Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

*2.1.5. பொதுத்துறையில் சம்பள மறுஆய்வு

போர்டு உறுப்பினர்கள், எக்ஸிகியூட்டிவ்கள் மற்றும் யூனியன் சாராத கண்காணிப்பாளர்களுக்கான சம்பள மறுஆய்வு இண்டஸ்ட்டிரியல் டியர்நெஸ் அலவன்ஸ் முறையில் வழங்கப்படுகிறது. இந்த சம்பள மறுஆய்வு 1997ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக இருந்தது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்றப்பட்டது. சமீபத்திய சம்பள கமிஷன் 2006ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அமைக்கப்பட்டு 18 மாதங்களில் அதன் பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த குழுவின் குறிப்பிடல் செயல்திட்டம் வலியுறுத்துவது என்னவென்றால் 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பரிந்துரைகளின் மீது மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் 1.1.2007 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.

2.1.6. ஊழியர்களுக்கான சம்பள மறுஆய்வு

ஊழியர்களுக்கான சம்பளத்தை மறு ஆய்வு செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய சுதந்திரம் அளித்துள்ளது. 10 வருடத்திற்கு ஒரு முறை நூறு சதவீத நியூட்ரல் டியர்நெஸ் அலவன்ஸ் முறை அல்லது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கிரேடட் நியூட்ரலைசேஷன் முறையில் சம்பள மறு ஆய்வு செய்ய அரசு அனுமதித்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. சில பொதுத்துறை நிறுவனங்கள் 100 சதவீத இண்டஸ்ட்டிரியல் டியர்நெஸ் நியூட்ரலைசேஷன் முறையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள மறுஆய்வு செய்கின்றன.

2.1.7. மத்திய கிராக்கிப்படி முறையில் சம்பள மறுஆய்வு

ஊழியர்களுக்கு மத்திய கிராக்கிப்படி முறையில் சம்பளம் வழங்குதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை ஒத்திருக்கிறது. 5வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் இந்த முறையில் சம்பளம் பெறுபவர்களுக்கு 1.1.96 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அடிப்படை சம்பளத்துடனான கிராக்கிப்படி முறை மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு 1.4.04 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் நஷ்டமடையாமல் அதன் செலவுத்தொகையை கண்காணித்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் மத்திய அரசு ஆதரவளிக்கிறது.

 

சம்பளம் நிர்ணயித்தலின் தற்போதைய நிலை

2.1.8 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சம்பள விகிதம் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ( வழக்கமாக அது 1.1.207ல் நடத்தப்பட வேண்டும்), அந்தந்த துறை நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெறும் என்று 2006, நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மூலாதாரங்கள் அல்லது லாபத்தைக் கருத்தில் கொண்டு இந்த பேச்சுவார்த்தை சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு தனது வழிகாட்டுதல் குறிப்பில் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வுக்கென அரசு, தனது பட்ஜெட்டில் நிதி எதையும் ஒதுக்காது. அந்தந்த நிறுவனங்கள் இத்தகைய அதிகரிக்கப்படும் சலுகைகளுக்கான மூலாதரங்களை தங்களுடைய உற்பத்தி திறன் மற்றும் லாப அதிகரிபிலிருந்தே ஈடு செய்து கொள்ள வேண்டும்; அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இந்த பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் சம்பள உடன்பாடு 1.1.2007 முதல் 10 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த தேதியில் உள்ள கிராக்கிப்படி மொத்தமாக சம்பளத்துடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களும் இத்தகைய பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் உடன்பாட்டை அமல் செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவைச் சரிகட்ட மூலாதாரங்களை எப்படி அதிகரிக்கப் போகிறது என்பது குறித்து, தங்களுடைய அமைச்சகத்திற்கு அறிக்கை தர வேண்டும். நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களில் சம்பளத்தை திருத்தி அமைக்க வாய்ப்பில்லை.

பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுடைய பல்வேறு அமைப்புகள் சம்பளகமிஷனுக்கு குறைந்த பட்ச ஊதிய விகிதமாக மாதத்திற்கு 10ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க நிர்ணயித்து கோரிக்கை வைத்திருக்கிறது. இது 15வது சர்வதேச தொழிலாளர்களின் ஆலோசனையின் விதியுடன் மூன்று பிரிவுகள் கொண்டது. அதாவது 1.1.2006ன்படிகுடும்பத்திற்கு ஆகும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் செலவினங்களை கருத்தில் கொண்டு பொதுவினியோக முறை விகிதம் அல்லது சந்தைவிகிதம் மற்றும் தனியாக மருத்துவ வசதி/கல்வி ஆகிய பிரிவுகளை கொண்டது.இதன் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் ரூபாயாக கணக்கிட்டு சம்பளகமிஷனுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

(22.15) குறைந்தபட்ச ஊதியம் -ஆய்வு மற்றும் பரிந்துரைகள்

1.1.2006ன்படி பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரமாக கணக்கிட்டதைப்போல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கபடவேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்களின் பலவேறு அமைப்புக்கள் கோரிக்கை வைத்திருக்கிறது. இவ்வாறு இருக்க 6வது சம்பள கமிஷன் கருத்துப்படி, குறைந்தபட்ச ஊதிய விகிதமாக நிர்ணயித்து(அடிப்படை சம்பளமாக ரூ.4860+1800) என்ற விகித்தில் பிபி1 பிரிவுக்கு நிர்ணயித்திருக்கிறது. ஜெ.சி.எம் ஊழியர்கள் கோரிக்கைப்படி மத்திய அரசு அளித்து வரும் வீட்டுவசதிப்படி, கல்வி மற்றும் மருத்துவபடியை மாற்றமில்லாமல் குறைந்த பட்ச ஊதிய விகிதமாக ரூ.5479 இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அதேவேளையில் மத்திய அரசு ஊழியர்கள் டி.ஏ மற்றும் மருத்துவப்படிகள் உள்பட மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10ஆயிரம் வழங்க வலியுறுத்துகிறது.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in