கூடுதல் குறிப்புரை கோட்பாடுகள்
1.1.3 ஆணை எண் 5/2/2006 E
.III .(அ) யைத் தொடர்ந்து
சுப்ரிம் கோர்ட் ஊழியர்கள் மட்டும் அதிகாரிகள் குறித்த
விவரங்களை உள்ளடக்குவதற்காக ஆகஸ்ட் 8 2007 ஆம் ஆண்டு
குறிப்புரை விரிவாக்கம் செய்யப்பட்டது.
பின்னணி : 1.1.4 ஐந்தாவது ஊதியக் குழு நிரந்தரமாக ஊதிய
வரைவு ஆணையம் நிறுவ பரிந்துரைத்தது. இல்லையேல் அதற்கு
பதிலாக அகவிலைப் படியை ,ஒவ்வொரு முறை வாழ்வதற்கான செலவு
அடிப்படை நிலையில்இருந்து 50% உயரும் போதும்,
உயர்த்தலாம் என யோசனை வழங்கியுள்ளது. ஏனெனில்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி 50% உயருவதாக
கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதியக் குழு அறிக்கையில்
அடுத்த ஊதியக் குழுவை 2003 ஆம் ஆண்டு அமைக்க
வலியுறுத்தியது. ஆனால் அவ்வாறு அமைக்கப் படவில்லை.
இருப்பினும் 1/4/2004 அன்று 50% அகவிலைப்படியை
அனுமதித்து ஒப்புதல் அளித்தது.
குழு கட்டமைப்பு
1.1.5 ஆறாவது மத்திய ஊதியக் குழு ஒரு தலைவரும் மூன்று
உறுப்பினர்களும் கொண்டது.
1 . தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா
2. பேராசிரியர் ரவீந்திர தோலாக்கியா (உறுப்பினர் )
3. ஜெ.எஸ் மாத்தூர் ( உறுப்பினர் )
4. ஸ்ரீமதி சுஷ்மா நாத் ( உறுப்பினர் )
இதில் ஜெ.எஸ் மாத்தூர் பிப்ரவரி 2008 ல் இயற்கை
எய்தினார். அறிக்கையில் உள்ள அவரது பங்களிப்பு
நன்றியுடன் நினைவு கூறப்படுகிறது.
குறிப்புரையின் சிறப்பம்சங்கள் :
1.1.6 முந்தைய ஊதியக் குழு பரிந்துரைகளில் இருந்து
சற்றே மாறுபட்டதாக அமைந்துள்ளது தற்போதைய ஊதியக் குழு
குறிப்புரை. இதறகு முந்தைய கமிஷன்கள் பணிச் சூழலையும்
, பணி முறையையும் ஆராய்ந்து , செயலாற்றலை
மேம்படுத்துவதிலும், தொழிலாளர் எண்ணிக்கை
விரிவாக்கத்திலும் கவனம் செலுத்தியது. ஆனால் ஆறாவது
மத்திய ஊதியக் குழு முதன் முறையாக மக்களுக்கு சேவை
செய“யும் அரசு ஊழியர்கள் உடன் நேரடி தொடர்பு உடைய
டெலிவரி மெக்கானிசத்தில் பார்வையை பதித்துள்ளது.
குறிப்புரையின் உட்பிரிவு பி அரசு நிறுவனங்களை
நவீனமாக்கி, மக்கள் விரும்பும் அமைப்பாக மாற்ற வேண்டும்
என்ற கருத்தை முன் வைத்துள்ளது. அதோடு மட்டுமின்றி
மத்திய அரசு நிறுவனங்கள் வளர்ந்து வரும் சர்வதேச
பொருளாதார மாற்றங்களுக்கு இணங்க தனது செயல்பாட்டை
மாற்றி அமைத்தல் இன்றியமையாததாகும் என்பதை தெளிவாக
எடுத்துரைத்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை 6 வது
ஊதியக் குழு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கமிஷனின்
கடைடையாக்கப் பட்டுள்ளது.
1.1.7 எனவே ஆறாவது மத்திய ஊதியக் குழு சரியான ஊதியத்
திட்டத்தை அமல் படுத்துவதோடு மட்டுமன்றி , அரசு அமøப்பை
நன்கு பகுத்தாய்ந்து சாதாரன மக்கள் பயன்படும் வகையில்
செயல் விளைவு நுட்பங்களை மேம்படுத்துனதற்கான வழிவகைகளை
பரிந்துரை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. கமிஷனின்
வழிகாட்டும் சாராம்சமாக ஊதியத் திட்டத்தை; பொறுப்பாண்மை,
தொழில் நுட்பங்களை உள் வாங்கி நடைமுறைப் படுத்துதல்
ஆகியவற்றுடன் இணைப்பதாக இருக்கிறது.
லட்சியம் நிறைவேற பின்பற்றப்பட்ட வழிவகைகள்:
1.1.8 அரசு நிறுவனங்களில் உள்ள நீண்ட அடுக்குகளை
குறைப்பதன் மூலம் மேல்மட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை செயலாக்க பரிவில் இருப்பவர்கள் öளிதாக
குளறுபடியின்றி முடிக்க முடியும் என்றும் எனவே
அடுக்குகளை குறைப்பது நலம் என பரிந்துரைக்கப்
பட்டுள்ளது. இதனை அடுத்து தேவைக்கு அதிகமான அடுக்குகள்
பல நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான
எளிமையாக்கும் முறைகள் அரிக்கை முழுவதும் பரவலாக
காணலாம். புழக்கத்தில் இருந்து வரும் 35 ஊதிய வரைவானது
4 நடப்பு பொது ஊதியத் திட்டத்தினால் மாற்றியமைக்கப்
பட்டுள்ளது.( 1ற பிரிவை தவிர்த்து ). கேபினட்
செக்ரட்டரி பதவிகளுக்கும் அதற்கு நிகரான பதவிகளுக்கும்,
பணி அமர்த்தப்படுபவர்களுக்கு தனிச் சிறப்பான ஊதிய வரைவு
ஒதுக்கபகபட்டுள்ளது. பி.ஆர்.ஐ.எஸ் அதாவது செயல்திறன்
சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊழியர்கள் முனைப்புடன் செயல்பட்டு திறமைக்கு ஏற்ப
ஊக்கத் தொகை பெற முடியும். மேலும் செயலாக்கமும்
துரிதமாக இருக்கும். இதே வேலைக்கு ஆட்களை தெரிவு
செய்யும் முறையிலும் மாற்றம் தேவை என அறிக்கை
வலியுறுத்துகிறது. துடிப்பும் வேகமும் நிறைந்த
இளைஞர்களை பணி அமர்த்துவது பொருளாதார வளர்ச்சிக்கு வழி
வகுக்கும் என ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்
மூலம் அரசு ஊழியர்கள் மீது சம்பளமாகவோ,படிகளாகவோ,ஊக்கத்
தொகையாகவோ செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொது
மக்கள் சேவøக்காக, நாட்டு நலனுக்காக அரசு செய்யும்
உபயோகமான செலவாகும்.
ஊதியக் குழு தனது குறிப்புரை ஒரு முழுமையான ஆவணம்
என்றும் அதை பிரித்தாள்தல் சாத்தியமற்றது என்றும்
திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது. எனவே ஏதாவது திருத்தம்
மேற்கொள்ளப் படுமாயின் அது விளைவில் பாதிப்பை
ஏற்ப்படுத்தும்.
ஆராய்ச்சி முறை :
1.1.9 கமிஷன் பிரத்யேகமாக புது யுக்திகளை தனது
ஆராய்ச்சி முறைக்கு பயன்படுத்துவதற்கான அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. ஆர்ய்ச்சியின் ஒரு பகுதியாக
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மாநில அரசு,
யூனியன் பிரதேசங்கள்,அமைச்கங்கள்,அரசு துறைகள் பொது
மக்கள், மக்கள் பிரதிநிதிகள்,நுகர்வோர் அமைப்புகள்,
ஊழியர் சங்கங்கள் என பலதரப்பட்டவர்கள் பங்கேற்று தங்கள்
பொதுவான எண்ணங்களை 31 டிசம்பர் 2006 அன்று வரை
தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். சப்ரிம் ÷õõர்ட்
அலுவலர்கள் ஊதியக் குழு பட்டியலில் இணைக்கப் பட்ட பிறகு
அவர்களது கருத்தும் 31 ஆகஸ்ட் 2007 க்குள் தெரிவிக்க
அனுமத்க்கப்பட்டனர். மேலும் தகவல் சேகரிப்பதற்கு வினா
வரிசை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆன் லைனில்
பதிலளிக்கவும் வசதி செய்யப்பட்டது. வினா வரிசைக்கு
கிடைத்த பதில்கள் ஒரு தொகுப்பாக அறிக்கையின் இணைப்பில்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்கள் தங்கள்
நிவலப்பாட்டை தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு
மாநிலத்துக்கும் வினா வரிசை அனுப்பப்பட்டது. இதே போல்
பார்லிமென்ட் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட
கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் வினா வரிசை
அனுப்பப்பட்டது.
கமிஷனின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர்
கீழ் காணும் பிரிவுகளை ஆராய்ந்தனர் :
செயல் திறன் பொருத்த ஊக்கத் தொகை (பி.ஆர். ஐ)
அரசு ஊழியர்கள் இழப்பீடு கட்டமைப்பு மற்றும் அரசுக்கு ஏற்படும் செலவு பற்றி
ஆராய்ச்சி
மத்திய அரசு ஊழியர்களுக்கான இறுதி கட்ட பயனீட்டு உறுதி பற்றிய ஆராய்ச்சி
( மேற்கூறிய ஆய்வறிக்கைகள் பற்றிய முழு விவரங்கள் அறிய
ஆறாவது ஊதியக் குழு வின் இணைய தளத்தை
http://www.india.gov.in/govt/paycommission.php
பார்க்கவும்.) ஜனவரி 16, 2007, முதல் கமிஷன் மேலும்
தகவலறிய தனது ஆய்வின் ஒரு பகுதியாக பொதுக்
கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. பொதுக் கூட்டங்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டது. இந்த
பொதுக் கூட்டங்கள் மூலம் கமிஷன் பல மாநில தலைமைச்
செயலர்கள், துறை சார்ந்த தலைவர்கள் ஆகியோரிடமிருந்து
தனிப்பட்ட கருத்தைக் கேட்டறிய ஏதுவாக இருந்தது. பொதுக்
கூட்டங்கள் புதுடில்லி, மும்பை, கோல்கட்டா, போர்ட்
பிளேர், குவஹாத்தி, சென்னை,புதுச்சேரி, அகமதாபாத்,
காந்திநகர், பெங்களூரூ, ஸ்ரீநகர், கார்கில்,லேஹ்
மற்றும் ஐதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. இந்த பொதுக்
கூட்டங்களின் போது கனிசமான அளவுக்கு ஆவணங்கள் ஊதியக்
குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ( கமிஷனுக்கு தகவல்
அளித்த யூனியன்கள்,பொதுக்குழுக்கள், கூட்டமைப்புகள்
மற்றும் பிரபலங்கள் பற்றிய பட்டியல் ஆறாவது மத்திய
ஊதியக் குழு அறிக்கை இவணப்பு 1.1.1 ல் அடங்கியுள்ளது.)