Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

06. சிவிலியன்கள் மற்றும் பாதுகாப்பு படை ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் அது தொடர்பான சலுகைகள்

 

* பாதுகாப்பு படையினர் மற்றும் ஏனைய பிரிவினருக்கான பென்ஷன் ஆதாயங்கள்

 

அத்தியாயம் 5.1
***
சிவிலியன்கள் மற்றும் பாதுகாப்பு படை ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் அது தொடர்பான சலுகைகள்

***
முன்னுரை:
5.1.1
கடந்த 2004, ஜனவரி 1ம் தேதிக்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஒய்வூதிய அமைப்பு, பணி ஒய்வு அல்லது இறப்புக்கான பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் குறித்த சட்டவரையறைகளை கமிஷன் ஆய்வு செய்கிறது.


5.1.2
புதிய பென்ஷன் திட்டத்தில் உட்படாத மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் அது சார்ந்த பிரச்னைகளை கமிஷன் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.


5.1.3
2003, டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிமுறைகள் 1972ம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் (பென்ஷன்) சட்டத்துக்கு உட்பட்டவை. யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றும் சிவிலியன் ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். ஆனால், பென்ஷன் என்ற வார்த்தை குறித்து இந்த விதிமுறைகளில் குறிப்பட்ட முறையில் விளக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் முக்கியத்துவம் வாய்ந்த டி.எஸ்.நகரா வழக்கில் ( ஏ.ஐ.ஆர்., 1983, எஸ்.சி., 130), பென்ஷன் என்பது, முந்தைய கால பணிக்குரிய சம்பளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை:
5.1.4
இப்பிரச்னையில், அதிகளவிலான ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருப்பதால், இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கமிஷன் நன்கு ஆராய்ந்தது. மத்திய அரசின் தற்போதுள்ள ஓவூதியதாரர்கள் விபரம்:

துறை ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை
ரயில்வ 10.18 லட்சம்
தபால 1.58 லட்சம்
பாதுகாப்பு 19.40 லட்சம்
டெலிகாம் 1.42 லட்சம
சிவில் 5.83 லட்சம்
மொத்தம் 38.41 லட்சம்

அரசின் பென்ஷன் செலவினம்:
5.1.5
ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் தொகையாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவாகிறது. தற்போதுள்ள பென்ஷன் திட்டத்தில் மாறுதல் ஏற்படுத்தும்போது, இரண்டு விஷயங்களை கமிஷன் ஆராய வேண்டியுள்ளது. ஒய்வூதியதாரர்களுக்கு நியாயமான முறையில் பலன்கள் கிடைக்கும் அதே நேரத்தில், கூடுதல் சுமையை ஏற்கும் அரசின் நிலை குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.


ஓய்வூதிய தகுதி:
5.1.6
அரசு பணியில் இருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகளோ அதற்கு மேலாகவோ பணியாற்றினால், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணியில் சேர்ந்து 20 ஆண்டுகளோ அதற்கு பின்னரோ விருப்ப ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 33 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு முழு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. கடைசி 10 மாதங்கள் பணியின்போது வாங்கிய சம்பளம் மற்றும் சலுகைகளின் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.


சிவிலியன் ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள்:.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in