டாட் காம்
யோகா சிகிச்சை
யோகா என்ற சொல்லுக்கு இணைதல் என்பது பொருளாகும். உடலையும், மனதையும் இணைப்பதால் யோகா என்ற சொல் வந்ததாம். நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட யோகாசனங்களை மட்டும் செய்வது யோகா தெரபி ஆகும். முழுமையான யோகாசனப் பயிற்சிகளை விட யோகா தெரபிக்கு நல்ல வரவேற்பு தற்போது உள்ளது. www.yogatheraphy.org என்ற வெப்சைட் மருத்துவ சிகிச்சைக்கு யோகா தெரபியைப் பயன் படுத்துவது குறித்த அனைத்து விபரங்களையும் ஆன்லைனிலேயே தருகிறது.
விவசாயத்துக்கு மறுவாழ்வு
பருவமழை விவசாயிகள் மனதில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி களுக்கு அரசு துறைகள், பல்கலைக்கழகங்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள் என மாறுபட்ட இடங்களில் இருந்து தகவல்களும், பரிந்துரைகளும், ஆலோசனைகளும் வருகின்றன. எல்லா தகவல் களையும் கேட்டு சரியான முடிவை எடுக்க yahoo groups ல் "ricescientists' என்ற வெப்சைட் உதவுகிறது. விவசாயத்தில் வட்டார அளவில் சந்திக்கும் பிரச்னைகளை கிராம தகவல் மையம் மூலமாக விவசாயிகள் இந்த வெப்சைட் குழுவிடம் பகிர்ந்து கொண்டு தீர்வை பெறலாம்.
அறிவியல் ஆயிரம்
சர்ச்சைக்குரிய அருணாசலப்பிரதேசம்
அருணாசலப்பிரதேசம் குறித்து சீனா அவ்வப் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே உள்ளது. அருணாசலப்பிரதேசம் தெற்கு தவிர மற்ற எல்லைகளில் பிற நாடுகளைத் தான் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் பூடான், வடக்கு மற்றும் வடகிழக்கில் திபெத், சீனா, கிழக்கில் மியான்மர், தெற்கில் அசாம் இதன் எல்லைகளாக உள்ளன. மலைகள் சூழ்ந்த அருணாசலப்பிரதேசத்தில் தான் இந்தியாவின் முதல் சூரியன் உதிக்கிறது. எனவே தான் அருணாசலப் பிரதேசத்தின் அரசு முத்திரையில் இரு மலைகளுக்கு இடையே சூரியன் எழுவது போன்ற உதயசூரியன் சின்னம் உள்ளது. இந்தியாவின் கிழக்கு முனையில் உள்ள அருணாசலப்பிரதேசத்தில் வனப்பகுதி மிகவும் அதிகமாக 62 சதவீதம் உள்ளது. எனினும் அருணாசலப்பிரதேசத்தில் எப்போதும் பதட்ட மான சூழ்நிலையே நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் இதனைத் தவிர்க்கின்றனர். இந்தியாவி லேயே மிகப் பெரிய புத்தவிகார் அருணாசலப் பிரதேசத்தில் தவாங் என்னுமிடத்தில் உள்ளது.
தகவல் சுரங்கம்
சாலையோர சாலட் அபாயம்
சாலையோரங்களில் கையேந்தி பவன்களில் விற்கப்படும் உணவு வகைகள் சாலைகளின் சுகாதாரக்கேட்டால் பாதிப்பு அடைகின்றன. இதனால் இவற்றை உண்பதை பெரும்பாலும் தவிர்த்து விட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மற்ற உணவு வகைகளாவது கொதிக்க வைத்து சூடாக சாப்பிடுவதால் அவற்றின் பாதிப்புகள் ஓரளவாவது தடுக்கப்படும். ஆனால் சாலட் வகை களை உண்ணும் போது பாதிப்புகள் இரட்டிப்பா கின்றன. மூளைக்கட்டி, தலைவலி, வாந்தி, உடல் மெலிவு, நடக்க முடியாமை போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு இத்தகைய அறிகுறிகள் இருந்தால் நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும். 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "லோ கிரேடு டியூமர்' எனப்படும் மூளைக்கட்டி குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏற்படுகின்றன.
| வாசகர் கருத்து |