முலாயம் வாங்கிய அடி
உ.பி., மாஜி முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் இப்போது பெரும் கவலையில் உள்ளார். இடைத்தேர்தலில், வழக்கமான தோல்வி என்றால் ஆறுதல் படலாம்; ஆனால், குடும்பத்தில் மருமகளையும் அரசியலில் நுழைக்க வேண்டும் என்ற ஆசைக்கு வேட்டு வைத்து விட்டனரே வாக்காளர்கள். முலாயம் முகத்தில் கரி பூசியவர்கள், காங்., சார்பில் நிறுத் தப்பட்ட ராஜ் பப்பரும், பகுஜன் வேட் பாளர் தேவிந்தர் சிங்கும் தான். இருவருமே சமாஜ்வாடியில் தலைவர்களாக இருந்தவர்கள். அதிலும், அமர் சிங்குக்கு முன், முலாயமின் வலதுகரமாக இருந்தவர் பப்பர்; அதுபோல, சமாஜ்வாடியின் உள்வட்ட விஷயங்களில் அதிகமாக ஈடுபட்டவர் தேவிந்தர். தேர்தல் பிரசாரத்தில் இருவரும், முலாயமின் உள் விவகார ரகசியங்களை எல்லாம் மேடைகளில் பேசி அசிங்கப்படுத்தி விட்டனர். ஓட்டு போனதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த இருவருமே அமர் சிங் மீது வெறுப்பு ஏற்பட்டுத்தான் கட்சியை விட்டு வெளியேறினர்; சரியான நேரத்தில் பழி வாங்கி விட்டனர். இரு தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற்ற மகன் அகிலேஷ், பிரோஷாபாத் தொகுதியை தன் மனைவி டிம்பிளுக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால், இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது கட்சிக்கு மட்டுமல்ல... குடும்பத்திலும் கிளப்பிவிட்டது பிளவு!
| வாசகர் கருத்து |