மனித நேய மக்கள் கட்சி தலைவரின் தண்டனை நிறுத்தி வைப்பு Dinamalar
மனித நேய மக்கள் கட்சி தலைவரின் தண்டனை நிறுத்தி வைப்பு
Advertisement
 
 

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
02:03

சென்னை: விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற மூவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, சென்னை செஷன்ஸ் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜவாஹிருல்லா உட்பட, ஐந்து பேரும் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடியும் வரை, தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கவும், ரம்ஜான் முடியும் வரை சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தார். மனுவை, நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பதால், சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஐந்து பேரும் சரணடைந்தனர். ஐந்து பேருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, நீதிபதி உத்தரவிட்டார். ஒவ்வொரு மாதமும், முதல் வேலை நாளில், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X