Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

 

"செயின் பேஸ் இண்டக்ஸ்'க்கு பரிந்துரை:

* பணவீக்கத்தை அறிய பொருட்களின் விலை மற்றும் தேவை அடிப்படையில், செயின் பேஸ் இண்டக்ஸ் உருவாக்குவது அவசியம். காலாகாலங்களில் தொடர்ச்சியான புள்ளி விபரங்களுடன் நுகர்வு செலவின சர்வே நடத்தப்பட வேண்டும். இதில் நுகர்வு பொருட்களின் அளவீடு மற்றும் செலவின விபரங்கள் தெரிய வரும்.

அகவிலைப்படி மதிப்பீட்டில் நுகர்வு விலை குறியீட்டின் பயன்:

* அகில இந்திய நுகர்வு விலை குறியீடு (ஏ.ஐ.சி.பி.ஐ.,) அடிப்படையில் தான் ( 1982= 100), தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. நான்காவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டபோதே, அந்த குழு அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டுக்குப் பதிலாக வேறு ஏதேனும் குறியீட்டு முறையை கண்டுபிடிப்பதன் அவசியம் குறித்து அரசிடம் வலியுறுத்தப்பட்டது. காரணம், அரசு ஊழியர்களின் நுகர்வு முறைக்கு ஏற்றவாறு அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டு முறை இருப்பதில்லை. அரசு ஊழியர்களின் நுகர்வுக்கு தகுந்த புதிய குறியீட்டு முறை இருத்தல் அவசியம் என வலியுறுத்தப்பட்டது. ஐந்தாவது சம்பள கமிஷனும் விலை குறியீட்டு முறையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அதாவது, மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி, டி ஊழியர்களின் சம்பள விகிதத்துக்கு ஏற்றவாறு அவர்களின் நுகர்வும் வேறுபடுகிறது என சுட்டிக்காட்டப்பட்டது. ஒவ்வொரு பிரிவு ஊழியர்களுக்கும் அவரவர் சம்பளத்துக்கு ஏற்றவாறு குறியீடு நிர்ணயிக்கலாம் என ஐந்தாவது சம்பள கமிஷன் கருத்து தெரிவித்தது. ஆனால், இது ஊழியர்கள் இடையே பிரிவினை உட்பட தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் நடைமுறையில் சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், வழக்கம்போல், அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டு முறையை தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது.

* தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வு விலை குறியீட்டை "லேபர் பீரோ' மதிப்பிடும்போது, தொழிற்சாலை, சுரங்கம், ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான துறை, துறைமுகங்கள் என பல பிரிவுகளிலும் விரிவுப்படுத்த வசதியாக இருக்கும். இத்துறைகளில் அதிக படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி, படிப்பறிவு குறைந்தவர்களும் தொழிலாளர்களாக பணியாற்ற வாய்ப்புள்ளது. இத்துறைகளில் தொழிலாளர்களின் அறிவை விட உடலுழைப்பு தான் அதிகம் தேவைப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப வருமானம் மற்றும் செலவினம் குறித்து டில்லியில் நடந்த சர்வேயில், 53 சதவீத குடும்பங்கள் வருவாய் பிரிவில் (இன்கம் கிளாஸ்) இருப்பதாக தெரியவந்தது. மத்திய அரசு ஊழியர்களின் நுகர்வு முறைக்கும், தொழிலாளர்களின் நுகர்வு முறைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.

பரிந்துரை:

* நாட்டில் புள்ளிவிபரங்களை சேகரிக்க அதிகாரபூர்வ அமைப்பாக "தேசிய புள்ளியியல் கமிஷன்' மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் புள்ளி விபரங்களை தொகுப்பது, ஆராய்வது, கண்காணிப்பது மற்றும் அமலாக்குவது என பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறது. தகுந்த புள்ளியியல் ஆய்வு திட்டங்களை ஆராய்வது, விளக்கம் அளிப்பது, பகுப்பாய்வு செய்வது என பல பணிகள் உள்ளன. அரசு ஊழியர்களின் நுகர்வு குறித்து தேசிய புள்ளியியல் கமிஷன் ஆய்வு செய்து, தனி நுகர்வு விலை குறியீடு நிர்ணயிக்கலாம். அதுவரை பழைய முறைப்படி, ஏ.ஐ.சி.பி.ஐ., மதிப்பீட்டு முறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஐ.சி.பி.ஐ.,யில் திருத்தம்:

*1982ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விதிமுறைப்படியிலான குறியீடு நிர்ணயித்து, ஐந்தாவது சம்பள கமிஷன் அகவிலைப்படி மதிப்பீடு செய்தது. 2001ம் ஆண்டு புதிய விதிமுறை வகுக்கப்பட்டது. இது 2006 ஜனவரியில் இருந்து அமலுக்கு வந்தது. 2001ன் விதிமுறையில் 78 மையங்கள் விரிவுப்படுத்தப்பட்டன. தற்போதைய நுகர்வு திட்டங்கள் இந்த விதிமுறையில் இருப்பதால், மறுதிருத்தம் செய்யும் வரை அகவிலைப்படி மதிப்பீட்டில், இதையே பயன்படுத்த சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

* அகவிலைப்படி கணக்கிடும் முறை:

நுகர்வு விலை குறியீடு (பேஸ் 1982) அடிப்படையில் 12 மாத சராசரி குறியீடு 306.33 புள்ளிகளுடன் அகவிலைப்படி விகிதம் கணக்கிடப்படுகிறது.
4.1.16
1.1.2004 வரை அமலில் இருந்த அகவிலைப்படி கணக்கிடும் சூத்திரம்:

* அகவிலைப்படியை (டி.ஏ) அகவிலை சம்பளமாக(டி.பி.,) மாற்ற ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. மேலும், நுகர்வோர் விலை குறியீடு அடிப்படை குறியீட்டில் 50 சதவீதம் அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதன்படி, மத்திய அரசு அகவிலைப்படியின் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தது. இது 1.4.2004ல் அமலுக்கு வந்தது.
இதன்படி புதிய அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரம்:

 

* அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியின் 50 சதவீதத்தை இணைத்ததால், தற்போதுள்ள விலை குறியீடு 306.33ல் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இது 306.33 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு முறையும் அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை இணைக்கும்போது ஆதார விலை குறியீட்டை திருத்தம் செய்ய வேண்டும். சம்பளத்தின் சதவீத அடிப்படையில் சம்பள உயர்வு அளிக்கும்போது, இந்த விலை குறியீட்டு திருத்தம் தேவை இல்லை. எனவே, அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியின் 50 சதவீதத்தை இணைப்பதை ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கவில்லை.

*அகவிலைப்படியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறுமதிப்பீடு செய்வதும் அவசியமற்றது. ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜன., 1 மற்றும் ஜூலை 1ல் மறுமதிப்பீடு செய்து மார்ச் மற்றும் செப்டம்பர் மாத சம்பளத்துடன் அளிப்பதே நிர்வாக வசதியாக இருக்கும். அத்துடன் பணவீக்க ஈட்டுத்தன்மை எல்லா மட்டத்தில் 100 சதவீதமாக இருந்தால் போதுமானது.

 


 

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in