அத்தியாயம் 4.1
அகவிலைப்படி
முன்னுரை:
* பணவீக்கத்தின் காரணமாக, அடிப்படை சம்பளத்தின் உண்மையான மதிப்பு குறையாமல்
பாதுகாக்க அகவிலைப்படி நிர்ணயம் அவசியமாகிறது. இதனால், ஊழியர்களுக்கு
வழங்கப்படும் அகவிலைப்படி என்பது பணவீக்க அளவுடன் பரஸ்பர தொடர்புடையது.
முந்தைய சம்பள கமிஷன்களின் பார்வை:
* அகவிலைப்படி நிர்ணயத்தில் முந்தைய சம்பள கமிஷன்கள் தங்களுக்கு ஏற்ற
ஆய்வுமுறைகளுடன் அளவிலும், விகிதத்திலும் காலாகாலத்தில் உரிய மாற்றங்களை
ஏற்படுத்தியுள்ளன.
ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள்:
* அனைத்து மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கும் ஈடுகட்டும் விதத்தில் சமச்சீராக
100 சதவீத அகவிலைப்படி அளிக்க ஐந்தாவது மத்திய சம்பள கமிஷன் பரிந்துரை
செய்துள்ளது. ஒவ்வொரு முறையும், அகவிலைப்படியை அகவிலை சம்பளமாக மாற்றினால்,
அடிப்படை குறியீட்டில் நுகர்வு விலை குறியீடு (சி.பி.ஐ.,) 50
சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும். இதில், ஓய்வுகால பலன்களும் அடக்கம்.
அகவிலை சம்பளம் உட்பட அகவிலைப்படி அனைத்தும் வரி விதிப்புக்கு உட்படும். இது
நடைமுறைக்கு ஒத்து வராது. ஒவ்வொரு பிரிவு ஊழியருக்கும் ஒவ்வொரு குறியீடு
நிர்ணயிக்க முடியாது என்பதால், சம்பள கமிஷன் இதை சாதகமாக எடுக்கவில்லை.
இதனால், 1982ன் அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டு (சி.பி.ஐ., ஐ.டபிள்யு.,)
அடிப்படையில் 12 மாதத்தின் சராசரி சம்பளம் அகவிலைப்படி நிர்ணயத்துக்கு
கணக்கிடப்பட்டது.
தற்போதைய நிலை:
* தொழிற்சாலை ஊழியர்களுக்கான அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டு
அடிப்படையில் (ஏ.ஐ.சி.பி.ஐ.,) தான், பணவீக்கத்தை மதிப்பிட்டு (982=100),
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
ஏ.ஐ.சி.பி.ஐ.,யின் 12 மாத சராசரியை ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை முதல்
தேதி கணக்கிட்டு, அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. ஏ.ஐ.சி.பி.ஐ.,
அடிப்படையில் தான் அகவிலைப்படி அதிகரிப்பது தொடர்பாகவும்
முடிவெடுக்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கான ஈட்டுத் தொகையும் ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை முதல் தேதி கணக்கிடப்படுகிறது. கடந்த 1996 ஜனவரி
1 முதல் 2004 ஜனவரி 1 வரை மத்திய அரசு அளித்த
அகவிலைப்படி விகிதம் குறித்த விபரம்:
* கடந்த 2004 ஏப்ரல் 1 முதல், அகவிலைப்படியின் 50 சதவீதம் அடிப்படை
சம்பளத்துடன் இணைக்கப்பட்டது. 1996 ஜன., 1ம் தேதிக்கான அகில இந்திய நுகர்வு
விலை குறியீடு 306.33 என்ற அடிப்படையில் இது கணக்கிடப்பட்டது. அதன்படி,
1.7.04 முதல் 1.7.07 வரை பின் வரும் அகவிலைப்படி விகிதம் ஒதுக்கப்பட்டது.
|
|
இதன் விளைவாக, அரசு ஊழியர்களின் சம்பளம் 100 சதவீதத்துக்கும் மேலாக
ஈடுகட்டப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
தற்போதுள்ள அகவிலைப்படி கணக்கீடு கீழ்காணும் மாறுதலுடன் இருக்க வேண்டும் என
கமிஷன் முன்பாக வலியுறுத்தப்பட்டது.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படியை மறுதிருத்தம் செய்வதை மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும்.
* அகவிலைப்படியின் 50 சதவீதத்தை சம்பளத்துடன் அகவிலை சம்பளமாக மாற்றும்
ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரையை 25 சதவீதம் என்ற அளவில் திருத்த வேண்டும்.
பணவீக்க ஆய்வு அளவீடு:
* பணவீக்கத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு, அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.
அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டின் படி, "லாஸ்பெயரே' என்ற கணக்கீட்டு
முறை இதற்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலவரத்தில் வாங்கப்படும்
பொருட்களின் விலையை, அடித்தள வருடாந்திர விலையுடன் ஒப்பிட்டு பணவீக்க
குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
* பொதுவாக ஒரு பொருளின் விலை உயரும்போது அந்த பொருளின் நுகர்வு
குறைகிறது.விலை உயர்ந்த பொருளின் நுகர்வை குறைத்தும், விலை குறைந்த பொருளின்
நுகர்வை அதிகரித்தும் நுகர்வோர் ஒருவர் பொருளின் வாங்கும் திறனை
சமன்படுத்துகிறார். இந்த நுகர்வு முறையும் பணவீக்கத்தின்போது
கணக்கிடப்படுகிறது. விலையில் ஏற்படும் மாற்றம், நுகர்வில் ஏற்படும் மாற்றம்
ஆகியவை பணவீக்கத்தில் கணக்கிடப்படுகிறது. இந்த "செயின் பேஸ் இண்டக்ஸ்'
என்பது "லாஸ்பெயரே' இண்டக்ஸை விட குறைவானது. அடிப்படை பொருட்களின் விலையில்
மாற்றம் ஏற்படும்போது, சில சமயங்களில் செயின் பேஸ் இண்டக்ஸ் அதிகரிக்கவும்
வாய்ப்புள்ளது.
* தற்போது இந்தியா வளர்ச்சி பாதையில் உள்ளது. வளர்ச்சி என்பது
மாற்றுப்பொருட்கள் அதிகம் இருப்பதை காட்டுகிறது. மாற்றுப்பொருட்கள் அதிகம்
இருப்பது தேவை - விலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். நுகர்வு செலவின
சர்வே குறித்து தேசிய சாம்பிள் சர்வேஅமைப்பு நடத்திய ஆய்வில், உணவு, ஆடை
உட்பட சில முக்கிய பொருட்களின் விற்பனை அளவீடு மற்றும் விலை விபரங்கள் தான்
தெரிய வந்தது. தனிநபர் நுகர்வு பொருட்கள் குறித்து போதிய விபரங்கள் தெரிய
வாய்ப்பில்லை.
.