Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

டீ கடை பெஞ்ச்

பதிவு செய்த நாள் : ஜன 19, 2018 | கருத்துகள் (2)
Advertisement
  டீ கடை பெஞ்ச்

அ.தி.மு.க., - தி.மு.க., அன்னியோன்னியம்!
''பதவி உயர்வு குடுக்கறதுல ஊழலாம் ஓய்...'' என, பெஞ்ச் விவாதத்தின் முதல் தகவலை துவக்கினார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''வனத்துறையில... 'முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், பசவராஜ், பல லட்சம் கொள்ளை'ன்னு, அந்த துறையைச் சேர்ந்த பல ஆபீசுல, திடீர்ன்னு யாரோ போஸ்டரை ஒட்டி இருந்தா...
''பின்னணி என்னன்னு விசாரிச்சப்போ, தமிழ்நாடு வனத் தோட்டக் கழகமான, 'டாப்கார்ன்'ல, முறைகேடா சிலருக்கு பதவி உயர்வு குடுத்துருக்கான்னு தெரிஞ்சுது...
''விஷயம் இது தான்... டாப்கார்னுக்கு ஆறு கோட்டங்கள் இருக்கு... வனத்துறையிலேர்ந்து அயல் பணி போல, டாப்கார்ன் மேலாளரை நியமிக்கணும்... இதுல, வனச்சரகரா இருந்த ஒருவர், காரைக்குடி கோட்டத்துக்கு மேலாளரா நியமிக்கப்பட்டிருக்கார்...
''இப்படி, 'டைரக்டா' நியமனம் நடக்கக் கூடாது... இதுக்கான தேர்வை வனச்சரகர் எழுதி, 'பாஸ்' பண்ணணும்... அதே போல, எட்டு ஆண்டு சர்வீஸ் போட்ட வனவர்களை, இந்த பதவிக்கு நியமிக்கணும்... அதையும் இப்போ, நாலு ஆண்டுன்னு குறைச்சிருக்கா... இது தான் விஷயம்...'' என்றார் குப்பண்ணா.
''இருபது ஆண்டுகளாக, போராடி வந்த பக்தர்களின் வயித்துல, பாலை வார்த்துட்டாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''யாருங்க...'' எனக் கேட்டார்
அந்தோணிசாமி.''ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், வடபத்ர சயனர், ஆண்டாள் நாச்சியார், பெரியாழ்வார் சன்னதிகள்ல, தொன்று தொட்டு நடந்து வந்த பல பூஜை முறைகள், சில ஆண்டு
களாக நடக்கலே...
''ஆண்டாளின் திருமேனியில தங்க நகைகளைச் சாத்தாம, கவரிங் நகைகளையே போட்டிட்டிருந்தாங்க... ஆண்டாளுக்கு சாத்துகிற வடை, அப்பம், சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை, நெய்யிலே தயாரித்ததை நிறுத்திட்டு, எண்ணெய்ல தயாரிச்சிட்டுஇருந்தாங்க...
''இந்த குறை
பாடுகளை எல்லாம் களையணும்னு, 20 ஆண்டுகளாக, பக்தர்கள் கோரிக்கை வைச்சாங்க... முதல்வர் பழனிசாமி செவி சாய்த்து, கோரிக்கைகளை நிறைவேற்ற
உத்தரவிட்டிருக்காரு... ''பக்தர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி... ஆனா, இது தொடர்ந்து நீடிக்கணும்ங்கறது தான் அவங்க கவலை வே...'' என்றார் அண்ணாச்சி.
''அன்னியோன்னியம் ரொம்பவே அதிகமாயிடிச்சுங்க...'' என, கடைசி தகவலுக்கு
வந்தார் அந்தோணிசாமி.''என்னது... அண்டர்ஸ்டாண்டிங்கா... என்ன சொல்றீர்... யாரைப் பத்தி...'' என, சரமாரியாகக் கேள்வி கேட்டார் குப்பண்ணா.
''மதுரை பாலமேட்டில், ஜல்லிக்கட்டை துவக்கி வச்சு, 'கேலரி'யில், வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உட்கார்ந்திருந்தாருங்க... அப்போ, யாரும் எதிர்பார்க்காத வகையில, மதுரை கிழக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, 'என்ட்ரி' ஆனாரு...
''சோழவந்தான் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மாணிக்கத்தை, பின் தலையில செல்லமா தட்டிட்டு, உதயகுமார்கிட்டேயும், ரொம்பவே அன்னியோன்னியமா
பேசினாருங்க... ''அதாவது, கட்சிகள் எதிரும், புதிருமா இருந்தாலும், 'லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங்' நல்லா இருக்கு பாருங்க... அதைச் சொன்னேன்...'' என, கூறிச் சிரித்தார் அந்தோணிசாமி.
நண்பர்கள் நடையைக் கட்டினர்; நாயர் முண்டாசு கட்டியபடி, வாடிக்கையாளர்களை கவனிக்கத் துவங்கினார்.

Advertisement