'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : ஏப் 27, 2018
Advertisement
 'டவுட்' தனபாலு

கர்நாடக முதல்வர் சித்தராமையா: பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற வடமாநில தலைவர்களை இறக்குமதி செய்ய, கர்நாடகா, பா.ஜ., காத்திருக்கிறது.டவுட் தனபாலு: 'சோனியா, ராகுல், பிரியங்கா போன்றோர், கர்நாடகாவின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவங்க... உங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய, அவர்களை களமிறக்க, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருதே... அது என்ன கணக்கு'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி: திவாகரன் -- தினகரன் மோதல், நாடகமாகவும் இருக்கலாம். திடீரென, தினகரன், சர்வாதிகாரியாக செயல்படுவதாக, திவாகரன் கூறுகிறார். இதை வைத்தும், அரசியல் ஆதாயம் தேட பார்ப்பர். இவர்களுக்கும், அ.தி.மு.க.,விற்கும், எந்த தொடர்பும் கிடையாது.டவுட் தனபாலு: 'நடப்பது, ஜெ., ஆட்சியல்ல; ஊழல் ஆட்சி... மக்கள் இதற்கு முடிவு கட்டுவர்'னு, பன்னீர் அணியில் இருந்த நீங்க உட்பட பலரும், குற்றஞ்சாட்டினீங்க... அப்புறம், பதவிகளைப் பெற்று, பட்டுனு ஒண்ணு சேர்ந்துட்டீங்க... அந்த அனுபவத்தில் தான், திவாகரன் -- தினகரன் மோதல் என்பது நாடகம்னு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: நிர்வாகிகள், 16 பேரை கட்டி காக்க முடியாத கமல், நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்?டவுட் தனபாலு: இப்படி ஒரு விஷயம் இருக்கா... உங்களால, உங்க கட்சி, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்க முடியலை... அதிரடியா நீக்குறீங்க... கட்சி நிர்வாகிகளையும், கத்தை கத்தையா நீக்கி வர்றீங்க... அப்படீன்னா, நாட்டை நீங்க சரியா நிர்வகிக்கலைன்னு எடுத்துக்கலாமா என்ற, 'டவுட்' வருமே...!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை