச சம்பளம் ரூ.6,600 ( இதில் ரூ. 4,860 சம்பளத் தொகுப்பு சம்பளம்; ரூ. 1,800 அந்த மட்டத்திற்கான சம்பளம்) செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவிகளுக்கு அதிக பட்ச சம்பளம் ரூ. 80,000. குறைந்த பட்சம் மற்றும் அதிகப்டசத்திற்கான விகிதம் 1: 12

 

* செயலாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவிகள் நீங்கலாக இதர பதவிகளுக்கு ஒரு தெளிவான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மட்டத்திற்கான சம்பளம் ( ஒவ்வொரு பதவிக்கும் நிலையான தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது) ஒரு பதவியின் அந்தஸ்தை நிர்ணயிக்கும் வகையில் சீனியர் பதவிக்கு உயர் மட்ட சம்பளமாக தரப்பட்டுள்ளது.

* தற்போதுள்ள 35 சம்பள விகிதங்கள், 20 சம்பள விகிதங்களாக, பரவலான அடிப்படையில் குறிப்பிடத்தக்க தொடர் சம்பளத் தொகுப்புகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு உயர்மட்ட சம்பள விகிதமும் மற்றொரு மட்டமாக அமைச்சரவை செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவியும் இருக்கும்.

* ஒரு பதவியிலிருந்து மற்றொரு பதவிக்கு பதவி உயர்வு பெறும்போது, அந்த மட்டத்திற்கான சம்பளம் மாறக்கூடும். கூடுதலாக பதவி உயர்வின்போது ஒரு இன்கிரிமென்ட் வழங்கப்படும்.

* வருடாந்திர இன்கிரிமென்ட், குறிப்பிட்ட கிரேடு சம்பளத்திற்கேற்ப, சம்பளத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த சம்பளத்தில் 2.5 சதவீதமாக இருக்கும். அனைத்து இனங்களிலும் வருடாந்திர இன்கிரிமென்ட் ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வரும். ஜூலை 1ம் தேதியன்று 6 மாதம் அல்லது அதற்கு மேல் பணியில் இருப்பவர்களுக்கும் இந்த இன்கிரிமென்ட் பொருந்தும்.

* ஏ பிரிவு சம்பளத் தொகுப்பு பிபி-3ல் மற்றொரு மாறுபட்ட இன்கிரிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருடாந்திர இன்கிரிமென்ட், பணியில் காட்டும் திறமை அடிப்படையில் இருக்கும். 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையிலும் பணியில் திறமை காட்டுபவர்களுக்கு ( 20 சதவீதம் பேருக்கு மிகாமல்) உயர்ந்த பட்சமாக 3.5 சதவீதம் அடிப்படையில் இன்கிரிமென்ட் வழங்கப்படும். பிபி1 மற்றும் பிபி2 தொடர் சம்பளத் தொகுப்புகளுக்கும் இந்த வேறுபட்ட இன்கிரிமென்ட் திட்டத்தை விரிவுபடுத்துமாறு அரசுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

 

பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட சம்பளத் தொகுப்புகள் வருமாறு:

 

 

*Employees in these scales to be eventually placed in pay band PB-1

 

 

* சிவிலியன்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு இணையாக, பாதுகாப்பு துறைக்கும் தொடர் சம்பள தொகுப்புகள் மற்றும் கிரேடு சம்பளங்கள் தரப்படும்.
 

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in