* பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு கொள்கை
* பணி ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு
* பொறுப்பான நிர்வாகம்
* நடைமுறை தேதி்
அத்தியாயம் 6.3
***
திறமையான, பொறுப்பான நிர்வாகம் அமைதல்
***
முன்னுரை:
6.3.1
மத்திய அரசில், பொதுவான நிர்வாக சீர்திருத்தங்கள்
குறித்து கமிஷன் நேரடியாக ஆய்வு செய்யவில்லை. காரணம்,
இதற்காக தனியாகவே அமைக்கப்பட்டுள்ள நிர்வாக
சீர்த்திருத்த கமிஷன் (ஏ.ஆர்.சி.,) இப்பரச்னைகளை
ஆராய்ந்து வருகிறது. எனினும், இந்த அறிக்கையில் சம்பள
நிர்ணயத்தை மறுசீர்திருத்தம் செய்துள்ளதன் முக்கிய
நோக்கமே, நுகர்வோரின் தேவைக்கு ஏற்ற, பொறுப்பான,
திறமையான நிர்வாகம் அமைய வேண்டும் என்பதற்கு தான்.
மனிதவள மேலாண்மை கட்டமைப்பல் முக்கிய ஆதாரமே சம்பளமாக
இருக்கும்போது, இது மிகவும் அவசியம். மத்திய அரசின்
சம்பள கொள்கையில், அதிக திறன் வாய்ந்த பணியை
மேற்கொள்ளும் உயர்ந்த சாதனையாளர்கள் ஒரு ஒருங்கிணைந்த
பகுதியாகவே கவுரவிக்கப்பட உள்ளனர். திறமையை
வெளிக்கொணர்ந்து உற்பத்தியை மேம்படுத்துதல்,
பொறுப்புணர்வு அதிகரித்தல், நேர்மையான அணுகுமுறை,
ஒழுக்கம் என பல விஷயங்களுக்கு சம்பள நிர்ணயத்தில்
முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அன்றாட நிர்வாகம் குறித்து பொதுஜன பார்வை:
6.3.2
சாதாரண மக்களை பொறுத்தவரை, “அதிகார வர்க்கம்’
என்பது
வழக்கமான நடைமுறைகள், காகித வேலைகள் மற்றும்
காலதாமதங்களை தான் குறிக்கிறது. அரசு மற்றும் அதிகார
வர்க்கம் என்பது குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை
பெறுவதில் துணை நிற்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும்,
மக்கள் எண்ணம் இப்படி தான் உள்ளது. நிர்வாக அமைப்பன்
நெளிவு சுழிவின்மை, அதிகாரம் குவிதல், அதிகளவிலான
அதிகார அடுக்குமுறைகள், மேல்மட்டத்தில் இருந்து
கீழ்மட்டம் வரை அதிகார தரகுமுறைகள் போன்றவை எந்த முடிவை
இறுதி செய்வதிலும் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்புணர்வில் இருந்து விலகி
செல்தல், நுண்நிர்வாகம் மீதான ஆர்வம் போன்றவை பொருளை
விட அமைப்பு தான் முக்கியம் என்ற நிலையை
ஏற்படுத்துகின்றன. இது விளைவை விட நடைமுறைக்கு தான்
மதிப்பளிக்கிறது. நிர்வாக கட்டமைப்பன் திறமையின்மை,
தரமற்ற செயல் திட்டங்கள், பொறுப்பன்மை மற்றும்
எதிர்மறையான செயல்பாடுகள் போன்றவை நிர்வாக அமைப்பன்
மீது மக்களின் நம்பக்கையை இழக்க செய்கின்றன. இவற்றில்
மாற்றம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.
நிர்வாக சீர்திருத்த கமிஷன்:
6.3.3
நிர்வாக சீர்திருத்த கமிஷன், “அரசு மற்றும் நிர்வாக
சீர்திருத்தம்’ குறித்து வெளியிட்ட அறிக்கையில்,
“அதிகார அமைப்புகள் திறமையற்றவையாகவும், பயனற்ற பணிகளை
தான் செய்வதாகவும் கருத்து மேலோங்கியுள்ளது’
என
சுட்டிக்காட்டியுள்ளது. அதிகார வர்க்கத்தை பொறுத்தவரை,
பொதுவாகவே காலதாமதம், திறமையின்மை, பொறுப்பன்மை போன்ற
அபப்பராயங்கள் தான் நிலவுகின்றன. பொதுமக்களுக்கு நல்லது
நடக்க வேண்டும் என்ற எண்ணம் குறைகிறது. இதன் காரணமாக
விளைவுகள் எதிர்மறையாக இருக்கின்றன. நிர்வாக துறையில்
உள்ள கீழ்மட்ட அளவிலான ஊழியர்கள் கூட அதிகளவிலான
அதிகாரத்தை குவித்து வைத்து பொதுமக்கள் மீது ஆதிக்கம்
செலுத்துகின்றனர். இது போன்ற காரணங்களால் சமூகத்தில்
ஏழ்மை, படிப்பறிவின்மை போன்றவை ஒழிக்கப்படாமல் உள்ளன
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவையின் பெருமை மீட்கும் நடவடிக்கைகள்:
6.3.4
அரசு ஊழியர்கள் தவறான முறையில் வழி நடத்தப்படுவதால்,
சுய பார்வையிலும் அணுகுமுறையிலும் குழப்பங்கள் உள்ளன.
இது பணித்திறனை பாதிக்கிறது. பணித்திறனை மேம்படுத்த
நேரான அணுகுமுறைகள், பொறுப்புணர்வு, திறமைக்கு
அங்கீகாரம் ஆகியவை அவசியம்.
பொறுப்புணர்வுடன் மறு சீரமைப்பு:
6.3.5
பணித்திறன் அதிகரித்தல், பொறுப்புணர்வை மேம்படுத்துதல்
போன்ற காரணங்களுக்காக தற்போதுள்ள நிர்வாக அமைப்பல்
போதிய மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். ஒவ்வொரு அதிகார
மட்டத்திலும், அதிகார பரவலாக்கும் முறை அவசியம்.
அதிகாரம் குவியாத மேலாண்மை தேவை. நடைமுறைகளை
எளிமைப்படுத்துதல், செயல் திட்டங்களை மறு சீர்திருத்தம்
செய்தல் போன்றவற்றால் திறம்பட்ட சேவை முறையை உருவாக்க
முடியும்.
ஊழியர்களை வழிநடத்துதல்:
6.3.6
ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் தான் மிகவும் முக்கியமான
சொத்து. இது அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
ஊழியர்கள் தங்கள் திறமையை வளர்ப்பதும், அதற்கான
வாய்ப்புகளை உருவாக்குவதும் அவர்களுக்கு மட்டுமல்ல,
நிறுவனத்துக்கும் நன்மை தரும். ஒரு சக்கரத்தின் பற்கள்
போன்று, இயந்திரத்தனமான அணுகுமுறையுடன் பணியாற்றும்
முறை மாற வேண்டும். பணித்திறனை ஊக்குவித்தல்,
கவுரவித்தல் போன்ற நிர்வாகத்தின் பொறுப்புணர்வுடன்
கூடிய செயல்பாடுகள் உற்பத்தித்திறனில் பரதிபலிக்கும்.
பெண்களின் பரதிநிதித்துவம் அதிகரித்தல், ஊனமுற்றோரை
அதிகளவில் நியமித்தல் போன்றவை அதிகார மட்டத்தில்
பொறுப்புணர்வை உயர்த்தும் வழிமுறைகளாகும்.
அத்தியாயம் 6.3 தொடர்ச்சி ...1
இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள்:
6.3.7
ஏற்கனவே, குறிப்பட்டுள்ள இலக்குகளை அடைய பல்வேறு
வழிமுறைகளை கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அதில், அதிகார
வர்க்கத்தின் சில பரிவுகளில் உள்ள சம்பள ஏற்றத்தாழ்வு
நீக்குதல், பணி உயர்வில் தேக்கநிலை நீக்குதல்,
பணித்திறமையை கவுரவித்தல், வளர்ச்சிக்கானழலை
உருவாக்குவதல், ஊழியருக்கு பணியில் திருப்தி
ஏற்படுத்தும் வழிமுறைகள், பணித்திறனுக்கு ஏற்ற வேலை
அளித்தல் என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன.
பணித்திறமையை அதிகரிக்க, “திறமை சார்ந்த ஊக்குவிப்பு
திட்டம் (ப.ஆர்.ஐ.எஸ்.,)’ அவசியம் குறித்தும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பள அமைப்பல் மாற்றம்:
6.3.8
சம்பள நிர்ணயத்தில் உள்ள பல்வேறு பரிவுகளை
ஒருங்கிணைத்தால், அரசு அதிகார அடுக்குகளில் உள்ள
இடைவெளியை குறைக்க முடியும் என கமிஷன்
பரிந்துரைத்துள்ளது. முடிவுகளை எடுக்கும் நடைமுறைகளை
விரைவுப்படுத்தவும், செயல்பாடுகளில் வளைந்து
கொடுக்கவும் இது உதவும். பணித்திறனை ஊக்குவிக்க சம்பள
உயர்வு மற்றும் “ரன்னிங் பே பேண்ட்’
முறைகள்
அமல்படுத்தப்பட்டால், இன்னும் சிறந்த பலனை
எதிர்பார்க்க முடியும்.
6.3.9
முடிவெடுக்கும் நடைமுறைகளில் ஒவ்வொரு மட்டத்திலும்
பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என கமிஷன்
வற்புறுத்தியுள்ளது. ஆசிரியர்கள், நர்ஸ்கள் மற்றும்
கான்ஸ்டபள் போன்ற சமூகம் சார்ந்த முக்கிய பணியிடங்கள்
இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
பல்துறை நிபுணத்துவம் மற்றும் புதிய நியமனங்கள்:
6.3.10
அரசு துறைகளில் ஊழியர்கள் திறனை வலுப்படுத்த வசதியாக,
பல்வேறு துறைகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற போதிய
பயிற்சிகள் அளிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி
காரணமாக, பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருவதும்,
காலியிடங்களில் புதிய நியமனத்துக்கு தடை
விதித்துள்ளதும், அரசின் சிறப்பான செயல்பாடுகளை
பாதிக்கக்கூடியவை. இதனால், வருடாந்திர நேரடி நியமன
திட்டத்தை (ஏ.டி.ஆர்.ப.,) அரசு ஆய்வு செய்து, மூன்றில்
ஒரு பங்கு காலியிடங்களில் புதிய நியமனத்தை மேற்கொள்ள
வேண்டும். மனித வளத்தை குறைப்பதும், புதிதாக மனித
வளத்தை மேம்படுத்துவதும், அவ்வப்போது குறிப்பட்ட
அமைச்சகம் மற்றும் துறைகளால் மதிப்பீடு செய்ய வேண்டும்.
வளர்ச்சிக்கானழலை உருவாக்குதல்:
6.3.11
அரசு துறை நிர்வாகம் சீராக இருக்க, ஊழியர்களுக்கு
சிறந்த வழிகாட்டுதல் அவசியம். சிறந்த திறன் கொண்ட பணி
நடைமுறைகள், பல்நோக்கு பணி பயிற்சி ஆகியவை இதில்
தொடர்புடையவை. தற்போது உதவியாளர்கள் மற்றும் தனி
செயலாளர்கள் செய்து வரும் பணிகள் வருங்காலத்தில் செயல்
உதவியாளர்களால் மேற்கொள்ளப்படும். குரூப்
“டி’ பணியாளர்கள் குரூப் “சி’
பணியாளர்களாக தரம்
உயர்த்தப்படுவதால், அதிக அரசு பணியாளர்களின்
ஊக்குவிக்கப்பட்டு, அவர்களின் பணித்திறன்
வெளிக்கொணரப்படுகிறது. துறைசார்ந்த போட்டித்தேர்வுகள்
வாயிலாக விரைவாக பணி உயர்வு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதும் ஊழியர்களுக்கு புது உத்வேகத்தை
தரும் செயலாகும்.
பணி - வாழ்க்கையை சமநிலைப்படுத்தி அரசு சேவையை
மேம்படுத்துதல்:
6.3.12
பெண்கள் மற்றும் ஊனமுற்ற ஊழியர்களுக்கு அதிக வசதிகளை
அளித்து சிறந்த பணிச்ழலை உருவாக்குவதன் அவசியம்
குறித்து கமிஷன் தனது பரிந்துரையில் விவரித்துள்ளது.
இதில்,பணி மற்றும் வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல்,
குடும்ப ழலுக்கு உகந்த பணிசழல் போன்றவை குறித்து
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு வேலை
நேரத்தில் ச<லுகைகள், குழந்தை பராமரிப்பு விடுப்பு,
கல்வி சலுகை அதிகரிப்பு போன்ற பல்வேறு சலுகைகளுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த பணித்திறனுக்கு உறுதிஅளித்தல்:
6.3.13
சிறந்த சேவைக்கு அதற்கு ஏற்ற திறன் அவசியம் என்பதால்,
முக்கிய பணியிடங்களில் அரசு துறைகளில் இருந்தோ, வெளி
நிறுவனங்களில் இருந்தோ திறமையானவர்களை தேர்ந்தெடுத்து
பதிலிப்பணி அடிப்படையில் பணியில் அமர்த்த கமிஷன்
பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க
கமிஷன் மறுத்துள்ளது. இதன் நோக்கமே, அரசு துறை இளமையாக
இருக்க வேண்டும்; எதிர்கால சவால்களை சமாளிக்க அதுவே
சிறந்தது என கமிஷன் கருதுவதால் தான்.
திறமை சார்ந்த ஊக்குவிப்பு திட்டம்:
6.3.14
திறமை சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் (ப.ஆர்.ஐ.எஸ்.,)
அறிமுகம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், சிறந்த
திறமைக்கு மதிப்பளித்து ஊக்குவித்தால் பணியில் இன்னும்
நேர்த்தியை எதிர்பார்க்கலாம். பலனை அடிப்படையாக கொண்ட
பணித்திறன் குறியீடு தான் இது. அந்தந்த துறைகள் மற்றும்
அமைச்சகங்களில், தேவையில்லா செலவை குறைத்து
சேமிக்கப்பட நிதியை இது போன்ற ஊக்குவிப்பு
திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். கமிஷன்
பரிந்துரைத்துள்ள வழிமுறைகளை அதிக சிரமம் இல்லாமல்,
சம்பந்தப்பட்ட துறை தலைவர்களால் நடைமுறைப்படுத்த
முடியும்.
நிறைவுரை:
6.3.15
தனிப்பட்ட சேவைகள் அல்லது பரிவுகளை மறுசீர்திருத்தம்
செய்ய கமிஷன் வலியுறுத்தவில்லை. அமைச்சகங்கள்,
துறைகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை ஏற்படுத்த சம்பள
அமைப்பல் மாற்றம் ஏற்படுத்துவதையே கமிஷன் முக்கியமாக
பரிந்துரைத்துள்ளது. அரசு இயந்திரத்தில் புதுமையான,
திறமையான, பொறுப்பான நிர்வாகத்துக்கு வழிவகுக்கும்
விதத்தில், ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமையும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
.