* பொதுத் துறை மற்றும் தனியார் துறை ஒரு ஒப்பிடுதல்
* சம்பள வடிவமைத்தல் மற்றும் வரையரைத்தல் மீதான பொதுப்
பரிந்துரைகள்
* பாதுகாப்பு தறையினருக்கான சம்பள படிகள்
* பாதுகாப்பு தறை அதிகாரிகளின் இட மாற்றம்
* செயலாக்கம் பொருத்த ஊக்கத்தொகை நிர்ணயம்
சம்பள நிர்ணயம் மற்றும் சம்பள விகித கொள்கைகள்
2.1.1. குறிப்பிடுதல் நடைமுறைகள் : குறிப்பிடுதல்
நடைமுறைகளின் படி கமிஷன் மற்ற காரணங்களை விட பொதுத்துறை
நிறுவனங்களில் வழக்கத்தில் உளள சம்பள முறை, ஓய்வூதிய
பலன்களை பார்க்க வேண்டும். 4வது சம்பள கமிஷனும் இதே
போல சம்பள முறை, ஓய்வூதிய பலன்களை கருத்தில் கொண்டு
குறிப்பிடுதல் நடைமுறையை விளக்கியது. 5வது சம்பள
கமிஷனில் பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒப்பீடு
குறிப்பிடுதல் நடைமுறையின் பகுதி அல்ல. அதில்
பொதுத்துறை நிறுவங்களின் தகவல்களை மட்டுமே
திரட்டப்பட்டிருந்தது. வரி விதிப்பு, உழைப்பூதிய
மாற்றம் நேரடி ஒப்பீடு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
முந்தைய சம்பள கமிஷன்களின் அணுகுமுறை
2.1.2. 4வது சம்பள கமிஷன் குறிப்பிடும் போது,
பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பிடுவதற்கு ஏற்றவகையில்
அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. அதில் பல
வித்தியாசங்கள் உண்டு. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்
மத்திய அரசு நிறுவனங்களின் லாபம், ஊழியர்கள், வேலையின்
தன்மை வித்தியாசப்படுகிறது. இதனால் இவற்றை ஒப்பிடுவது
சற்று கடினமான விஷயமாகும். பெரிய மற்றும் சிக்கலான
அமைப்புடைய அதாவது மத்திய அரசு நிறுவனங்களின் சம்பள
முறை , பொதுத்துறை நிறுவன சம்பள முறையுடன்
ஒப்பிடுவதற்கு எளிதானது அல்ல. குறிப்பிட்ட
காரணங்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்படும்
பொதுத்துறை நிறுவனங்கள் சம்பளம் பெறும் முறையில்
தன்னிச்சையாக முடிவெடுக்கின்றன. அவற்றின் சேவை மற்றும்
வேலையின் தன்மை வேறுபடுகிறது.
2.1.3. 5வது சம்பள கமிஷனும் இதே கருத்தை
தெரிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களும், மத்திய
அரசு நிறுவனங்களும் ஒரே மாதிரியான சம்பள முறையை
பெற்றிருக்கவில்லை. எனவே அவற்றை ஒப்பிடுவது கடினமான
து. எனவே நேரடியான ஒப்பீடு செய்வது
பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் சம்பளம் கணக்கிடுதல்
2.1.4. பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுவதில்
முந்தைய நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில்
வித்தியாசம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களின்
வர்த்தகரீதியான நடைமுறை தற்போதைய போட்டி சூழ்நிலையில்
அவசியமாகிறது. இரு நிறுவனங்களுக்கும் இடையேயான சம்பள
முறையை ஒப்பிட முடியாது. மேலும் இரண்டின் உட்பொருள்
ஒத்துள்ளதால் ஒப்பிட இயலாது. இருப்பினும் சம்பள கமிஷன்
பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஊழியர்கள் சம்பள
முறை குறித்து கணக்கிட்டு, அதன் படி ஒப்பிட முடியுமா
என ஆராயப்பட்டது. பொதுத்துறையில் பல முடிச்சுகளாக
துறைகள் உள்ளன. இதில் யூனியன் சார்ந்த ஊழியர்கள்,
யூனியன் சாராத கண்காணிப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும்
போர்டு உறுப்பினர்கள். இந்த துறையில் 4 பிரிவுகளாக
பிரிக்கலாம். ஏ.பி.சி மற்றும் டி என்ற பிரிவுகளில்
நிறுவனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அளவு
சார்ந்தவைகளான முதலீடு, வேலையின் அளவு, மொத்த விற்பனை,
வரி வருமான லாபம், ஊழியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றையும்
பண்பு சார்ந்தவைகளான, தேசிய முக்கியத்துவம்,
தொழில்நுட்ப அளவு, விரிவாக்கும் திட்டம் மற்றும்
பல்வகைபடுத்துதல் போன்றவையும் அடிப்படையாக கொண்டு
பிரிக்கப்படுகிறது. தொழில் தந்திரங்களும் இதில்
அடங்கும். பொதுத்துறையில் தலைமை எக்ஸிகியூட்டிவ்
மற்றும் முழுநேர இயக்குனர்கள் ஆகியோரது அடிப்படை
சம்பளம் அந்தந்த நிறுவனங்களின் செயல் முறை அடிப்படையில்
கணக்கிடபட்டது. 31-03-06ல் 245 பொதுத்துறை
நிறுவனங்களில் 52 ஷெட்யூல் ஏ, 87 ஷெட்யூல் பி, 54
ஷெட்யூல் சி, 7 ஷெட்யூல் டி நிறுவனங்களாகும். மற்றவை
இன்னும் பிரிக்கப்படவில்லை. ஏறக்குறைய 3.65 ஊழியர்கள்,
அதாவது மொத்தத்தில் 22% பேர் கண்காணிப்பாளர், மேனேஜர்
பதவிகளில் உள்ளனர். 78 % பேர் யூனியன் சாராத ஊழியர்கள்.
முக்கியமான பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்
நிறுவனங்கள் பெரும்பாலும் இண்டஸ்டிரியல் டியர்நெஸ்
அலவன்ஸ் முறையை பின்பற்றுகின்றன. சில சமயங்களில்
அடிப்படை சம்பளம் சென்ட்ரல் டியர்நெஸ் அலவன்ஸ் முறையை
பின்பற்றி தரப்படுகிறது. 16.49 லட்சம் ஊழியர்களில்
ஏறக்குறைய 86 % ஊழியர்கள் மற்றும் எக்ஸிகியூட்டிவ்கள்
இண்டஸ்ட்டிரியல் டியர்நெஸ் அலவன்ஸ் முறையில்
பெறுகின்றனர். மற்றவர்களுக்கு சென்ட்ரல் டியர்நெஸ்
அலவன்ஸ் முறையில் வழங்கப்படுகிறது.