'ரூ.20ஐ தள்ளி ஈஸியா ஜெயிக்கப் போறாரு' | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

தினகரனுக்கு, 'அல்வா' துண்டாக போகுது!

பதிவு செய்த நாள் : அக் 15, 2018
Advertisement
தினகரனுக்கு, 'அல்வா' துண்டாக போகுது!

பழங்குடியினர் நலத் துறை சார்பில், இசை, பாடல் போட்டிகளில் பங்கேற்ற, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, சேலம் மாவட்டம், ஆத்துாரில் நடந்தது. இதில் பேசிய, கெங்கவல்லி, எம்.எல்.ஏ., தொகுதி பிரச்னைகளை பட்டியலிட்ட நிலையில், ஆத்துார், எம்.எல்.ஏ., சின்னதம்பி பேச எழுந்தார். கலெக்டர் ரோகிணி, ' நீங்களும், உங்கள் தொகுதி கோரிக்கைகள் குறித்து பேசுங்கள்' என்றார். கலெக்டரின், 'நக்கல்' பேச்சை கண்டுகொள்ளாத, சின்னதம்பி, தொகுதி பிரச்னைகளை அடுக்கடுக்காக எடுத்துரைத்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'கலெக்டர் கேலியாக பேசுவதை கூட புரிந்து கொள்ளாமல், 'எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களை போல், ஆளும் கட்சியினரே குறை கூறினால், தினகரன் போன்றோருக்கு அல்வா துண்டு கிடைத்தது போல் ஆகி விடாதா...' எனக் கூற, மற்ற நிருபர்கள், ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X