அக் கம் பக் கம் | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

அக் கம் பக் கம்

பதிவு செய்த நாள் : அக் 20, 2018 | கருத்துகள் (1)
Advertisement
அக் கம் பக் கம்

இது என்ன நியாயம்?

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்

லாலு பிரசாத் யாதவின் மகன்கள், தேஜஸ்விக்கும், தேஜ் பிரதாப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால்,

கட்சியே கலகலத்து போய் கிடக்கிறது.

ஊழல் வழக்கில் சிக்கிய,

லாலு பிரசாத் யாதவ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரால், தீவிர

அரசியலில் ஈடுபட முடியாத நிலை

ஏற்பட்டுள்ளது.

தன் இளைய மகனும், பீஹாரின் முன்னாள் துணை முதல்வருமான, தேஜஸ்விக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பை, லாலு அளித்தார்; இது, அவரது மூத்த

மகன், தேஜ் பிரதாப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது.

எவ்வளவோ முட்டி மோதியும், வேலைக்கு ஆகவில்லை. வேறு வழியில்லாமல், 'நான், தேசிய அரசியலுக்கு போய் விடுகிறேன். தம்பி, மாநில அரசியலை பார்த்துக்

கொள்ளட்டும்' என்ற முடிவுக்கு வந்து விட்டார், தேஜ் பிரதாப்.அடுத்தாண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகிறார். ஆனாலும், தம்பி மீதான பகை, உள்ளுக்குள் பற்றி எரியத் தான் செய்கிறது. இதனால், விரக்தி அடைந்துள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகளோ, வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடிக்க தயாராகி வருகின்றனர்.'பெரும்பாலான அரசியல் தலைவர்கள், தங்கள் மூத்த வாரிசுகளைத் தான், கட்சியில் முன்னிலைப்படுத்துகின்றனர். எங்கள் வீட்டில் மட்டும், இளைய மகனுக்கு மகுடம் சூட்டப்படுகிறது; இது, எந்த ஊர் நியாயம்?' என, கொதிப்புடன் கூறுகிறார், தேஜ் பிரதாப்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X