நவம்பர் 20
இந்த தேதியில் பிறந்த தாங்கள் தீர்க்கமான சிந்தனைகள் கொண்டவர்கள். எதிலும் துணிந்து செயல்படக் கூடியவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் சில சோதனைகள் ஏற்பட்டபோதும், அதையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு இருந்திருப்பீர்கள். அந்த துணிவும், நம்பிக்கையும் இந்த பிறந்த நாளிலிருந்து தொடரும். புகழ் கூடும். எதிரிகளுக்கு தோல்விகளை பரிசாக வழங்குவீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு வளமான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். உடல்நிலையில் ஆரோக்கியத்துக்கு குறைவில்லை என்ற போதும், அவ்வப்போது சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் சஞ்சலங்கள், குழப்பங்கள் சகஜமானது என்றபோதும், கணவன் - மனைவி உறவில் மகிழ்ச்சி இருக்கும். தந்தையின் உடல்நிலையில் அதிக கவனம் தேவைப்படும். உடன்பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரியமும் நடைபெறும்.
அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2,11,20.
அதிர்ஷ்ட மாதம்: ஜனவரி,ஏப்ரல்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,7.
நவம்பர் 21
இந்த தேதியில் பிறந்த தாங்கள் முன் யோசனையோடும், விவேகத்தோடும் செயல்படக் கூடியவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் நிலவு போல, வாழ்க்கை வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் அமைந்திருக்கும். இருப்பினும் மனம் தளராத முயற்சியோடு செயல்பட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால், இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், எதிலும் ஸ்டெடியான, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். புதிய தொழில்கள் வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் நம்பிக்கை தரும். உடல்நிலை, மருத்துவ ஆலோசனை தேவையானதாக இருக்கலாம். தாமதப்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதார நிலையில் வருமானங்கள் கூடும். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். சொத்துக்களிலோ, தொழிலிலோ முதலீடுகளை, கூடுதல்களை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இருக்கும். சற்று கூடுதலான அலைச்சலும் இருக்கும். பெற்றோர்களால் ஒத்துழைப்பு கூடுதலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புது உத்வேகம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு துறை, தனியார் துறையில் பணிபுரிவோருக்கு சலுகைகள் கூடும்.
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள்: 3,12,21.
அதிர்ஷ்ட மாதம்: டிசம்பர்,மார்ச்.
அதிர்ஷ்ட எண்கள்:1,3.
நவம்பர் 22
இந்த தேதியில் பிறந்த தாங்கள் வல்லமை மிக்கவர்கள். வாழ்க்கையை திட்டமிட்டுக் கொண்டு செல்லும் பக்குவம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் திட்டமிட்டு செயல்பட்ட காலங்களில் தகுந்த வெற்றிகள் கிடைக்காமல் தள்ளி போயிருக்கும் அல்லது கிடைக்காமல் இருந்திருக்கும். கூடவே, மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் மன நிறைவான பல மாற்றங்களையும் அனுபவிப்பீர்கள். வாழ்க்கை மற்றும் தொழிலில் புதிய உற்சாகத்தோடு செயல்பட ஆரம்பிப்பீர்கள். ஸ்திர சொத்துக்கள் சேர்க்கையும் அதற்காக கடன் வாங்கும் அமைப்பு உள்ளது. சிலருக்கு கவுரவ பதவியும் மற்றவர்கள் போற்றும் அமைப்பும் உண்டாகும். உடல்நிலையில் சிற்சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். தகுந்த மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில், சில சிக்கல்களோடே இந்த வருடத்தை கொண்டு போக நேரிடலாம். கணவன் - மனைவி உறவு ஏதோ இருக்கும் என்று சொல்லலாமே தவிர பிரமாதமாக சொல்வதற்கில்லை. அம்மா, அப்பா ஆதரவாக இருப்பார்கள். பொதுவா வருட பிற்பாதியை விட முற்பாதி பொற்காலமாக தங்களுக்கு அமையும்.
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1,10,19.
அதிர்ஷ்ட மாதம்: ஜனவரி,மார்ச்
அதிர்ஷ்ட எண்கள்: 1,4.
நவம்பர் 23
இந்த தேதியில் பிறந்த தாங்கள் எந்தவொரு காரியத்திலும், குறிக்கோளுடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் சீரான வளர்ச்சி ஏற்பட்டிருந்தபோதும், மன நிலையில் குழப்பம் சற்று கூடுதலாகவே இருந்திருக்கும். ஆனால், இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் பல வகையிலும், வெற்றிகரமான செயல்பாடுகளாகவே இருக்கும். புதிய தொழில், புதிய வீடு என மனம் மகிழ்ச்சியில் தத்தளிக்கும். பணியில் கூட விரும்பிய மாற்றங்கள் ஏற்படும். உடல்நிலையில் இருந்து வரும் பாதிப்புகளுக்கும் நிரந்தர தீர்வு காண்பீர்கள். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்பட்டபோதும் கடன் நிலவரத்தையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள். பெற்றோர் வகையில் ஒரு சில உதவிகள் மட்டுமே இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியும். உடன்பிறப்புகள் ரீதியாக மன நிறைவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி கூடுதல் லாபத்தை இந்த ஆண்டு பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மனம் விரும்பியபடியான நீண்ட நாட்களாக தடைபட்ட திருமண விசேஷங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட கிழமை: புதன்
அதிர்ஷ்ட தேதிகள்: 5,14,23.
அதிர்ஷ்ட மாதம்: பிப்ரவரி, மே.
அதிர்ஷ்ட எண்கள்: 2,5.
நவம்பர் 24
இந்த தேதியில் பிறந்த தாங்கள், எந்தவொரு விஷயங்களையும், ஆதாயகரமாக ஆக்கிக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் சில விஷயங்களில் எதிர்மறையான பலன்கள் கிடைத்தபோதும், பல விஷயங்களிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக தயக்கங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், பல வகையிலும் நன்மைகள் பெறக்கூடிய காலக்கட்டமே. முயற்சிகள் வெற்றி பெறும். மதிப்பு, மரியாதைகள் கூடுதலாகும். தாங்கள் நினைத்த காரியங்களை உடனடியாக நடத்தவும் வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கல் ரீதியாகவும் முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய வருடம் ஆகும். சக நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பொது வாழ்வில் இருந்து வரும் போட்டி பொறாமைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி சற்று குறைவுதான் என்ற போதிலும் கணவன் - மனைவி உறவில் ஒற்றுமை நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை சற்று கூடுதலாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான வளர்ச்சி என்ற போதிலும் லாபம் குறையாது. இந்த ஆண்டு சுப விசேஷங்கள் நிறைந்திருக்கும்.
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி
அதிர்ஷ்ட தேதிகள்: 6,15,24.
அதிர்ஷ்ட மாதம்: மார்ச்,மே.
அதிர்ஷ்ட எண்கள்: 6,9.
நவம்பர் 25
இந்த தேதியில் பிறந்த தாங்கள் பேச்சும், செயலும் தெளிவாக கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் தங்கள் பேச்சுக்களாலேயே பல விவகாரங்களை சமாளித்தபோதும், எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட்டீர்கள் என்பது தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால், இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் வெற்றிகரமாகவும் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அமையும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதிகமான செலவுகளுக்கு வாய்ப்பு இல்லை. பொருளாதார வகையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவியபோதும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சிரமம் இருக்காது. கடன் நிலவரம் தங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கும். குடும்பத்தில் சிற்சில விவகாரங்களில் அதிகமாக வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெற்றோர்களால் மருத்துவச் செலவு சற்று கூடுதலாகலாம். உடன்பிறப்புகளால் ஒத்துழைப்பு இருந்தபோதும் செலவுகளும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் சற்று கூடுதலான போதிலும் தங்களின் சமயோஜிதத்தால் எதிர்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2,11,20.
அதிர்ஷ்ட மாதம்: டிசம்பர், ஜூன்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,7.
நவம்பர் 26
இந்த தேதியில் பிறந்த தாங்கள் நிதானமான செயல்பாடுகள் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் சில விஷயங்களில் தங்கள் எண்ணப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். சில விஷயங்களில் கிடைத்த வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்திருக்கும். ஆனால், இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் அளவோடு ஆசைப்படுவீர்கள். ஆசைப்பட்டதை ஓசைப்படாமல் செய்து கொள்ளவும் செய்வீர்கள். பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும் பழைய சுமைகளால் சேமிப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும் உடல்நிலையில் ஆரோக்கியம் கூடியபோதும் மருத்துவ பரிசோதனை மனக்குறையை நீக்கும். குடும்பத்தில் சவுக்கியம், சந்தோஷம் இருக்கும். கணவன் மகிழ்ச்சி எல்லாம் இருக்கும். தந்தையிடம் அனுசரணையும், அரிய யோசனைகளும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அதிக பிரயோஜனம் இருக்காது. தொழில் வளம் மேன்மையாக இருக்கும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழ்நிலை நெருங்கி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு, எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டக்கூடிய நிலைகளும் உண்டாகும். சிறப்பாக சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமை: புதன்
அதிர்ஷ்ட தேதிகள்: 5,14,23.
அதிர்ஷ்ட மாதம்: ஏப்ரல், ஆகஸ்ட்.
அதிர்ஷ்ட எண்கள்: 5,8.
| வாசகர் கருத்து |