"கள்ளிப்பால் உறைந்து விட்டது' : உலக அளவிலான பல விளையாட்டு போட்டிகளில் ஊனமுற்றோர் பிரிவில் இந்தியாவுக்கு ஏராளமான பதக்கங்களை வாங்கி தந்திருக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கமங்கை ராஜலட்சுமி: நான் பிறந்த உடனே, என்னை கள்ளிப்பால் ஊத்தி சாகடிச்சிடணும்னு, அப்பாகிட்ட எல்லாரும் சொன் னாங்க. ஆனா, அதை அப்பா ஏத்துக்கல. என் அப்பா மட்டும் இல்லேன்னா, ஒரு சொட்டு கள்ளிப் பாலுக்கோ, பதம் நீக்காத நெல்லுக்கோ நான் இரையாகி போயிருப்பேன்.நான் குழந்தையா இருந்தப்போ, திடீர்னு ஒருநாள் எனக்கு நடக்க முடியலை. டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ண போது, எனக்கு போலியோன்னு சொல்லிட்டாங்க. கால் ஊனமாகிப் போச்சு. அதனால, என்னால சரியா நடக்க முடியாது.திருமங்கலத்துல இருக்கிற சி.எஸ்.ஐ., ஸ்கூல்ல சேர்த்து விட் டாங்க. வகுப்பில் இருக்கிற கரும்பலகையில், மாணவர் களின் தரவரிசைப் பட்டியல் போடுவாங்க. கடுமையா படிச்சு, 10வது ரேங்கில் இருந்து, 3வது ரேங் கிற்கு வந்தேன். எல்லாருடைய கவனமும் மெல்ல என்மேல் விழுந்தது.பள்ளிப்படிப்பு முடிந்ததும், உசிலம் பட்டியில் இருக்கிற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில், வணிகவியல் துறையில் சேர்ந்தேன்.பின்புதான் அவர் கள் கூட்டிப் போன இடம், அவனியாபுரத்தில் இருந்த ஊனமுற்றோர் மறு வாழ்வு மையம். அன்றிலிருந்து, அங்கு பயிற்சி எடுத்துக் கொண் டேன்.கடந்த 2004ல், சவுராஷ்டிரா கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது, ரஷ்யாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் பங் கேற்பதற்கு தேர்வு பெற்றேன். ஆனால், நான் அங்கு செல் வதற்கான பொருளாதார வசதி இல்லை. என் ஒருத்திக்காக, ஒட்டுமொத்த கல்லூரியே துணை நின்றது. ஆசிரியர்கள் அனைவரும், பொருளாதார உதவி செய்தனர். ஈட்டி எறிதலில் ஒரு தங்கமும், தட்டு எறிதலில் ஒரு வெள்ளியும் வாங்கி தாய்மண் வந்தேன்.இதுவரை, சர்வதேச போட்டிகளில், இரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண் கலம் மற்றும் அகில இந்தியப் போட்டிகளில், 30 பதக்கங் களை பெற்றிருக்கிறேன்.
"நெல் வயல்ல சொட்டு நீர்ப்பாசன முறை':பகுதி நேர விவசாயியாக இருக்கும் இளங்கலை பட்டதாரி ரமேஷ்: திருச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போதாவூர் கிராமம் தான் எனக்கு பூர் வீகம். வேளாண் தொழில் எங்கள் பரம் பரையின் ரத்தம், சதையுடன் இரண்டற கலந் தது. என்னுடைய அப்பா, அம்மா இருவரும் விவசாயிகள். மூத்த சகோதரர்கள் இருவரும் விவசாயம் சார்ந்த வேலையில் தான் இருக்கின்றனர். நான் அஞ்சாவது படிச்சப்பவே அப்பாவோட, காட்டுல நின்னு உதவி ஒத்தாசையா ஏதாவது செஞ்சுக்கிட்டு இருப் பேன். அப்பவே, விவசாயம் செய்யணும்ங்கிறது ஆசை என்னோட அடிமனசுல வேர் பிடிச்சுப் போச்சு. பிளஸ் 2 பாஸ் பண்ணினதும், பி.எஸ்சி., அக்ரி படிக்கணும்னு தோணிச்சு. அப்ளை பண்ணியிருந்தேன்; கிடைக்கலை. அப்புறமா தான் பி.எஸ்சி., பாட்டனி சேர்ந்தேன்.மத்த விவசாயிங்க போல சாதாரணமா விவசாயம் பண்ணக் கூடாது. அது தொடர்பா படிச்சு தெரிஞ்சுக்கிட்டு மத்தவங்களை காட்டிலும் நல்லா செய்யணும்னு எனக்கு ஆசை. அதனால, படிப்புல தீவிரமா கவனம் செலுத்தி, சிறப்பாகவே படிச்சேன்.தேடித் தேடி போய் விஷயங்களை தெரிஞ் சுக்கிட்டேன். ஒரு ஏக்கர்ல வாழை போட்டிருந்தாரு அப்பா. ஆனா, அதை சரியா கவ னிக்கலை. வாழைங்க எல்லாமே ரொம்ப சுணக் கமா இருந்திச்சு. இலை வெட்டி விட்டுடலாம்னு அப்பா முடிவெடுத்திருந்தார். கொஞ்சம் பொறுங்கப்பானு சொல் லிட்டு, வாழைகளுக்கு இடையில கிடங்கு வெட்டி கொத்தி போட் டேன். உரம் வெச்சு தண்ணீர் விட்டேன். வாழைத் தார்கள் குலை தள்ளி, அமோக மகசூல். நல்ல வருவாய். விவசாயிகளுக்கு பெரும் பிரச்னை பாசன தண் ணீர். அதை ரொம்ப சிக்கனமா பயன்படுத்த ஏற்பட்டது தான் சொட்டு நீர்ப்பாசன முறை. இந்த முறையை பயன்படுத்த பரீட்சார்த்தமா இறங்கியிருக்கேன். இன்னும் அது செயல்படத் தொடங் கலை. அதுல ஜெயிச் சுட்டா, நெல்வயல்ல சொட்டு நீர்ப்பாசனத்தை பயன்படுத்திய முதல் விவசாயிங்கிற பேரு எனக்கு கிடைக்கும்னு நம்பறேன்.
| வாசகர் கருத்து |