சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : ஏப் 20, 2018
Advertisement
பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறைஅமைச்சர் ராஜு பேட்டி: 'ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை ரத்து செய்துள்ளது ஏமாற்று வேலை' என, வைகோ கூறுவது, அபாண்டமான குற்றச்சாட்டு. அவர், எல்லாவற்றையும் அறிந்தே, அரசியலுக்காக பேசுகிறார். தலைவருக்குரிய குணங்கள், அவரிடம் இல்லை. அவருக்கு, ஏதோ ஒன்று ஆகிவிட்டது; மனநிலையை சரி செய்து கொண்டால் நல்லது. மக்களை பாதிக்கும் பிரச்னையில், அரசு வேடிக்கை பார்க்காது.தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சமீப காலமாக தமிழகத்திலும் அதிகரித்து வருகின்றன. அந்தந்த பகுதிகளில், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: மாணவியரை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை கைது செய்யப்பட்டது சரியானது தான் என்றாலும், இந்த அவசர நடவடிக்கை, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குமிக்க, மிக உயரிய பதவியில் இருப்பவரை காப்பாற்ற எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. உயரிய பதவியில் இருப்பவர் மீது, தமிழக போலீசார் விசாரணை நடத்துவது சாத்தியமில்லை. இப்பிரச்னையில், உண்மை வெளிப்படையாக தெரிய வேண்டும்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: பா.ஜ., தேசிய செயலர் ராஜா, அடுத்தவர்கள் மனதை புண்படுத்தும் வகையில், தொடர்ந்து கருத்துக்களைக் கூறி வருகிறார். இந்த விஷயத்தில், பாதிக்கப்பட்டவர்கள் அவதுாறு வழக்கு தொடரலாம். இது, ஜனநாயக நாடு; யார் வாயையும் கட்டிப் போட முடியாது. ஆனாலும், பேசுவதற்கு ஒரு அளவு இருக்கிறது.

உ.பி., மாநில, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி பேட்டி: துண்டுச் சீட்டு உதவி இல்லாமல், காங்., தலைவர் ராகுலால், ௧௫ நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது. பொதுக்கூட்டங்களில் மட்டுமல்ல, பார்லிமென்டில் கூட, ௧௫ நிமிடங்களுக்கு மேல், ராகுலால் பேச முடியாது. அவர், பிரதமர் மோடியைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியது.இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தமிழகத்தை, ஏதோ ஒரு தனி நாடு போல் சித்தரித்து, ஒரு சில பிரிவினைவாத சக்திகள் உருவாகி வருகின்றன. அத்துடன் அவர்கள், ஆன்மிக அரசியல் நடத்தும் ரஜினி மீது, அவதுாறு கற்பிக்க முயல்கின்றனர். தொடர்ந்து, வெறுப்பு அரசியல் நடத்துகின்றனர். அடுத்து வரும் தேர்தலில், நிச்சயம் ஆன்மிக அரசியல் தான் வெற்றி பெறும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை