Advertisement
அக்கம் பக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2016
00:00

'அய்யய்யோ காங்கிரசா?'

தெலுங்கு நடிகரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சிரஞ்சீவி, கதர்ச்சட்டை அணிந்த அரசியல்வாதிகளை பார்த்தால், தெறித்து ஓடுகிறார். இவர், சினிமாவில் நடித்த போது, பிரிக்கப்படாத ஆந்திர மாநில ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். 'இந்த செல்வாக்கை, அப்படியே, ஓட்டாக மாற்றினால், என்.டி.ராமாராவ் போல், நாமும் முதல்வராகி விடலாம்' என, கணக்கு போட்டார். ஆனால், இவரது அரசியல் கணக்கு, தப்புக் கணக்காகி விட்டது. சொந்த கட்சி எடுபடாததால், அதை கலைத்து விட்டு, காங்கிரசில் ஐக்கியமானார். ஆனால், ஆந்திர மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டபின், எல்லாமே தலைகீழாகி விட்டது. காங்கிரஸ்காரர்கள் என்றாலே, ஆந்திராவில் உள்ளவர்கள் விரோதிகளாக பார்க்கத் துவங்கினர். முதலுக்கே ஆபத்து வந்து விடுமோ என பயந்த சிரஞ்சீவி, படிப்படியாக அரசியலில் இருந்து ஒதுங்கி, மீண்டும், சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். போலீஸ் அதிகாரியாக, தற்போது ஒரு புதுப் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக, கடா மீசை வளர்த்து வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில், கட்சியை வழி நடத்துவதற்கு ஆள் கிடைக்காததால், காங்கிரஸ் மேலிடம், சிரஞ்சீவியை தேடத் துவங்கிஉள்ளது. சிரஞ்சீவியோ, காங்கிரஸ் கட்சியினரை பார்த்தாலே, அலறுகிறார். 'இந்த மீசை வைத்திருப்பது, ரொம்ப வசதியாக இருக்கு. காங்கிரஸ்காரர்களுக்கு நம்மை அடையாளம் தெரியவில்லை. இப்படியே, 'மெயின்டெயின்' பண்ண வேண்டியது தான்' என, தன், கடா மீசையை, செல்லமாக திருகி விடுகிறார்.

'நமக்கு நாமே ஆப்பு'

பா.ஜ., மேலிடத்தின் அதிரடியான அரசியலை பார்த்து, ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், ஆடிப் போயிருக்கின்றன. ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முதல்வருமான, முப்தி முகமது சயீது, சமீபத்தில் இறந்ததை அடுத்து, மீண்டும் அங்கு ஆட்சியமைக்க, எந்த கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுஉள்ளது. தங்களுடன் மீண்டும் கூட்டணி சேர, முப்தி முகமது சயீதின் மகள் மெகபூபா ஆர்வம் காட்டாததால், அவர் மீது, பா.ஜ., தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தான், திடீர் திருப்பமாக, தன் இளைய சகோதரர் தஸ்ஸாதக் முப்தியை, அரசியலுக்குள் இழுத்து விட்டுள்ளார், மெகபூபா. அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தஸ்ஸாதக்கிற்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இதனால், இந்தி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். மெகபூபாவின் முயற்சியால், இப்போது, கட்சி கூட்டங்களிலும், கட்சி பிரமுகர்களின் இல்ல விழாக்களிலும், தலைகாட்ட துவங்கியுள்ளார் தஸ்ஸாதக். இதைப் பார்த்த, பா.ஜ., தலைவர்கள்,'மெகபூபாவை நம்பி, இனி பிரேயோஜனம் இல்லை. அவரது சகோதரருக்கு, பதவி ஆசை காட்டி, வலையில் வீழ்த்தி விட வேண்டியது தான்' என, அதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளனர். இதை, சற்றும் எதிர்பார்க்காத மெகபூபா, 'நமக்கு நாமே, 'ஆப்பு' வைத்து விட்டோமோ...' என, புலம்புகிறார்.

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.