News Comment | Science News | TV Shows | Photo Album | Rasi Palan
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சிறப்பு பகுதிகள் : பிறந்த நாள் பலன்கள்
பிறந்த நாள் பலன்கள்
நவம்பர் 20,2009

1, 10, 19, 28.
இந்த வாரம் ஒவ்வொரு விவகாரங்களிலும் மனக்குழப்பம் கொஞ்சம் கூடுதலாகவே காணப்படும். முக்கிய முடிவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்ப விஷயங்கள் மற்றும் பொது காரியங்களில் வார்த்தைகளில் மிகுந்த கவனம் இருக்கட்டும். இன்றும், நாளையும் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை என்றபோதும், கூடப் பிறந்தவர்களினால் மனக்கசப்பு ஏற்பட்டு விடாதபடி நடந்து கொள்ள வேண்டும். செய்தொழில் எதுவானாலும் லாபம் தொடங்கும். வியாபாரம் சற்று ஏற்றம், இறக்கம் கொண்டதாக அமையும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வு பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு தொந்தரவுகள் குறையும்.
பணம் வரும் தேதிகள்: 21,26.
பயன் உள்ள எண்கள்:1,4.



2, 11, 20, 29.
இந்த வாரத்தில் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை மற்றும் செயல்பாடுகளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பாராத உதவிகள் மற்றும் ஆலோசனைகள் பெருமை கொள்ளச் செய்யும். நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் இருக்கட்டும். சனி மற்றும் திங்கள் கிழமைகளில் ஏற்படும் பயணங்களை சற்று யோசித்து பின் மேற்கொள்தல் வீண் சிரமங்களை குறைக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவைப்படலாம். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலைகள் நிலவியபோதும் ஒற்றுமை குறையாது. தாய் மற்றும் தந்தையால் சுபச் செலவுகள் கூடும். தொழில் நிலையில் சில மாற்றங்கள் தேவையானதாக இருக்கலாம். வியாபாரம் பற்று - வரவு சற்று கடின போக்கு. எனினும் வளர்ச்சி பாதிக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு, மேலதிகாரிகளை அனுசரித்துப் போவது சிரமத்தை குறைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை பளு கூடும்.
பணம் வரும் தேதிகள்: 23,25.
பயன் உள்ள எண்கள்: 2,7.



3, 12, 21, 30.
தெளிவாக திட்டமிட்ட காரியங்களில் கூட சில மாற்றங்களை கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையே. இந்த வாரம் பழைய நட்புகள் மற்றும் தொடர்புகள் பயன் உள்ளதாக அமையும். உடல் நிலையில் அதிக அலைச்சல் காரணமாக சற்று சோர்வும் ஏற்படலாம். திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தாங்கள் ஈடுபடும் காரியங்களில் கூடுதல் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் தங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உறவு, நட்பு என்று யாவரும் தங்களைத் தேடி வந்து யோசனை கேட்கவும் செய்வார்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் நிலையில் நிர்வாக சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நேரடியான தலையீடு நஷ்டத்தை தவிர்க்கும். வியாபாரம் சற்று விழிப்புடன் செயல்படுதல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு, மேல்மட்ட ஆட்களால் சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு வேலை பளு கூடும்.
பணம் வரும் தேதிகள்: 21,22.
பயன் உள்ள எண்கள்: 1,3.



4, 13, 22.
இந்த வாரம் உற்சாகத்தோடு காணப்படுவீர்கள். மிகுந்த பரபரப்போடும் செயல்படுவீர்கள். இருப்பினும் பணியின் சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். வீடு, மனை, வாகன வகையில் தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் திடீர் பண வரவுகளுக்கு வாய்ப்பு உண்டு. உடல் நிலையில் மருத்துவ பரிசோதனை தேவைப்படலாம். தன் நிலையில் வரவுக்கும், செலவுக்கும் சரியாகவே இருக்கும். குடும்பத்தில் சிற்சில குழப்பங்கள் சகஜம் என்ற போதிலும் தீர்வுக்கு முயற்சிகள் மேற்கொள்வது நல்லது. உடன் பிறப்புகளால் தொந்தரவே. தொழில் நிலையில் கூடுதலான கண்காணிப்பு நஷ்டத்தை தவிர்க்கும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையோடு செயல்படுதல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு, பணியில் கவனம் கூடுதலாக இருக்கட்டும். தொழிலாளர்களுக்கு சிறப்புகள் கூடுதலாகும்.
பணம் வரும் தேதிகள்: 20,21.
பயன் உள்ள எண்கள்: 6,8.



5, 14, 23.
இந்த வாரமும் தொடர்ந்து தொழில் வகையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களுக்கு வாய்ப்புண்டு. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகள் ஆதாயம் தரும். பண நிலையில் கடின முயற்சியால் வருமானத்தை கூட்டச் செய்வீர்கள். குடும்பத்தில் தந்தையாரால் மனக் கஷ்டங்கள் ஏற்பட்டபோதும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் நிலையில் கூட்டு முயற்சியில் புதிய திட்டங்களை செயல்படுத்த தகுந்த நேரமே. வியாபாரம் விற்பனையை கூட்ட செய்யும் முயற்சி ஓரளவுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையிலும், உருப்படியான காரியங்களைச் செய்வீர்கள். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு கூடும். வசதி வாய்ப்புகளையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
பணம் வரும் தேதிகள்: 21,23.
பயன் உள்ள எண்கள்: 5,9.



6 , 15, 24.
இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும், வெற்றிகரமாக செய்து முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். சில விஷயங்களில் அலைச்சல் அதிகம் இருக்கும். நல்ல அனுபவம் என்று எண்ணிக் கொள்ளும் வகையிலும் இருக்கும். புதிய தொடர்புகள் பயன் தரும். ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் அவ்வப்போது சில கசப்புகள் இருக்கத்தான் செய்யும். உடன்பிறப்புகளால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உற்றார், உறவினர்களின் விவகாரங்களில் எச்சரிக்கையோடு செயல்படுதல் நல்லது. தொழில் நிலையில் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் விற்பனை கூடுதலாக லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடியபோதும் மன மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழிலாளர்களுக்கு சிரமங்கள் சற்று அதிகம் எனினும் சிறப்புகளும் உண்டு.
பணம் வரும் தேதிகள்: 20,24
பயன் உள்ள எண்கள்: 4,8.



7, 16, 25.
இந்த வாரத்தில் சில நிகழ்வுகள் மன மகிழ்வைத் தரும். புகழ், செல்வாக்கு கூடுதலாகும். பேசும் வார்த்தைகள் பலிதமாகும். பெண்கள் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் இருக்கட்டும். அரசு சார்ந்த விவகாரங்களில் அலைச்சல் தந்தபோதும், முடிவுகள் சாதகமாகும். உடல் நிலையில் சிற்சில தொந்தரவுகள் ஏற்பட்டபோதும் பெரிய செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் உறவினர்கள் வரவும் போகவும் இருப்பார்கள். தாய், தந்தையரால் ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளால் செலவுகள் கூடுதலாகலாம். தொழில் நிலையில் விரிவாக்கத்தால் லாபம் கூடும். வியாபாரம் விற்பனை கூடுதல் என்றபோதும் வேலையாட்ககளால் பிரச்னைகள் என்பது இருக்கும், கவனம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் மத்தியில் பேச்சில் கவனம் இருக்கட்டும். தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
பணம் வரும் தேதிகள்: 23,26
பயன் உள்ள எண்கள்:2,7.



8, 17, 26.
இந்த வாரம் அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலையே தேவையற்ற விவகாரங்களில் தலையீடு, வீண் அலைச்சல் என்று ஏற்படக்கூடும். நிதானம், மவுனம் இவ்விரண்டும் அதிகமாக தேவைப்படும். இன்றும் நாளையும் முக்கிய காரியங்களை செய்து முடிக்க ஏதுவாக இருக்கும். குடும்பத்தில் சில கசப்பு ஏற்படும். சகோதர, சகோதரி வகையில் எதிர்ப்பு, மனக்கசப்பு ஏற்படவே செய்யும். குழந்தைகளால் கூடுதல் செலவு இருக்கும். தொழில் நிலையில் புத்தாக்கம் தேவைப்படலாம். மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வெளியாட்களாலும் ஆதாயங்கள் கூடுதலாக பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் செயல்பாடுகள் அதிருப்தி ஏற்படுத்தினாலும், அமைதியாக கொண்டு போவது சிறப்பு.
பணம் வரும் தேதிகள்: 25,26.
பயன் உள்ள எண்கள்: 3,8.



9, 18, 27.
இந்த வாரம் சிரமங்கள் குறையும். செலவுகள் இல்லாமல் சில பணிகளை செய்து கொள்ள வாய்ப்புண்டு. சில விஷயங்களில் தங்களின் வியூகங்கள் வியப்பை ஏற்படுத்தியபோதும் வெற்றிகள் தாமதப்படலாம். திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் புது முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெறும். குடும்பத்தில் தாய், தந்தையர்களால் எதிர்பார்க்கும் உதவிகள் பெறுவீர்கள். உடன் பிறந்தோர்களால் ஒரு சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் பேண வேண்டியது அவசியமாகும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டு. வியாபாரம், புதிய ஆர்டர்களால் லாபம் கூடுதலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கோப்புகளை கையாளும் போது கவனம் கூடுதலாக இருக்கட்டும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் செயல்பாடுகளால் சலுகை உண்டு.
பணம் வரும் தேதிகள்: 23,26.
பயன் உள்ள எண்கள்: 6,9.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்