Advertisement
கங்கையே சூதகமானால்...
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2014
00:00

வெளிநாட்டவர்களுக்கு பனாரஸ், வட மாநிலத்தவர்களுக்கு வாரணாசி, நமக்கு காசி. நாட்டிலேயே பழமையும்,பெருமையுமிக்க புராதனமான நகரம்.இந்த பழம் பெருமை பேசி,பேசியே இந்த ஊரை நம்மூர் அரசியல்வாதிகள் காசியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி வைத்திருக்கின்றனர்.

ஊருக்குள் காரில் போவது என்பது தேரில் போவது போலத்தான். இதன் அர்த்தம் அவ்வளவு சுகமானது என்பதல்ல அவ்வளவு மெதுவாக போகுமென்பதாகும்.வேகமாக போகவேண்டும் என்றால் காரைவிட்டு இறங்கி இங்கே ஒடும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சைக்கிள் ரிக்ஷாக்களில் ஒன்றில்தான் ஏறிக்கொள்ள வேண்டும்.
காசியில் இறந்தால் முக்தி என்றார்களே தவிர கங்கை கரையில் அரைகுறையாக எரித்து ஆற்றில் இழுத்துவிட்டால்தான் முக்தி என்று எங்கும் சொல்லவில்லை.மின் மயானம் வந்த பிறகும் அரிச்சந்திரன் காலம் போலவே ஆற்றில் வைத்து பிணங்களை எரிப்பதும், அடுத்த பிணம் வந்ததும் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை அரைகுறையாக ஆற்றில் இழுத்து விடவும் எந்த புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
இதில் சிறு வயது பிணங்கள், பாம்பு கடித்து இறந்த பிணங்கள்,சாதுக்களின் பிணங்களை எரிக்கமாட்டார்களாம் அப்படியே கல்லைக்கட்டி ஆற்றுக்குள் போட்டுவிடுவார்களாம்,பாவம் கங்கை எவ்வளவுதான் தாங்குவாள்.
ஊரில் எங்கெல்லாமோ இருந்து கொண்டுவரும் குப்பை கூளங்களை படகில் கொண்டு போய் நடு ஆற்றில் கொட்டுகிறார்கள்,துணிகளை துவை துவை என்று துவைக்கிறார்கள்,மாடுகளை குளிப்பாட்டுகிறார்கள்,இங்கே மனிதர்களைவிட அதிக உரிமையுடன் நடமாடும் மாட்டின் சாணங்களை புனிதமான படிக்கட்டுகளில் எருவாட்டிக்காக தட்டி வைக்கின்றனர்,இவைகளுக்கு நடுவே கங்கையில் மூழ்கி ஹரஹர மகாதேவ சொல்லி பக்தர்கள் குளிக்கின்றனர்.
கங்கைக்கு சிறப்பு சேர்ப்பவை வருண் மற்றும் அசி நதிகளாகும்,இதில் அசி நதி நம்மூர் கூவம் போல உள்ளூர் கழிவுகளை சுமந்துகொண்டு சாக்கடையாகிவிட்டது, இந்த சாக்கடை தண்ணீர் நேரடியாக போய் கங்கையில்தான் கலக்கிறது.ராஜாக்கள் ஆண்ட பராம்பரியமான கட்டிடங்கள் இப்போது அவர்களது வாரிசுகளின் சண்டை வழக்கு காரணமாக கவனிப்பாரின்றி அதன் பெருமையை இழந்து வருகிறது.
கஞ்சாவை டாஸ்மாக் ரேஞ்சுக்கு கூவி கூவி விற்கின்றனர் இதற்கான உறிஞ்சு குழாய்களையும் படித்துறைகளில் பரப்பிவைத்து விற்கின்றனர்.
மங்கை சூதகமானால் கங்கையில் முழ்கலாம், ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது என்ற பழமொழியை எந்த நேரத்தில் சொல்லிவைத்தார்களோ இப்போது அது நிஜமாகிக் கொண்டு இருக்கிறது.உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் கங்கையை எந்த அளவு பாழ்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு போட்டிபோட்டு பாழாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.இதை எல்லாம் சரி செய்ய சரியான ஒருவர் இந்த தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

- எல்.முருகராஜ்

Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.