அத்தியாயம் 6.4
***
ஊழியர் பயிற்சி மையங்கள் மற்றும் கல்லூரிகள்
***
முன்னுரை:
6.4.1
அறிவு வளர்ச்சி, திறமை அதிகரிக்க மனித வள மேம்பாடு
முக்கியம். இது, அதிக பணித்திறனையும், சிறந்த
சேவையையும் தரும். அரசு ஊழியர்கள் தங்கள் திறமையை
மேம்படுத்தவும், புலமையை பெறவும் பயிற்சி மையங்கள்
மற்றும் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பணியில்
முன்னேற்றம் பெற, ஊழியர்களுக்கு துவக்க நிலையில்
மட்டுமல்ல, பணியிடை பயிற்சியும் அவசியம். சிறந்த
திறமையை தரக்கூடிய பயிற்சி மையங்கள் அனைத்து
உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்க வேண்டும்.
6.4.2
பணி நடைமுறை மற்றும் செயலாக்கத்தில் புதிய உத்வேகத்தை
தர, அதிக திறன்கொண்ட பணியிடை பயிற்சிகள் வழங்கப்பட
வேண்டும். ரயில்வே துறையை பொறுத்தவரை, பணி மற்றும்
பொறுப்புகள் மாறுவதற்கு ஏற்ப அலுவலர்களுக்கு உரிய
நேரத்தில் தகுந்த பயிற்சி வழங்கப்படுகிறது. “யுகந்தர்
கமிட்டி’ பரிந்துரையின் அடிப்படையில், அகில இந்திய
சர்வீஸ் பணியாளர்களுக்கு பணியின் மத்திய காலத்தில்
பணியிடை பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அடுத்த உயர்பணிநிலைக்கு செல்லும் முன் ஒவ்வொரு ஊழியரும்
தங்கள் பணியிடை பயிற்சி காலத்தை முடித்திருக்க வேண்டும்.
இளநிலை நிர்வாக நிலை (பேஸ் 3), ‘ப்பர் டைம் ஸ்கேல் (பேஸ்
4) ஆகிய பணியிடங்களுக்கு “லால் பகதூர் சாஸ்திரி தேசிய
நிர்வாக பயிற்சி மையம்’ பணியிடை பயிற்சி வழங்குகிறது.
இது பணிக்காலத்தின் 26 மற்றும் 28வது ஆண்டுகளில்
வழங்கப்படுகிறது. இந்திராகாந்தி தேசிய வன பயிற்சி மையம்
பணிக்காலத்தின் 10, 17 மற்றும் 27 ஆண்டுகளில், பணியிடை
பயிற்சி வழங்குகிறது. இதேபோன்று, பதவி உயர்வு மற்றும்
பணியின் தன்மை மாறும்போது பயிற்சி அளிக்க, சர்தார்
வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி, நேரடி வரிக்கான
தேசிய அகாடமி ஆகியவை அந்தந்த துறைகளை சார்ந்த
ஊழியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கின்றன.
தற்போதைய பயிற்சிப்படி:
6.4.3
நான்காவது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, 1987ல்
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பயிற்சி
அலுவலர்களுக்கான படியாக அடிப்படை சம்பளத்தின் 30
சதவீதத்தை வழங்கியது. மத்திய அரசின் நிதியுதவியுடன்
தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் “ஏ’
ஊழியர்களுக்கு இந்த சலுகை இல்லை. 1992ல் பயிற்சிப்படி
விகிதம் திருத்தப்பட்டு, அடிப்படை சம்பளத்தில் 15
சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாவது சம்பள
கமிஷனும், திருத்திய சம்பளத்தின் அடிப்படையில் 15
சதவீதம் பயிற்சிப்படி வழங்க பரிந்துரைத்தது.
6.4.4
மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கவுரவ
பயிற்சியாளர்களுக்கு ஆகும் செலவுக்காக பயிற்சி நிறுவன
தலைவர்களுக்கு சிறப்புப்படியாக மாதம் ரூ. 250 வழங்கும்
முறை 1987ல் அமலுக்கு வந்தது. இது, 1.10.99 முதல் மாதம்
ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டது.
பரிந்துரைகள்:
6.4.5
இது தொடர்பாக மத்திய பயிற்சி நிறுவனங்களிடம் நடத்திய
ஆய்வில், பயிற்சிப் படியை அதிகரித்தால், தேசிய மற்றும்
மத்திய பயிற்சி நிறுவனங்களுக்கு இன்னும் திறமையான
அலுவலர்களை பணியமர்த்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
பயிற்சிப்படி மற்றும் இதர படி:
6.4.6
மத்திய அரசு துறைகள், பல்கலைக்கழகங்கள், இதர பயிற்சி
நிறுவனங்கள் இருந்து பதிலிப்பணியில் தேர்வான
பயிற்சியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 30 சதவீத
பயிற்சிப்படி வழங்கப்பட வேண்டும். ஆனால், தனியாக
பதிலிப்பணி படி வழங்கப்படமாட்டாது. பயிற்சி நிறுவன
தலைவருக்கு வழங்கப்படும் சிறப்புப்படி மாதம் ரூ. 3,500
ஆக உயர்த்தப்படுகிறது. பயிற்சி இயக்குனருக்கு ரூ.
2,500, கவுன்சிலர்களுக்கு ரூ. 2000 மாதந்தோறும்
வழங்கப்படும்.
தாராள ஒப்பந்த முறை:
6.4.7
சிறந்த நிபுணர்களை பயிற்றுனராக தேர்வு செய்ய,
சம்பந்தப்பட்ட நிறுவன தலைவருக்கு அதிகாரம் அளிக்க
கமிஷன் பரிந்துரை செய்கிறது. திட்ட காலம் முழுதும்,
அல்லது ஓராண்டு காலத்துக்கு இதில் எது குறைவானதோ அதன்
அடிப்படையில், காலியான இடங்களை நிரப்ப வேண்டும். இந்த
பணியை மூன்றாண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வது குறித்து
துறைத் தலைவர் தலைமையிலான குழு முடிவெடுக்கும்.
6.4.8
பயிற்றுனர் பணியிடங்களை கூடுதலாக நியமிக்க துறைத்
தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே, ஒதுக்கப்பட்ட
நிதியில் இருந்து, இதற்கான செலவினத்தை ஏற்றுக்கொள்ள
வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கப்பட மாட்டாது.
கட்டணம் மற்றும் கவுரவத் தொகை:
6.4.9
தற்போது சில பயிற்சி நிறுவனங்களில், பணியில் உள்ள
அலுவலருக்கு ஒரு அமர்வுக்கு ரூ. 500 வழங்கப்படுகிறது.
ஓராண்டின் மொத்த தொகை ரூ. 5 ஆயிரத்துக்கு மிகாமல்
இருக்க வேண்டும். பணியில் இல்லாத வெளி அலுவலருக்கு ஒரு
அமர்வுக்கு ரூ. 1000 வழங்கப்படுகிறது. கவுரவ
பயிற்றுனராக வரும் நிபுணர்களுக்கு சம்பளம், கட்டணம்,
கவுரவத் தொகை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். அமர்வுக்கு
ரூ. 4,000 வழங்க வேண்டும்.
6.4.10
மத்திய பயிற்சி மைய அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும்
படிகள் மத்திய செயலகம் மற்றம் மத்திய துணை
ராணுவபடைகளுடன் ஒப்படும்போது ஒரே சீரானதாக இருக்க
வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பயிற்சி மையங்களில்
போலீஸ் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டால், போலீஸ்
அமைப்பல் உள்ள சம்பள முறை, பணி நிலை ஆகியவற்றை பன்பற்ற
வேண்டும்.
வாடகை இல்லா தங்குமிடம்:
6.4.11
தேசிய/ மத்திய பயிற்சி மையங்களில் பணி நியமனம்
செய்யப்படும் பயிற்றுநர் மற்றும் ஊழியர்களுக்கு பணி
நேரம் அதிகமாக இருப்பதாலும், பயிற்சி பெறுவோருடன்
கலந்துரையாடல் செய்ய வேண்டியுள்ளதாலும், வாடகை இல்லாத
தங்கும் இட வசதி வழங்க வேண்டும்.
6.4.12
பணிக்காலத்தில் பயிற்சி பெறும் ஊழியர்கள், மாறுபடும்
பணி ‘ழலுக்கு தங்களை தயார்படுத்தி நல்ல உற்பத்தித்திறனை
தர முடியும். அரசு துறையின் அனைத்து மட்டத்தில் உள்ள
ஊழியர்களுக்கும் சிறந்த பயணியிடை பயிற்சி தகுந்த
சான்றிதழ்களுடன் வழங்குவது அவசியம்.
***