சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பதிவு செய்த நாள் : ஜூன் 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
Advertisement

அறிவியல் ஆயிரம்

சிரிப்பு யோகா

இந்திய டாக்டர் மதன் கடாரியா 1955ல் முதன்முதலில், சிரிப்பு யோகாவை ஓர் இயக்கமாக்கினார். இது குறித்து 'காரணமில்லாத சிரிப்பு' என ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். சிரிக்கும் போது, உடலில் 300 தசைகள் தளர்வு பெறுகின்றன. கோபப்படும் போது, உடலில் 68 தசைகள் இறுக்கமடைகின்றன. நாம் சிரிக்கும் போது, நம் மூக்கில் உள்ள சளியில் இம்முனோ குளோபுலின் என்னும் நோய் எதிர்ப்பு புரதம் அதிகரிக்கிறது. இந்த புரதம் நம் உடலுக்குள் வைரஸ், புற்று நோய் திசுக்கள், சென்று விடாமல் தடுக்கிறது. இதனால் சிரிப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தகவல் சுரங்கம்

யோகா எக்ஸ்பிரஸ்


இந்திய ரயில்வே, யோகாவை சிறப்பிக்கும் வகையில் ரயில் ஒன்றுக்கு 'யோகா எக்ஸ்பிரஸ்' என பெயரிட்டுள்ளது. உத்தரகண்டின் ஹரித்வாரையும், குஜராத்தின் ஆமதாபாத்தையும் இணைக்கும் வகையில் 'ஹரித்வார் மெயில்' ஓடிக்கொண்டிருந்தது. 2015ல் முதல் யோகா தினம் அறிவிக்கப்பட்ட உடன் இந்திய ரயில்வே ஹரித்வார் மெயிலை 'யோகா எக்ஸ்பிரஸ்' என பெயர் மாற்றம் செய்தது. ஹரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் தான் அதிகளவில் யோகா மையங்கள் உள்ளன. ஹரித்வாரும், ரிஷிகேசும் உத்தரகண்டின் இரட்டை நகரங்கள் என சிறப்பிக்கப்படுகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை