பக்க வாத்தியம்

பதிவு செய்த நாள் : மே 20, 2018
Advertisement
  பக்க வாத்தியம்

'மல்லி பூக்குற மதுரைஇப்படி இருந்திருக்காதே!'

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது. இதையொட்டி நடந்த, பக்தி சொற்பொழிவில், சொற்பொழிவாளர் சுகிசிவம், 'கணவர் நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருப்பது, மனைவியின் கைகளில் தான் உள்ளது.
'இறைவனை வணங்குகிறோம் என்ற போர்வையில், இயற்கையை அழித்து வருகிறோம். நீலமும், பச்சையும் காப்பாற்றப்பட வேண்டும். நீலம், தண்ணீரையும், பச்சை, மரங்களையும் குறிக்கிறது.
'அதிக மரங்களை நட்டு, மழை வளம் பெருக்கி, நீர்நிலைகள் நிரம்பினால், இயற்கையை காப்பாற்றலாம். விழாவிற்கு வந்த ஒவ்வொருவரும், மீனாட்சி பெயரை குறிப்பிட்டு, ஒரு மரக்கன்று நட்டாலே போதும்; மதுரை பசுமையாகி விடும்' என்றார்.
பக்தர் ஒருவர், 'ஆளாளுக்கு ஒரு மரம் வளர்த்திருந்தால், மல்லி பூக்குற, மதுரை இப்படி காய்ந்து கருவாடா இருந்திருக்காது. இனியாவது, சுகிசிவம் பேச்சை கேட்டு, மரம் வளர்ப்போம்' எனக் கூற, மற்றவர்கள் தலையசைத்து ஆமோதித்தனர்.
'நல்ல கருத்தா நாலுசொல்லுங்கய்யா...!'
திருப்பூர், ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நகைச்சுவை பேச்சாளர், புலவர் ராமலிங்கம் நடுவராக இருந்தார்.
பேராசிரியர் மாது, 'பெண்களுக்கு தான், சமுதாயம் நிறைய வாய்ப்பு வழங்குகிறது. பெண்கள் பூப்பெய்ததும், நன்னீராட்டு விழா, அதன்பின், பல விழாக்களை நடத்தி கொண்டாடுகின்றனர். இளைஞர்களுக்கு மீசை முளைத்ததை, யாராவது கொண்டாடுகின்றனரா?' என்றார்.
குறுக்கிட்ட ராமலிங்கம், 'இந்த கோரிக்கையை எதற்கும், தமிழக அரசிடம் சொல்லி வைக்கலாம்' என்றதும், அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.
தமிழாசிரியர் ஒருவர், 'பட்டிமன்றத்தில், மக்களுக்கு பயன்படக்கூடிய, ஏதாவது நாலு நல்ல கருத்தை பேசுவதை விட்டு, சமுதாயத்தில் நடக்காததை எல்லாம் கூறி, நேரத்தை போக்காதீங்கய்யா' எனக் கூற, அருகில் அமர்ந்திருந்தோர், நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
'எவ்வளவு தந்திரமா பேசுறாரு பாரு...!'

டில்லியில் இருந்து வந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில், நிருபர்களை சந்தித்தார். அப்போது, 'காவிரி விவகாரத்தில் ஆணையம் அமைக்கப்பட்டது சரியா...' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
உடன் அவர், 'காவிரி விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவின் படியும், முயற்சியின் படியும், தற்போது, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஒவ்வொரு, அ.தி.மு.க.,வினரும் நல்ல செய்தியாக பார்க்கிறோம். ஆணையம் அமைத்த பின், நடிகர் கமல் எதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இருக்கிறார் என தெரியவில்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகம் முழுவதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. வாரியத்திற்கு பதிலாக, ஆணையம் அமைக்கப்படும் என்பதை, எவ்வளவு தந்திரமாக, பேசிட்டு போறாரு பாரு' எனக் கூற, மற்ற நிருபர்கள், நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை