6வது மத்தியஊதியக் குழு , பல்வேறு தொழில்நுட்ப
புரட்சிகளை சந்தித்துள்ள இந்த நூற்றாண்டில்
அமைக்கப்ட்டுள்ள முதல் மத்திய ஊதியப் பொறுப்பாண்மைக்
குழு என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தகவலறியும்
சட்டம் , வருமான பொறுப்பாண்மை மற்றும் பட்ஜெட் மேலாண்மை
சட்டம் ஆகியன நடைமுறைக்கு வந்த பிறகு
உருவாக்கப்பட்டுள்ள முதல் அறிக்கை என்பது இதன்
சிறப்பம்சமாகும். இத்தகைய வலுவான வரையரைகளால் அரசு முன்
எப்போதும் இல்லாத அளவுக்கு தனது செயல் திறனை
முனைப்புடன் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆறாவது சம்பள குழு அறிக்கை புதிய சட்டங்கள்
புகுத்தியுள்ள நிபந்தனைகளை பிரதிபலிக்கும் வகையில்
புதுமைகளை புகுத்த முனைந்துள்ளது. இதன் அடிப்படையில்
ஆறாவது ஊதியக் குழு இரண்டு முக்கிய பரிந்துரைகளை முன்
மொழிந்துள்ளது; அவை
1. மத்திய அரசு அமைப்புகளை
சூழ்ந்துள்ள இரும்புத்திரையை விலக்கி நவீனமயமாக்குவதோடு,
அவற்றை மக்கள் விரும்பும் வகையில், மக்களை ஈர்க்கும்
வகையில் மக்களுக்காக சேவை செய்யும் அமைப்புகளாக மாற்ற
வேண்டும்.
2. வளர்ந்து வரும் சர்வதேச பொருளாதார நடப்புக்கு ஏற்ப
மத்திய அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்தி அமைக்க
வேண்டும்.
இத்தகைய சூழலில், ஆறாவது மத்திய ஊதியக் குழு அரசு
ஊழியர்களுக்கு சரியான சம்பள திட்டத்தை ஏற்படுத்துவதோடு
மட்டுமன்றி அரசு அமைப்பை நன்கு பகுத்தாய்ந்து சாமானிய
மனிதனும் தரமான சேவையை அனுபவிக்கும் படி பரிந்துரைகளை
முன்வைக்க வேண்டியுள்ளது.
ஆணையம்
1.நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா, (தலைவர்)
2.பேராசிரியர். ரவீந்திர தோலாக்கியா (உறுப்பினர் )
3.ஸ்ரீ ஜெ.எஸ் மாத்தூர் (உறுப்பினர் )
4.ஸ்ரீமதி சுசமா நாத் (உறுப்பினர் செயலாளர் )
தலைமைச் செயலகம்
1. ஸ்ரீமதி மதுலிகா பி. சுகுல் ( இணைச் செயலாளர் )
2.ஸ்ரீமதி சங்கீதா சிங் ( இணைச் செயலாளர் )
3.ஸ்ரீ மனோஜ் ஜோஷி ( ஆலோசகர் )
4. ஸ்ரீமதி ஷீலா பிரசாத் ( சிறப்பு அலுவலர் )
5.ஸ்ரீ அலோக் சேக்சேனா ( இயக்குனர் )
6. ஸ்ரீமதி தீபா.கெ.சங்கர் (இயக்குனர் )
7.ஸ்ரீ என்.கெ மிஷ்ரா, (துணை செயலாளர் )
8.ஸ்ரீ உதய் பி.அப்சிங்கேக்கர் ( துணை செயலாளர் )
9.ஸ்ரீ எஸ்.டி சர்மா ( நேருதவிச் செயலர் )
10.ஸ்ரீ வி.கே சின்ஹா ( நேருதவிச் செயலர் )
11.ஸ்ரீ ஜி.எஸ். பான்வார் ( நேருதவிச் செயபர் )
12.ஸ்ரீ ஹரீச் பொக்ரியால் ( நேருதவிச் செயலர் )
13.ஸ்ரீ மனோஜ் பான்டே ( தனிச் செயலாளர் )
14.ஸ்ரீ டி.ஏ சன்னி ( தனிச் செயலாளர் )
15. ஸ்ரீ தலீப் சிங் ( உதவியாளர் )
16. ஸ்ரீ ராமகிருஷ்ணன் ( உதவியாளர் )
17. ஸ்ரீ ரன்ஜன் கிரி ( உதவியாளர் )
அறிமுகம் முகப்பு
ஆறாவது மத்திய ஊதிய குழுவின் உருவாக்கம்
1.1.1 இந்திய அரசு ஆறாவது மத்திய ஊதியக் குழுவை அரசாணை
எண் 5/2/2006உ 3 (அ) வின் படி அக்டோபர் 5, 2006 ஆம்
ஆண்டு உருவாக்கியது.
குறிப்புரையின் கோட்பாடுகள்
1.1.2 ஆணையக் குறிப்புரையின் கோட்பாடுகள் :
அ. கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் பட்டியலுக்கு
இணங்க , அவர்களுக்கு உரித்தான படிகள், ஊதிய அமைப்பு,
சலுகைகள் மற்றும் ஏனைய உதவிகள் குறித்தும் அவற்றை அமல்
படுத்துவதற்கான கால நிலை பற்றியும் , சலுகைகளை பணமாகவா
அல்லது பொருளாகவா எந்த முறையில் வழங்கப்படலாம் என்பது
குறித்தும் ஆராய்ச்சி செய்தல்.
1. மத்திய அரசு ஊழியர்கள் தொழிற்சாலை பணியாளர்கள்
மற்றும் இதர பணியாளர்கள்
2. அனைத்து இந்திய சேவைகள் பணியாளர்கள்
3. பாதுகாப்புத் துறை பணியாளர்கள்
4.யூனியன் பிரதேச ஊழியர்கள்
5.இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பதிவியல் துறை
ஊழியர்கள்
6.கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் ( ரிசர்வ் வங்கி
ஊழியர்கள் தவிர )
ஆ. மத்திய அரசு அமைப்புகளை நவீனப்படுத்தி அவற்றை மக்கள்
விரும்பும் தொழிற்கூடங்களாக மாற்றியமைப்பதோடு
மட்டுமன்றி மக்களுக்கு சேவையாற்றும் நிறுவனங்களாக
உருவாக்குதல்.
இ. ஏ பிரிவில் குறிப்பிடப்பட்ட மத்திய அரசு
ஊழியர்களுக்கு கனிசமான ஊதிய உயர்வு வழங்குதல். ஏனெனில்
அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு அர்களது ஆற்றலை
வெளிக்கொணர்வதோடு மட்டுமன்றி சங்கிலித் தொடர் போல்
பொருளாதார வளர்ச்சி, பொறுப்பாண்மை, தெளிவு,
தொழில்நுட்பத்தையும் ஒழுங்குமுறையையும் உள் வாங்கிக்
கொள்ளுதல் என வளர்ச்சி பாதையில் முற்பட ஏதுவாக அமையும்.
ஈ. மத்திய அரசு நிறுவனங்களை சர்வதேச பொருளாதார
நடப்புக்கு இணங்க செயல்படவைத்தல். இவ்வாறான தர மேம்பாடு
மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை கவனத்தில் கொள்ளும்.
அது மட்டுமின்றி நடைமுறையில் இருக்கும்
ஊதியத்திட்டத்தையும் ஓய்வுக்குப் பின் கிடைக்கும்
சலுகைகளையும் எளிமையாக்க உதவும். நாட்டின் பொருளாதார
நிலையை மேம்படுத்தவும் ,சமூக நலனை உயர்த்தவும்,
தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவும் இந்த ஊதியக் குழு
பரிந்துரைகள் துணையாக இருக்கும். எனவே ஆறாவது மத்திய
ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றும் மாநிலங்கள்
நற்பயன் அடையும் என தெரிகிறது.
உ. ஜனவரி 1 2004 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அன்றைய
தேதியிலும் மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களின்
பென்ஷன் ,இறப்பு மற்றும் ஓய்வுக்கு பிறகு அளிக்கப்படும்
கிராஜூவிட்டி ஆகியவற்றை திட்டமிதலில் அதீத கவனம்
செலுத்தி ஆராய்தல்.
ஊ . நடைமுறையில் இருந்து வரும் போனஸ் வழங்கும் பாங்கினை
திருத்தி அமைக்க பரிந்துரை செய்துள்ளது. அதாவது
தோரயமாக போனஸ் வழங்குவதை காட்டிலும் (கஃஐகு) உற்பத்தி
திறன் சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை அமல் படுத்துவது
பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும்.
எ . குழுவின் பரிந்துரைகளை அரசு பின்பற்றுவதற்க்கு முன்
இடைக்கால நிவாரனம் குறித்த அனுகூல காரணிகள் பற்றி
ஆராய்தல்.
* மத்திய நிதி அமைச்சகம் ஆணை எண் 5/2/2006
E
.III (அ)
டிசம்பர் 07 ,2006