Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : ஜன 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
  பேச்சு, பேட்டி, அறிக்கை


'நீங்க வேணுமின்னா, காங்., மாடல் ஆட்சி எதையாவது மாதிரி எடுத்து, அது போல் நாட்டை மாற்றிக் காட்டுறதா சொல்லலாமே... அப்படி ஒண்ணும் இல்லேங்குறீங்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., தலைவர், ராகுல் பேச்சு:
குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி, பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், குஜராத் மக்கள், 'என்ன மாடல் வளர்ச்சி?' என, கேள்வி எழுப்புகின்றனர். இந்த முறை குஜராத்தில், பா.ஜ., பெரும் ஆட்டம் கண்டது. மோடி தலைமையிலான அரசு, ஒரு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே, சண்டையை துாண்டி விடுவதில் மட்டும் தான், ஆர்வம் காட்டுகிறது. இது மட்டும் தான், பிரதமர் மோடியின் உண்மையான பணி.

தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி:
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு சட்ட விரோத சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில், 'தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது' என, முதல்வரால் எப்படி சொல்ல முடிகிறது... தமிழகத்தில் அமைதியும் இல்லை; வளர்ச்சி பாதையும் இன்றி, ஊழல் மட்டுமே ராஜ நடை போடுகிறது. இங்கு, மத்திய, பா.ஜ., அரசின் பினாமி ஆட்சி நடக்கிறது. இந்த அராஜக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும்.


பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில், குட்கா மற்றும் போதை பாக்குக்கு தடை விதிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகியும், அதன் சட்ட விரோத விற்பனை மட்டும், இன்னும் குறையவில்லை. குட்கா விற்பனை ஊழலால், இந்திய அரங்கில், தமிழகத்தின் பெயர் சீர்கெட்டு போயிருக்கிறது. அதன் விற்பனையை, ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் தடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு, சி.பி.ஐ., விசாரணையே ஒரே தீர்வாக இருக்கும்.

புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி பேட்டி:
பா.ஜ., ஆளும் மாநிலங்களில், கவர்னர்கள் ஆய்வு நடத்துவதில்லை. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தான், ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், 'ஊழல் இல்லை' என்ற, அக்கட்சியின் தமிழக தலைவர், தமிழிசையின் கூற்று, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.
த.மா.கா., தலைவர், வாசன் அறிக்கை: 'மாநில சட்டசபைகள் ஆண்டுக்கு, ௯௦ நாட்கள் செயல்பட வேண்டும்' என, இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட, நீதியரசர் கமிட்டி கூறியுள்ளது. ஆனால், தமிழக சட்டசபை ஆண்டுக்கு சராசரியாக, ௩௫ நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. இனி வரும் காலங்களிலாவது சட்டசபை, ௯௦ நாட்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படுவதற்கான கூட்டமாக, சட்டசபை இருக்க வேண்டும்.



தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் பேட்டி:
ஆளும் அரசை, எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்வது, வழக்கமானது தான். எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல், தமிழக அரசு பெரிய நிதி நெருக்கடியில் இல்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, எந்தத் திட்டங்களையும் அரசு நிறுத்தவில்லை. மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுகிறோம்.



Advertisement